போரீஸ் ஜான்சனை விட ரிஷி சுனக்கை அதிகம் விரும்பும் மக்கள்! ஆனால்… கருத்துக்கணிப்பு முடிவுகள்


பிரித்தானிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 47% பிரித்தானிய வாக்காளர்கள் அவரை விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

ரிஷி சுனக்

லிஸ் ட்ரஸ் பதவி விலகலையடுத்து ரிஷி சுனக் கடந்த மாதம் 25ஆம் திகதி நாட்டின் பிரதமர் பதவிக்கு வந்தார்.

ரிஷி பிரதமர் அலுவலகத்தை அலங்கரித்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் அவர் தொடர்பில் Ipsos நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.
இதில் 47% பேர் ரிஷியை விரும்புவதாகவும், 41% பேர் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

போரீஸ் ஜான்சனை விட ரிஷி சுனக்கை அதிகம் விரும்பும் மக்கள்! ஆனால்... கருத்துக்கணிப்பு முடிவுகள் | Uk People Likes Rishisunak Poll Result

currentaffairs

கன்சர்வேட்டிங் கட்சி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் போரிஸ் ஜான்சன் பெற்ற சதவீதத்தை விட இது நிச்சயமாக சிறந்தது என்று Ipsos-ன் அரசியல் ஆராய்ச்சித் தலைவர் கிடியான் ஸ்கின்னர் கூறினார்.

மேலும் கருத்துக்கணிப்பின் மூலம் ரிஷியின் புகழ் அதிகமாக இருப்பது தெரிந்தாலும் கன்சர்வேடிவ் கட்சியின் புகழ் குறைவதை அது தடுக்கவில்லை என கூறியுள்ளார்.

அதன்படி கன்சர்வேடிவ் கட்சியை வெறும் 26% பேர் மட்டுமே விரும்புவதும், 62% பேர் விரும்பவில்லை எனவும் தெரியவந்துள்ளது. இது 15 ஆண்டுகளில் கட்சிக்கு மிக மோசமான எண்ணிக்கையாகும். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.