சிண்டு முடிக்கும் வேலுமணி… ரூட்டு வேற மாதிரி போகுதே… அதிமுக அட்டாக் பாலிடிக்ஸ்!

திமுக அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலணி பகுதியில் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, தைரியமிருந்தால் முதல்வர் ஸ்டாலின் ஆட்சியை கலைத்து விட்டு சட்டமன்ற தேர்தல் வைக்க வேண்டும். அப்படி நடந்தால் எடப்பாடி தான் முதல்வர். இடைத்தேர்தல் எப்போது வைத்தாலும் 200 தொகுதிகளுக்கும் மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்

ஏனெனில் கேட்ட திட்டங்களை எல்லாம் கொடுத்தவர். ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை. தைரியமிருந்தால் ஸ்டாலினை பத்திரிகையாளர்களை சந்திக்க சொல்லுங்கள். எப்படியாவது உதயநிதியை ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும். அதன்பிறகு முதலமைச்சராக்க வேண்டும் என்பது தான் முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஒரே கொள்கை. ஏனெனில் அவரிடம் தான் அதிகாரம் உள்ளது.

கோவை உண்ணாவிரதப் போராட்டம்

அப்படியிருக்கையில் அனைவரும் சேர்ந்து சொல்லி செய்வது போல் பாவனை காண்பித்து வருவதாக தெரிவித்தார். இறுதியாக பழச்சாறு அருந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி, கோவையில் சாலைகளை செப்பனிட வேண்டும். அதிமுக சார்பில் போராட்டம் அறிவித்த பிறகு நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கோவை வந்தார்.

அதிமுக ஆட்சியில் நலத்திட்டங்கள்

அதன்பிறகு சில இடங்களில் பேட்ச் போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் உள்ள சாலைகளை செப்பனிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவமனை, மேட்டுப்பாளையம் மருத்துவமனைகளில் மருந்துவ வசதிகள் இல்லை. உடனடியாக அதை சரிசெய்ய வேண்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

குடும்ப கட்சியாக மாறிய திமுக

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகாவது திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் அத்திக்கடவு அவிநாசி திட்டம், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தல், பாலங்கள், அரசு அலுவலகங்கள் கட்டுதல், ஆறு புதிய கல்லூரிகள், விமான நிலைய விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். அண்ணா தொடங்கிய திமுக இன்று குடும்ப கட்சியாக மாறியுள்ளது.

சிண்டு முடிக்கும் வேலுமணி

கட்சியில் இவரது பங்கு என்ன? துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், கட்சிக்காக உழைத்தவர்கள், அவரது வாரிசுகள் நிறைய பேர் இருக்கும் போது அவர்களுக்கு எல்லாம் அந்த வாய்ப்பில்லையா? திமுக என்றால் இவர்களே தான் வர வேண்டுமா? சட்டமன்றம் உள்ளிட்ட எங்கு பார்த்தாலும் உதயநிதி புராணம் தான் பாடுகிறார்கள் என்று எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.