சென்னை- நங்கநல்லூரில் பிரசித்திப் பெற்ற ஆஞ்சநேயர் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது ஸ்ரீகுருவாயூரப்பன் திருக்கோயில். சிறிய கோயில்தான் என்றாலும், மிகவும் அழகாக, கேரள பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்தைப் பார்க்கும்போதே ஒரு நிம்மதி பரவுகிறது. ஸ்ரீகுருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம் எனும் அமைப்பினரால், சுமார் 40 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். வருடத்தின் முக்கியமான பண்டிகைகளும் விரத காலங்களும் இங்கு முறையே அனுஷ்டிக்கப்பட்டு, அந்த நாட்களில் ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் கோலாகலமாக நடைபெறுகின்றன. திருமண பாக்கியம், பிள்ளை […]