எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..!! 2022-ம் ஆண்டுக்கு விடைகொடுக்கும் நிகழ்வை சுடுகாட்டில் கொண்டாடிய கிளப்..!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் ராயியா கிராமத்தில் ‘முட்டாள் கிளப்’ என்ற பெயரில் கிளப் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, சமூகத்தில் காணப்பட கூடிய போதை பொருள், ஊழல், பயங்கரவாதம், மூட நம்பிக்கை மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் விசயங்களுக்கு எதிராக போராடி வருகிறது.

இந்த சூழலில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் விதமாகவும் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும் சுடுகாட்டில் வினோதாமாக ஒரு கொண்டாட்டத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். பேய் முகமூடி அணிந்தும், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மேற்கூறிய விசயங்களை பதிவு செய்தபடி, கருப்பு உடை அணிந்தும், தகன மேடையில் வைத்து கேக் வெட்டி 2022-ம் ஆண்டுக்கு விடை கொடுக்கும் நிகழ்வை கொண்டாடியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்தி பாடல்களுக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர். சமூக நலன்களுக்கு எதிரான விசயங்களை எதிர்த்து போராடும் நோக்கில் இந்த கொண்டாட்டம் நடத்தப்பட்டது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முட்டாள் கிளப் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “25 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜீந்தர் ரிக்கி என்பவர் இந்த அமைப்பை உருவாக்கினார். முட்டாள் களப் அமைப்பு துவக்க விழா இங்குதான் நடைபெற்றது. இது எங்களின் வெள்ளி விழா ஆண்டு. எனவே அதை சுடுகாட்டில் உற்சாகமாக கொண்டாடியுள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், நாட்டுக்கும், சமுதாயத்துக்கும் கேடு விளைவிக்கும் அனைத்து விஷயங்களுக்கும் முடிவு கட்ட விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சி குறித்து மற்றொரு உறுப்பினர் கூறுகையில், “இங்கே கொண்டாடுவதற்குக் காரணம், அனைவரது கடைசி பயணமும் இங்கு தான் முடிவடையும். நம் நாட்டிற்கும் நமது சமூகத்திற்கும் பெரிதும் தீங்கு விளைவிக்கும் விஷயங்களை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம். மோசமான அரசியல், பயங்கரவாத விவகாரம், போதைப்பொருள் மற்றும் ஊழல் போன்ற பிரச்னைகள் இதில் அடங்கும்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.