போலீசாருக்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக டி.ஜி.பி.சைலேந்திர பாபு காவல் துறையினருக்கு கூறியிருப்பதாவது: *

திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை சம்பவம் தொடர்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனை செய்ய வேண்டும். மாநில எல்லை சுங்கச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு நடத்த வேண்டும். அண்டை மாநில போலீசாருடன் இணைந்து தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்த வேண்டும். கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க, தனியார் விடுதிகளில் சோதனை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த உத்தரவில் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

மேலும்.4 ஏடிஎம் மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம், ஓரே செயல்வடிவத்தை கொண்டுள்ளது. இதனால், ஓரே கும்பலைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.இந்த கொள்ளைக்கு பின்னால் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் இருப்பதாக ஐஜி கண்ணன் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.