வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புனே: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. புனேயில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதுகின்றன. வங்கதேச அணி ‘ரெகுலர்’ கேப்டன் சாகிப் அல் ஹசன் காயம் (தொடைப்பகுதி) காரணமாக விலகினார். சான்டோ அணியை வழிநடத்துகிறார். ‘டாஸ்’ வென்ற இவர் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
ஜடேஜா அசத்தல்
வங்கதேச அணிக்கு தன்ஜித், லிட்டன் தாஸ் ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. தன்ஜித் (51) அரை சதம் அடித்தார். ஜடேஜா ‘சுழலில்’ கேப்டன் சான்டோ (8) சிக்கினார். லிட்டன் அரை சதம் கடந்தார். சிராஜ் ‘வேகத்தில்’ மெஹிதி (3) அவுட்டானார். ஜடேஜா பந்துவீச்சில் லிட்டன் (66) ஆட்டமிழந்தார். முஷ்பிகுர் 38 ரன் எடுத்தார். மகமதுல்லா (46) கைகொடுக்க, வங்கதேச அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 256 ரன் எடுத்தது. முஸ்டபிஜுர் (1), ஷோரிபுல் (7) அவுட்டாகாமல் இருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement