சுதந்திர தின ஒத்திகையின் போது காயமடைந்த பராட்ரூப் வீரர்களை பாதுகாப்பு செயலாளர் பார்வையிட்டார்

76வது சுதந்திர தின ஒத்திகையின் போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த பராட்ரூப் வீரர்களின் உடல்நிலை குறித்து நேரில் விசாரிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன கொழும்பு, தேசிய வைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

ஜெனரல் கமல் குணரத்ன தனது வேலைப்பளுகளுக்கு மத்தியிலும் காலி முகத்திடல் மைதானத்தில் நேற்று காலை இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவத்தில் காயமடைந்த நான்கு வீரர்களின் நலம் குறித்து தனிப்பட்ட முறையில் விசாரிப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பராட்ரூப் வீரர்கள் விரைவாக குணமடைய சிறந்த பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இரு மருத்துவமனைகளின் மருத்துவ அதிகாரிகளையும் இதன்போது சந்தித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலி முகத்திடலில் இடம்பெற்ற சுதந்திர தின ஒத்திகையின் போது தவறி குதித்ததில் ஒரு அதிகாரி உட்பட இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் இரண்டு விமானப்படை வீரர்களும் குறிப்பிட்ட விபத்துக்குள்ளாகி இரு வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.