Ravindra Jadeja News : நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி கடைசி லீக் போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் குரூப் ஏ பிரிவில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலிடத்தைப் பிடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நாளை நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பிளேயர் சைன் டவுல், இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை கடுமையாக திட்டியுள்ளார். அப்படி ஜடேஜா என்ன செய்துவிட்டார், சைமன் டவுல் இவ்வளவு கோபமடைவதற்கு? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியா அணி வெற்றி
பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியின் குரூப் ஏ பிரிவில் கடைசி லீக் போட்டி துபாயில் நடந்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 249 ரன்கள் எடுத்தது. இதன்பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 205 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதனால் குரூப் ஏ பிரிவில் வெற்றி பெற்ற இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. அதேநேரத்தில் இரண்டாம் இடம் பிடித்த நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியுடன் விளையாட உள்ளது.
ரவீந்திர ஜடேஜா மீது விமர்சனம்
இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் பிளேயர் சைமன் டவுல் ரவீந்திர ஜடேஜாவைத் திட்டித் தீர்த்துள்ளார். 33வது ஓவரை வீசிய ரவீந்திர ஜடேஜா அந்த ஓவரில் டாம் லாதமை அவுட்டாக்கினார். எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டை எடுத்த ஜடேஜா பிட்சுக்கு நடுவே சென்று துள்ளிக் குதித்து விக்கெட்டை கொண்டாடினார். இதனைப் பார்த்து தான் நியூசிலாந்து அணியின் முன்னாள் பிளேயர் சைமன் டவுல் கோபமடைந்துள்ளார். எந்தவொரு பிளேயரும் மைதானத்துக்கு நடுவே சென்று இப்படி குதிக்கக்கூடாது. இது விதிமீறல். கண்டிப்பாக கள நடுவர்கள் ஜடேஜாவை எச்சரித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு எச்சரிக்கையும் நடுவர்கள் செய்யவில்லை என சைமன் டவுல் கூறியுள்ளார்.
ஜடேஜா இப்படி செய்தது எனக்கு பெரும் கோபத்தை கொடுத்தது. அதேநேரத்தில் களத்தில் இருந்த நடுவர்கள் பிட்சின் ஆபத்தான இடத்தில் ஒரு பிளேயர் சேதப்படுத்துவதை நடுவர்கள் எப்படி அனுமதித்தார்கள் என தெரியவில்லை. ரவீந்திர ஜடேஜாவை கண்டிக்காமல் நடுவர்கள் இருந்ததை பார்க்கும்போது எனக்கு அதிக கோபம் வந்துவிட்டது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று சைமன் டவுல் ஆவேசமாக கூறியுள்ளார்.