இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL), சிட்டி ஸ்போர்ட் என்ற புதிய எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டா சிட்டி செடான் கார் இந்தியர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இன்று வரை அதிகமான டிமாண்ட்டுடன் விற்பனையாகி வருகிறது. அதே போல ஹோண்டா அமேஸ் (Amaze) மற்றும் ஹோண்டா எலிவேட் (Elevate) கார்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஹோண்டா சிட்டியின் புதிய அம்சமாக உருவாகியுள்ள சிட்டி ஸ்போர்ட் கார் கருப்பு இன்டீரியருடன் ப்ரீமியம் லுக்கில், ஓட்டுனருக்கு தனித்துவமான சிறந்த ஒரு அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ஹோண்டா சிட்டி கார்களை போலவே இந்த சிட்டி ஸ்போர்ட் காரும் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரேடியன்ட் ரெட் மெட்டாலிக், பிளாட்டினம் ஒயிட் பேர்ல் மற்றும் மீடியோராய்டு கிரே மெட்டாலிக் என நான்கு வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இக்கார்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.14.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்டின் சிறப்பம்சங்கள்:
டைனமிக் வெளிப்புற தோற்றம் :
ஸ்போர்ட்டி பிளாக் கிரில் அதற்கு ஏற்ப பிளாக் டிரங்க் லிப் ஸ்பாய்லர், பளபளப்பான கருப்பு ஷார்க் ஃபின் ஆண்டெனா, கருப்பு நிறத்தில் ORVMக்கள் (Outside Rear-View Mirrors) மற்றும் மல்டி-ஸ்போக் ஸ்போர்ட்டி கிரே அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. காரை சுற்றிலும் ‘ஸ்போர்ட்’ (Sport) பேட்ஜ்கள் பொருத்தப்பட்டுள்ளன.
உட்புற அமைப்பு :
கருப்பு நிறத்தில் கார் கேபின், பிரீமியம் லெதர் பிளாக் இருக்கைகள், டோர் இன்செர்ட்கள் மற்றும் ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவை சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த டார்க் தீம் பிளாக் ரூஃப் லைனிங் & பில்லர்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்போர்ட்டி டார்க் ரெட் டேஷ் கார்னிஷ் மற்றும் க்ளாஸி பிளாக் ஏசி வென்ட்கள் ஸ்போர்ட்டி நுணுக்கங்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மேலும் ஒளிரூட்ட கூடிய வகையில் கேபினை சுற்றிலும் 7 நிறங்களில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
எனர்ஜெடிக் டிரைவ்:
ஹோண்டாவின் சுத்திகரிக்கப்பட்ட 1.5L i-VTEC பெட்ரோல் எஞ்சின் (எத்தனால் 20% இணக்கமானது ) மூலம் CVT உடன் இணைந்து 121PS பவர், 145NM டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்த கூடியது. இந்த என்ஜினுடன் கூடிய Paddle Shift மூலம் அதிகபட்சமாக 18.4 கிமீ எரிபொருள் மைலேஜை வழங்கும் என்கிறது ஹோண்டா நிறுவனம்.
மேலும் ஹோண்டா SENSING (ADAS) ஸ்மார்ட் மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் பற்றி:
இந்தியாவில் பிரீமியம் கார்களின் முன்னணி உற்பத்தியாளரான ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) டிசம்பர் 1995 இல் நிறுவப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களுக்கு பயணிகள் கார் மாதிரிகள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்கும் வழங்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் நிறுவப்பட்டது. HCIL இன் கார்ப்பரேட் அலுவலகம் உத்திரப்பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது மற்றும் அதன் அதிநவீன உற்பத்தி வசதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் உள்ள தபுகாராவில் அமைந்துள்ளது.
ஹோண்டாவின் மாடல்கள் நீடித்து உழைக்கும் தன்மை, நம்பகத்தன்மை, பாதுகாப்பு மற்றும் எரிபொருள் திறன், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப சிறப்பம்சங்களை கொண்டவை. இந்தியா முழுவதும் ஹோண்டாவின் உற்பத்தி மற்றும் விநியோகம் வலுவாக செயல்பட்டு வருகிறது.
புதிய கார் வணிகத்தை தவிர்த்து ஹோண்டா ஆட்டோ டெரஸ் மூலம் பயன்படுத்திய கார்களை வாங்க மற்றும் விற்பனை செய்வதற்கும் ஒரு தீர்வை வழங்குகிறது.