இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் இன்று நான்காவது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் இஷான் கிசான்க்கு பதிலாக அர்ஸ்தீப் சிங் களமிறங்கினார். ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் களமிறங்கவில்லை. இந்திய அணி ஐந்து பௌலர்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது.
Add Zee News as a Preferred Source
நியூசிலாந்து பேட்டிங்
கடந்த போட்டிகளில் செய்த தவறை திருத்திக் கொண்ட நியூசிலாந்த அணி பவர் பிளேயில் அதிரடி காட்டியது. டெவான் கான்வே மற்றும் டிம் சீஃபர்ட் சிறப்பாக விளையாடினர். முதல் விக்கெட்க்கு இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. ஒன்பதாவது ஓவரில் தான் இந்திய அணிக்கு முதல் விக்கெட் கிடைத்தது. அதன் பிறகு ரன் ரேட் சற்று கட்டுப்பாட்டிற்கு வந்தாலும் கிளென் பிலிப்ஸ் மற்றும் டேரி மிச்சல் அதிரடியாக விளையாடினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 215 ரன்கள் அடித்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் மற்றும் அர்ஸ்தீப் சிங் இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்திய அணி பேட்டிங்
கடந்த சில போட்டிகளை ஒப்பிடும்போது இந்திய அணிக்கு இது எளிதான இலக்காக தான் இருந்தது. ஆனால் முதல் பந்தியிலேயே அபிஷேக் சர்மா ஆட்டமிழந்து வெளியேறினார். பவர் பிளே முடிவதற்குள் கேப்டன் சூர்யா குமார் யாதவும் அவுட் ஆகி வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பிறகு ஹர்திக் பாண்டியாவும் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழக்க இந்திய அணி 63 ரன்களுக்கு நான்கு விக்கெட்களை இழந்தது. சிறிது நேரம் போராடிய ரிங்கு சிங்கும் 39 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடையப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் சிவம் துபே அதிரடி காட்டினார். வெறும் 23 பந்துகளில் 7 சிக்ஸர்கள் உட்பட 65 ரன்கள் அடித்தார். இஸ் சோதியின் ஒரே ஓவரில் 29 ரன்கள் விளாசிய சிவம் துபே எதிர் பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அங்கிருந்து போட்டி அப்படியே மாறியது. 18.4 ஓவர் முடிவில் இந்திய அணி 10 விக்கெட்டையும் இழந்து 165 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது. கடைசி மற்றும் இறுதிப் போட்டி வரும் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
About the Author
RK Spark