Sanju Samson Viral Video: நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரை விளையாடும் முன் இந்திய அணிக்கு எதிராக 3 ஓடிஐ மற்றும் 5 டி20ஐ போட்டிகளை நியூசிலாந்து அணி விளையாட இருந்தது.
Add Zee News as a Preferred Source
அந்த வகையில், நியூசிலாந்து அணி ஓடிஐ தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதைத் தொடர்ந்து, டி20ஐ தொடர் பரபரப்பாக நடைபெற்றது. இந்திய அணி முதல் மூன்று போட்டிகளையும் தொடர்ச்சியாக வென்று தொடரை கைப்பற்றியது. இந்தச் சூழலில், நேற்று (ஜனவரி 28) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்து அணிக்கு இது ஆறுதல் அளிக்கக் கூடிய வெற்றியாகும்.
மேலும், இந்திய அணிக்கு இப்போட்டி எச்சரிக்கை மணி ஒன்றையும் அடித்திருக்கிறது. அதாவது, அபிஷேக் சர்மா, சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் மட்டுமின்றி டாப் ஆர்டரில் மற்றும் மிடில் ஆர்டரில் இருந்து ரன்கள் தேவை என்பது தெரியவருகிறது. கடுமையாக போராடி ஓபனிங் ஸ்பாட்டை சஞ்சு சாம்சன் பெற்ற நிலையில், கடந்த நான்கு போட்டிகளாக அவர் பெரியளவில் சொதப்பி வருகிறார். அவர் நான்கு போட்டிகளிலும் முறையில் 10, 6, 0, 24 என 40 ரன்களை மட்டுமே அடித்திருக்கிறார்.
அபிஷேக் சர்மா அதிரடி காட்டியபோதும், கடந்த போட்டியில் அவர் சோபிக்கத் தவறியபோதும் சஞ்சு சாம்சன் ரன்களை அடிக்க தவறினார். மேலும், இஷான் கிஷன் கடந்த சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் சஞ்சு சாம்சனின் ஓபனிங் ஸ்பாட் மீண்டும் கேள்விக்குறியாகி உள்ளது. திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வரும்பட்சத்தில் சஞ்சு சாம்சன் அல்லது இஷான் கிஷன் இருவரில் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும். தற்சமயம் வரை காற்று இஷான் கிஷன் பக்கமே வீசுகிறது.
இந்தச் சூழலில், வரும் ஜனவரி 31ஆம் தேதி திருவனந்தபுரத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி மற்றும் 5வது டி20ஐ போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு பின் இந்தியா – தென்னாப்பிரிக்கா வரும் பிப். 4ஆம் தேதி டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் மோத இருந்தாலும், இதுவே இரு அணிகளுக்கும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் உள்ள கடைசி சர்வதேச போட்டியாகும். சஞ்சு சாம்சனும் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் தனது இடத்தை நிரந்தரமாக்க கிடைக்கும் கடைசி வாய்ப்பு என்றும் சொல்லலாம்.
இந்தச் சூழலில், இந்திய அணி இன்று திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது திருவனந்தபுரம் விமான நிலையத்தில் வீரர்களின் வருகையையொட்டி பொதுமக்கள் அதிகமானோர் கூடினார்கள். மேலும், இது சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் மட்டுமின்றி சொந்த ஊர் என்பதால் அவரை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் காத்திருந்தனர். சஞ்சு சாம்சனின் ரசிக பட்டாளத்தை நான் சொல்லி இங்கு தெரிய தேவையில்லை.
CH#WhistlePodu
Sanju Samson FP pic.twitter.com/TtenKLSDj1
— Chennai Super Kings (@ChennaiIPL) January 29, 2026
ரசிகர்கள் அனைவரும் சஞ்சு சாம்சனை நோக்கி ‘சேட்டா… சேட்டா…’ என குரல் எழுப்பி வந்தனர். அப்போது சூர்யகுமார் யாதவ் நகைச்சுவையாக, சஞ்சு சாம்சனுக்கு வழிவிடும்படி காண்பித்துக்கொண்டே வந்தார். மேலும், சேட்டாவை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஆங்கிலத்தில் பேசி சஞ்சு சாம்சனிடம் விளையாட்டுக் காட்டினார். சஞ்சு சாம்சனும் மகிழ்ச்சியுடன் சென்றார். இவற்றை தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் பார்க்க முடிந்தது. தற்போது கடினமான சூழலில் இருக்கும் சஞ்சு சாம்சன் தனது மக்களுக்கு மத்தியில் சோபித்தார் என்றால் நிச்சயம் 2026 டி20 உலகக் கோப்பையில இவருக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் உதவும்.
மேலும் படிக்க | இந்திய அணி இதில் கவனமாக இருக்க வேண்டும்.. இல்லைனா கோப்பை கிடையாது – முழு விவரம்
மேலும் படிக்க | ரீ-என்ட்ரி கொடுக்கும் இந்த 5 வீரர்கள்… காயம் டூ டி20 உலகக் கோப்பை வரை!
About the Author

Sudharsan G
I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.
…Read More