டெல்லி: தாழம்பூர் வீடுகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை மறுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம். தாழம்பூரில் 6ஆண்டுகளாக நீடித்து வந்த தடையை நீக்கியது. இதனால் பல ஆண்டுகளாக அடிப்படை வசதியின்றி வசித்து வந்த சுமார் 2,000 குடும்பங்களின் கனவு நனவாகி உள்ளது. இது அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், தாழம்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிலப் பரிவர்த்தனைகள் தொடர்பான சிறப்பு விடுப்பு மனுக்களின் தொகுப்பை, இந்திய உச்ச நீதிமன்றம் விசாரித்து முடித்துவைத்தது; […]