மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏராளமான குழுந்தைகள், சிறுவர்கள் சிவபெருமான், மீனாட்சியம்மன், கருப்பசாமி வேடமிட்டபடி திருத்தேரின் முன்பாக ஊர்வலமாக சென்றனர். மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று (ஏப்ரல் 28) விமரிசையாக முடிந்த நிலையில், கோவிலைச் சுற்றி உள்ள நான்கு மாசி வீதிகளிலும் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மகக்ள் கலந்துகொண்டுள்ளதால், மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்கதர்கள் விண்ணதிர முழங்க விதவிதமான கயிலாய வாத்தியங்கள் – […]