பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை..!!

நெல்லை: பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி மீது புகார் கூறிய 5 பேரிடம் நெல்லை சார் ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். செல்லப்பா, அந்தோணி, வேதநாராயணன், மாரியப்பன், இசக்கிமுத்து ஆகிய 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று 6 பேர் விளக்கம் அளித்த நிலையில் இன்று 5 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர். இன்று நெல்லையில் ஆஜராகியுள்ள 5 பேரும் நேற்று, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் கூறியிருந்தனர்.

சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..!!

சென்னை: சென்னை கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் திங்களன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் நாளை மறுநாள் நண்பகல் 12 மணிக்கு சென்னையில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீது புகார் எழுந்தது. பாலியல் புகார் தொடர்பாக தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேற்று விசாரணை நடத்தினார். விசாரணையின்போது கலாஷேத்ரா கல்லூரி இயக்குநர், துணை இயக்குநர் விடுப்பில் இருந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு; ஏப்.12ல் விசாரணை..!!

டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக அந்த அமைப்பின் தொண்டர் ராகுல்காந்தி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ராகுல் மீதான அவதூறு வழக்கு ஏப்ரல் 12ல் விசாரணைக்கு வர உள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளது.

வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: வாடகைத் தாய் தொடர்பான சான்றிதழ்களை பெற மாவட்ட வாரியாக மருத்துவ வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. காலச் சூழல் காரணமாக செயற்கை கருத்தரிப்பு மையங்கள் காளான்களாக உருவெடுத்துள்ளது. வாடகைத் தாய் சட்டங்கள் பற்றி நீதித்துறை அதிகாரிகள் முழுமையாக அறிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்த வேண்டும். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற அரசின் மருத்துவ வாரிய சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி நெல்லையைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்ற … Read more

நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோவிற்கு 18.39 விலை நிர்ணயம்: தேயிலை வாரியம் தகவல்

நீலகிரி: நீலகிரியில் விளையும் பச்சை தேயிலைக்கு கிலோவிற்கு 18.39 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தேயிலை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

சித்தூரில் பாஜக அலுவலகம் திறப்பு விழா பிரதமரின் மக்கள் நலத்திட்டங்களால் ஆந்திராவில் வளர்ந்து வரும் பாஜக-மாநில தலைவர் பேச்சு

சித்தூர் : பிரதமரின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களால், ஆந்திர மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என சித்தூரில் நடந்த விழாவில் மாநில தலைவர் சோமு வீரராஜூ பேசினார்.சித்தூர் மிட்டூர் பகுதியில் புதிதாக கட்டியுள்ள பாஜக அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா காணொலி காட்சி மூலம்  அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, மீட்டூரில் நடந்த விழாவில் பாஜக மாநில தலைவர் சோமு வீரராஜூ தலைமை தாங்கி பேசியதாவது: ஆந்திர மாநிலத்தில் பாஜக … Read more

உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது..!!

நீலகிரி: உதகையில் குதிரை பந்தயத்துடன் 136-வது கோடை சீசன் தொடங்கியது. இன்று தொடங்கி மே 28-ம் தேதி வரை நடைபெறும் குதிரை பந்தயத்தில் 550 பந்தய குதிரைகள் பங்கேற்கின்றன. முக்கிய பந்தயமான 1,000 கின்னீஸ் ஏப்.14-ம் தேதியும், 2,000 கின்னீஸ் ஏப்.15-ம் தேதியும் நடைபெறுகிறது. நீலகிரி தங்கக் கோப்பைக்கான பந்தயம் மே 21-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பந்தயங்களை காண சிறுவர்கள், பெண்கள் என அனைவருக்கும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்..!!

சென்னை: 15 ஆண்டுகள் பழமையான அரசு வாகனங்களை அழிக்க அவகாசம் கோரி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது. அரசு வாகனங்களை அழிப்பது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. 15 ஆண்டுகள் ஆன அரசு வாகனங்கள், பொதுத்துறை வாகனங்களை அழிக்க அரசு அவகாசம் கேட்டுள்ளது.

ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுவர் முதல்வர் ஜெகன்மோகன்-திருப்பதி எம்எல்ஏ பேச்சு

திருப்பதி : ஏழை மக்களின் மேம்பாட்டிற்காக பாடுபடுபவர் முதல்வர் ஜெகன்மோகன் என திருப்பதி எம்எல்ஏ கருணாகர  பேசினார்.திருப்பதி இந்திரா மைதானத்தில், ஒய்எஸ்ஆர் ஆசரா திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு 3வது தவணையாக காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், எம்எல்ஏ  கருணாகர , மாநகராட்சி ஆணையர் அனுபமா அஞ்சலி, துணை மேயர் முத்ரா நாராயணா, கார்ப்பரேட்டர்கள் மற்றும் மகளிர் சுயஉதவி குழுவினர் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், எம்எல்ஏ கருணாகர  மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ₹8.12 … Read more

விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் பலி..!!

விழுப்புரம்: விழுப்புரம் அருகே விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி லாரி ஓட்டுநர் ராமதாஸ் (53) உயிரிழந்தார். மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ராமதாஸ் உடலை மீட்டு வளவனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.