திருச்சியில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை

திருச்சி: திருச்சி மாநகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 68 கி.மீ தொலைவுக்கு 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.சமயபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம், சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர் வழியாக வயலூர் வரை 18.7 கி.மீ தொலைவுக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படும். துவாக்குடியிலிருந்து திருவெறும்பூர், பால்பண்ணை, மத்திய பேருந்து நிலையம் வழியாக பஞ்சப்பூர் வரை 26 கி.மீ தொலைவுக்கு இரண்டாவது வழித்தடம் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜங்சனிலிருந்து பஞ்சப்பூர், ஏர்போர்ட், புதுக்கோட்டை சாலை வழியாக மாத்தூர் … Read more

224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கிறது கர்நாடக சட்டசபைக்கு மே 10ல் தேர்தல்: மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக  தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 13ம் தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் தற்போது முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜ அரசு பதவியில் உள்ளது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே 24ம் தேதியுடன் முடிகிறது. இதனால், ஆளும் பாஜ மட்டுமில்லாமல், காங்கிரஸ் மற்றும் மஜத உள்ளிட்ட … Read more

10ம் வகுப்பு செய்முறை தேர்வு எழுத கூடுதல் கால அவகாசம்: தேர்வுகள் இயக்குநர் உத்தரவு

சேலம்: தமிழகத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, செய்முறை தேர்வு நடத்த நாளை (31ம்தேதி) வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குகிறது. இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்வுகளை, அந்தந்த பள்ளிகளில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நடத்திக் கொள்ள அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த இரு வாரமாக அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,916 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,828,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,603,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,547,123 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,977 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாஜ ஆட்சி முடிவுற்றால் தான் ஊழல் முடிவுக்கு வரும்: டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆவேசம்

புதுடெல்லி: மத்திய புலனாய்வு அமைப்பும், அமலாக்கத்துறையும் ஊழல்வாதிகளை ஒரே கட்சிக்குள் கொண்டு வந்துள்ளது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.  கெஜ்ரிவால் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர பாஜ முயற்சி செய்தது. ஆனால், அதற்கு போதிய ஆதரவு இல்லாததால் அந்த முடிவை பாஜ கைவிட்டது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியாததால், என் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜ வாபஸ் பெற்றுள்ளது. எந்த … Read more

மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளது: முத்தரசன் குற்றச்சாட்டு

மயிலாடுதுறை: மோடி ஆட்சியில் 23 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டுள்ளதாக முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: ராகுல்காந்தியை கைது செய்து சிறையில் அடைக்ககூடிய எழுதப்படாத ஒரு சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி அமல்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் அதானி குறித்து பேசியதால்தான் இதுபோன்ற  நடவடிக்கையில் மோடி அரசு ஈடுபட்டுள்ளது. பிரதமர் மோடி, அதானிக்கு ஏஜென்ட் ஆக செயல்படுகிறார். இந்திய நாட்டையே அதானிக்கு அடகு வைத்து விட்டார் மோடி. ஒரு நபரை … Read more

மார்ச்-30: இன்று பெட்ரோல் ரூ.102.63, டீசல் ரூ.94.24 க்கு விற்பனை

சென்னை:  சென்னையில் 313-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

போன் பே, பேடிஎம், அமேசான் பே போன்ற வாலட்டுகளில் இருந்து ரூ. 2 ஆயிரத்திற்கும் மேல் யுபிஐ மூலம் பணம் செலுத்தினால் 1.1% கட்டணம்: நாளை மறுநாள் முதல் அமலுக்கு வருகிறது

* வங்கி டூ வங்கிக்கு மட்டும் இலவசம் தொடரும் புதுடெல்லி: போன் பே, பேடிஎம், அமேசான் பே உள்ளிட்ட டிஜிட்டல் வாலட்டுகளில் இருந்து  ரூ.2 ஆயிரத்திற்கும் மேல் அதிக தொகைகளை யு.பி.ஐ செயலிகள் மூலம் அனுப்ப, 1.1 சதவீதம் வரை கட்டணம் விதிக்கப்பட உள்ளதாக தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் அறிவித்துள்ளது.  நாடு முழுவதும் தற்போது யுபிஐ மூலம்,   கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை நடைபெற்று வருகிறது. பெரு வணிக … Read more

அரசிடம் உதவி கேட்டவரை ஒருமையில் பேசிய தாட்கோ பெண் அதிகாரி ‘மேய்க்கிறது மாடு… இதுக்கு டிகிரி சர்டிபிகேட் வச்சிருக்கியா நீ..’: நேரில் அழைத்து விளக்கம் கேட்டார் கலெக்டர்

விழுப்புரம்: அரசிடம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்த இளைஞரை, ‘மேய்க்கிறது மாடு இதுக்கு டிகிரி சர்டிபிகேட் எல்லாம்  வச்சிருக்கியா நீ’, என்று பேசிய தாட்கோ பெண் அதிகாரியிடம் கலெக்டர் விளக்கம் கேட்டார். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாவந்தூர் கிராமத்தைச்  சேர்ந்த பட்டதாரி இளைஞரான சிவனேசன், மாட்டு பண்ணை அமைக்க கடனுதவி  கேட்டு, கடந்த 3 மாதத்துக்கு முன், விழுப்புரம் மாவட்ட தாட்கோ  அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்கான நேர்காணல் அண்மையில்  நடைபெற்றது.  இதற்காக  அவர் தனது நிலத்தில் … Read more

ஜனநாயகத்தின் தாய் இந்தியா: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘‘இந்தியா ஜனநாயகத்தின் தாய்” என்று பிரதமர் மோடி ஜனநாயக நாடுகளின் உச்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.  ஜனநாயக நாடுகளின் 2023ம் ஆண்டுக்கான உச்சிமாநாடு வீடியோகான்பரன்சிங்கில் நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியதாவது: இந்திய அரசின் ஒவ்வொரு முயற்சியும் இந்திய குடிமக்களின் கூட்டு முயற்சியினால் இயக்கப்படுகின்றது. பல உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கின்றது. இதுவே  ஜனநாயகத்திற்கான மற்றும் உலகத்திற்கான சிறந்த விளம்பரமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more