பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சி: ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர்

கேடிசி நகர்: பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரியில் பெண்கள் மீதான கொடுமைகள் குறித்த நிலை காட்சிகளை ‘தத்ரூபமாக’ மாணவிகள் நடித்துக் காட்டினர். கணவரின் குடிப்பழக்கத்தால் குடும்பப் பெண்கள் படும் அவதிகள், ஆண்களின் அலட்சியத்தால் ஏற்படும் சாலை விபத்துகள், சூதாட்டத்தின் விளைவுகள், பஸ் நிலையங்களிலும், வேலை பார்க்கும் இடங்களிலும் பெண்கள் அன்றாடம் சந்திக்கும் சவால்கள், குழந்தை திருமணம் என பிரச்னைகளையும், அதற்கான தீர்வுகளையும் பாளை இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் நிலை காட்சிகளாக ‘தத்ரூபமாக’ நடித்துக் காட்டினர். இந்த … Read more

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் வலியுறுத்தல்

கோவை: கோவை இந்து முன்னணி நிர்வாகி அயோத்தி ரவி வீட்டில் இருந்து 2 துப்பாகிகள், 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சதித் திட்டமா என்று என தீவிர விசாரணை நடத்த SDPI மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து

டெல்லி: வரும் மே மாதம் நடைபெறவுள்ள கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றும் என C-Voter கருத்துக்கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ்115-127, பாஜக 68-80, ஜே.டி.எஸ். 23-25, பிற கட்சிகள் 0-2 தொகுதிகளை வெல்லும் என கருத்து கணிப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான ஆட்சி மோசமாக உள்ளதாக 50% பேர் கருத்து தெரிவித்துள்ளனர்

மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

மதுரை: மதுரை தெப்பக்குளம் காவல் நிலையத்தை காலி செய்து தரக்கோரிய வழக்கில் காவல் ஆணையர் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் 115 ஆண்டுகள் பழமையானது என்பதால் மனிதர்கள் வாழ தகுதியற்றது என மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். புதிய இடம் மாற்றம் செய்யும் வரை கால அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலைய கட்டடம் இடிந்து விபத்து ஏற்பட்டாலோ, உயிரிழப்பு நிகழ்ந்தாலோ காவல்துறை பொறுப்பு ஏற்க வேண்டும். மதுரைக காவல் … Read more

ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு

சென்னை: ஏ.ஆர். மால் நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆல்வின், ஆரோன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 10-க்கும் மேற்பட்ட புகார்கள் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரகலாத் ஜோஷி நம்பிக்கை..!

டெல்லி: கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக  மீண்டும் ஆட்சியமைக்கும் என நாடாளுமன்ற  விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 224 உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சி கடந்த சில தினங்களுக்கு முன் முதற்கட்டமாக 124 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை அறிவித்தது. அதேபோல் மதச்சார்பற்ற ஜனதா தளம் … Read more

கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும்: தொல்லியல்துறை அறிவிப்பு

சிவகங்கை: கீழடியில் ஏப்ரல் முதல் வாரத்தில் 9வது கட்ட அகழாய்வு தொடங்கும் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. 8-ம் கட்ட அகழாய்வில் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கிடைத்தன. தொல்லியல் துறை ஆணையர்(பொ) சிவானந்தம், இணை இயக்குநர் (கீழடி பிரிவு) ரமேஷ் அகழாய்வில் ஈடுபடுகின்றனர்.

கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256 கோடி மகளிர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: கட்டணமில்லா பேருந்துகளில் 20 மாதங்களில் 256.66 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயணம் செய்துள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். கட்டணமில்லா பேருந்து திட்டத்தின் மூலம் மகளிருக்கு ரூ.200 முதல் ரூ.1,500 வரை சேமிக்கப்படுகிறது. கட்டணமில்லா பேருந்து திட்டத்துக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்காக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், அவசரகால பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் கூறினார்.

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை

டெல்லி: வந்தே பாரத் ரயில் மீது கல் வீசினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவின் அதிவேக ரயில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயண நேரத்தைக் குறைப்பதன் மூலம் பயணிகளுக்கு பயணத்தை எளிதாக்குகிறது. ஒன்றிய அரசு பல இடங்களில் இந்த வந்தே பாரத் இயக்கத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.இந்நிலையில், வந்தே பாரத் ரயில்கள் மீது கல்லெறிந்தால் 5 … Read more

ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பொதுப்பணியாளர்களை மையப்படுத்திய ஆள்சேர்ப்பு வாரியத்தை அமைக்க கால்நடை பராமரிப்புத்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கால்நடை, மீன்வளம், பால் வளத்துறையின் அனைத்து கூட்டுறவுச் சங்கங்களை மையப்படுத்தி ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்க ஆணை. ஆள்சேர்ப்பு வாரியம் அமைக்கப்படும் வரை அந்த கூட்டுறவு சங்கத்தால் யாரும் நியமிக்கப்படக் கூடாது. ஆவின் நிறுவன பணியாளர்கள் நியமனத்தை ரத்து செய்த ஆவின் நிர்வாகத்தின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.