அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவி; ஜோ பைடன் பரிந்துரை

வாஷிங்டன்,  அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீடிக்கிறது. இப்போது 2 முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டக்கல், சம வேலை வாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட வினய் சிங், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமை நிதி அதிகாரி ஆகிறார். கல்பனா கோட்டக்கல் பன்முகத்தன்மை கொண்டவர், சட்ட நிபுணர் ஆவார். மனித உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் … Read more

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன. இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து … Read more

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர்குல் நியமனம்

லாகூர், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமர்குல் 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏப்ரல் 4-ந் தேதி அணியில் இணைவார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான உடன்படிக்கையின்படி, உமர்குல் அணியுடன் மூன்று வார … Read more

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி … Read more

கவர்னர்கள் முடிவெடுக்க காலக்கெடு: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தனி உறுப்பினர் மசோதா தாக்கல்

புதுடெல்லி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்படுவதாகவும், ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால், அதனை பயன்படுத்தி கவர்னர்கள் காலதாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.  இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்துவதற்கும், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும், தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் : ராகுல் சாகர் அசத்தல் பந்துவீச்சு ; கொல்கத்தா அணி தடுமாற்றம்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் … Read more

ரஷியா-உக்ரைன் இடையே காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை தொடங்கியது

லிவிவ், ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது காணொலி காட்சி வாயிலாக மீண்டும் தொடங்கியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடங்கியதை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியின் அலுவலகமும் உறுதிபடுத்தியுள்ளது. ரஷிய தூதுக்குழுவின் தலைவர் விளாடிமிர் மெடின்ஸ்கி பேச்சுவார்த்தையின் படத்தை வெளியிட்டார்.  ரஷியா மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகளுக்கு இடையே துருக்கியில் நடந்த கடைசி சந்திப்பிற்கு பின் மூன்று நாட்கள் கழித்து இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையின்போது, ரஷிய தரப்பில், “கிரிமியா மற்றும் டான்பாஸ் பற்றிய ரஷியாவின் நிலைப்பாடுகள் … Read more

இதுவரை இல்லாத அளவு: மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக உயர்வு

புதுடெல்லி, நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் ஏறத்தாழ  தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலை  நடவடிக்கைகளும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவுக்கு உற்ப்த்தியை அதிகரித்துள்ளன. இதானால், ஏற்றுமதி, இறக்குமதியும் இயல்பான அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது.   கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூலான நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. இந்த நிலையில், மார்ச் மாத வசூல் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : வாணவேடிக்கை காட்டிய ரஸல் ; பஞ்சாப் அணியை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும்  8-வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி பஞ்சாப் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய அணியின் கேப்டன் … Read more

வடகொரிய ஏவுகணை அமைப்புடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத்தடை

வாஷிங்டன், வடகொரியா அவ்வப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், வடகொரியாவின் ஏவுகணை அமைப்புடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வட கொரிய ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நான்கு துணை நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறி, வட கொரியாவின் பேரழிவு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களை ஆதரிப்பதற்காக ஐந்து நிறுவனங்களை குறிவைத்துள்ளதாக அமெரிக்க கருவூலம் தெரிவித்துள்ளது.