தெண்டுல்கர் சாதனையை சமன் செய்த விராட் கோலி

ராய்ப்பூர், இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 358 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் விராட் கோலி, ருதுராஜ் கெயிக்வாட் சதமடித்து அசத்தினர். பின்னர் 359 ரன் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 49.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 362 … Read more

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 3 போலீசார் பலி

லாகூர், பாகிஸ்தானில் பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துவா மாகாணத்தில் தெஹ்ரிக் இ தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான்களின் கிளை அமைப்பாகும். இந்த பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் நகர் அருகே சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது. … Read more

அரியானா: கார், பைக் மீது மோதிய லாரி – 4 பேர் பலி

சண்டிகர், அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் இருந்து டெல்லிக்கு இன்று லாரி சென்றுகொண்டிருந்தது. கர்னல் மாவட்டத்தின் கவ்ரண்டா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் எதிரே வந்த கார், பைக், பஸ் மீது மோதியது. இந்த கோர விபத்தில் கார், பைக்கில் சென்ற 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், லாரி டிரைவர் உள்பட 5க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு … Read more

இந்திய ஆக்கி அணி பயிற்சியாளர் ராஜினாமா செய்ய காரணம் என்ன ? பரபரப்பு தகவல்

புதுடெல்லி, இந்திய பெண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக 2024-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இருந்து வந்த ஹரேந்திர சிங் கடந்த திங்கட்கிழமை தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் ஹரேந்திர சிங் சர்வாதிகார போக்குடன் நடந்து கொள்வதாகவும், அவரது பயிற்சி முறை தற்போதைய காலத்துக்கு உகந்ததாக இல்லை என்று வீராங்கனைகள் இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு அளித்த புகாரை தொடர்ந்து மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் உத்தரவின் … Read more

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்; 5.5 கோடி பேர் பாதிப்பு

வாஷிங்டன், அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3-வது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது. இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி … Read more

சத்தீஷ்கார் என்கவுன்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை – பாதுகாப்புப்படையினர் 2 பேர் வீர மரணம்

ராய்ப்பூர், சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதையடுத்து, மாவோயிஸ்டுகள், நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டோ, சரண் அடைந்தோ வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை … Read more

ஆஷஸ் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை தடுக்குமா இங்கிலாந்து?

பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பெர்த்தில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் இன்று பகல்-இரவு போட்டியாக (பிங்க் பந்து டெஸ்ட்) தொடங்குகிறது. இத்தகைய போட்டிக்கு என்று பிரத்யேகமாக பயன்படுத்தப்படும் … Read more

பாகிஸ்தானில் 200 சதவீதம் எச்.ஐ.வி அதிகரிப்பு

இஸ்லாமாபாத், உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ள தகவலின்படி, கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் மிக வேகமாக வளர்ந்து வரும் எச்.ஐ.வி. தொற்றுநோய்களில் ஒன்றை பாகிஸ்தான் தற்போது எதிர்கொண்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், புதிய எச்.ஐ.வி. தொற்றுகளின் எண்ணிக்கை 200 சதவீதம் அதிகரித்து, 2010-ல் 16,000 ஆக இருந்தது, 2024-ல் 48,000 ஆக உயர்ந்துள்ளது. பாதுகாப்பற்ற ஊசி நடைமுறைகள், இரத்த மேலாண்மை குறைபாடுகள், மற்றும் பாதுகாப்பற்ற பாலியல் உறவு முறை போன்ற காரணங்களால் இந்த அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read more

மத்திய அரசு உத்தரவை ஏற்று… காங்கிரஸ் ஆளும் தெலுங்கானாவில் லோக் பவன் என உடனடியாக பெயர் மாற்றம்

ஐதராபாத், நாட்டின் மாநிலங்களில் மத்திய அரசு பிரதிநிதியாக செயல்படும் கவர்னர்கள் தங்க கூடிய கவர்னர் மாளிகை, ராஜ் பவன் என்று அழைக்கப்படுகிறது. மாநிலங்களில் கவர்னர்களும், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்களும் பதவி வகித்து வருகின்றனர். இந்நிலையில் ராஜ் பவன் பெயரை, லோக் பவன் என மாற்றம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் கவர்னர்களின் மாநாடு புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் கடந்த ஆண்டு நடைபெற்றது. இதில் … Read more

முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட்: சூர்யவன்ஷி புதிய சாதனை

ஆமதாபாத், 18-வது சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதன் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் மோதி வருகின்றன. இதில் கொல்கத்தாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் (பி பிரிவு) மராட்டிய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை வீழ்த்தி 2-வது வெற்றியை தனதாக்கியது. இதில் வைபவ் சூர்யவன்ஷி சதத்தின் (ஆட்டமிழக்காமல் 108 ரன், 61 … Read more