இஸ்ரேலுக்கு உளவுபார்த்ததாக குற்றச்சாட்டு; ஈரானில் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

டெஹ்ரான், இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு உளவுபார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் ஒருவருக்கு ஈரான் அரசு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது. அந்த நபரின் பெயர் அலி அர்தெஸ்தானி எனவும், அவர் பணத்தை பெற்றுக் கொண்டு இஸ்ரேலின் மொசாட் அமைப்பிற்கு பல்வேறு ரகசிய தகவல்களை வழங்கியுள்ளார் என்றும் ஈரானின் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. கிரிப்டோகரன்சி மூலம் அவர் அந்த பணத்தை பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஈரான் காவல்துறை அதிகாரிகள் அலி அர்தெஸ்தானியை கைது செய்து விசாரணை நடத்தியபோது அவர் இஸ்ரேலுக்கு … Read more

முதியவர் எடுத்த விபரீத முடிவு.. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் காரணமா..?

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கை குறித்து ஏற்பட்ட அச்சம், மாநிலம் முழுவதும் மக்களிடையே மனஅழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் பின்னணியில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் தேர்தல் ஆணையத்தின் நோட்டீசால் முதியவர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேற்குவங்காள மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பப்லு பால்(வயது 64). இவரது பெயர், அம்மாநில … Read more

மலேசிய ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்

கோலாலம்பூர், மலேசிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் டொயோகோ மியாசகி உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பிவி சிந்து பி.வி.சிந்து 21-8, 21-13 என்ற செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பி.வி.சிந்து ஜப்பானின் யமாகுச்சி … Read more

கிரீன்லாந்து தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா

கோபன்ஹேகன், டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமான கனிம வளங்கள் நிறைந்த கிரீன்லாந்தை அமெரிக்காவுக்கு சொந்தமானது என்று ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவ நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து தனக்கு தேவை எனவும், தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் அதனை இணைக்க தயார் எனவும் டிரம்ப் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டென்மார்க் அங்கு தனது படைகளை குவித்து வருகிறது. … Read more

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்

புதுடெல்லி, 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1 லட்சத்து 33 ஆயிரம் கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்(என்.சி.பி.) தெரிவித்துள்ளது. அத்துடன் 447 வழக்குகளில் 25 வெளிநாட்டினர் உள்பட 994 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 131 வழக்குகளில் 256 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றவாளிகளுக்கு மொத்தம் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது. 1 More update தினத்தந்தி Related … Read more

விஜய் ஹசாரே கோப்பை: புதிய சாதனை படைத்த ருதுராஜ் கெய்க்வாட்

மும்பை, 33வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகளில் மோதி வருகின்றன. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மராட்டியம் – கோவா அணிகள் மோதின. டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மகாராஷ்டிரா அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 249 … Read more

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த மாதம் இந்தியா வருகை

பாரிஸ், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் அடுத்த மாதம் செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாடு நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இந்தியாவில் இந்த மாநாட்டை நடத்துவது குறித்து பிரான்ஸ் நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்தார். இந்த மாநாடு பிப்ரவரி 19-20 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ளது. முன்னதாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், பிரெஞ்சு … Read more

வெனிசுலாவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஊடுருவியுள்ளது: கேரள முதல்-மந்திரி கண்டனம்

திருவனந்தபுரம், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு போதை பொருள் பயங்கரவாதி என்றும் அந்நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் அபாயகர போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்றும் டிரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறி வந்த நிலையில், நிக்கோலஸ் மதுரோவும், அவருடைய மனைவி சிலியா புளோரசும் அமெரிக்க ராணுவ வீரர்களால் கைது செய்யப்பட்டு வெனிசுலாவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, நிக்கோலஸ், அவருடைய மனைவி புளோரஸ் மீது நியூயார்க் நகரில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் விரைவில் அமெரிக்க … Read more

வீராங்கனைக்கு பாலியல் துன்புறுத்தல்: துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் சஸ்பெண்ட்

இந்திய துப்பாக்கி சுடுதல் பயிற்சியாளர் குழுவில் உள்ள முக்கிய உறுப்பினர் அங்குஷ் பரத்வாஜ். முன்னாள் வீரரான இவர் மீது இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அந்த வீராங்கனை பரத்வாஜிடம் பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவருக்கு பரத்வாஜ் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். கடந்த 1-ந்தேதி வீராங்கனை இதுகுறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அரியானா மாநிலம் பரிதாபாத் … Read more

வங்காளதேசம்: இந்து வாலிபர் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

டாக்கா, வங்காளதேச நாட்டில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா, அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி சகோதரியுடன் நாட்டை விட்டு வெளியேறி, உயிர் தப்பினார். அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து உள்ளார். இதன் பின்னர், பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் வங்காளதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. நாட்டின் தலைமை ஆலோசகராக யூனுஸ் செயல்பட்டு வருகிறார். … Read more