மே.வங்காள தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஒய்-பிளஸ் பாதுகாப்பு- உள்துறை அமைச்சகம் அதிரடி

கொல்கத்தா, மேற்கு வங்காள மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணி முடிவடைந்து கடந்த 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு போன்ற பிற காரணங்களால், 58 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்னர். இதைத்தொடர்ந்து ஜனவரி 15-ந் தேதி வரை, வாக்காளர் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் தொடர்பான கோரிக்கைகள் பெறப்பட உள்ளன. இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் … Read more

4வது டி20; இந்தியாவுக்கு எதிராக இலங்கை பந்துவீச்சு தேர்வு

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவானந்தபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சமாரி அதபத்து பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி … Read more

வங்காளதேச முன்னாள் பிரதமரின் உடல்நிலை தொடர்ந்து மோசம்; டாக்டர் தகவல்

டாக்கா, வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா (வயது 80). இவர் 1991ம் ஆண்டு முதல் 1996 வரையும், பின்னர் 2001 முதல் 2006 வரையும் வங்காளதேசத்தின் பிரதமராக செயல்பட்டுள்ளார். இதனிடையே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கலிதா ஜியா கடந்த மாதம் 23ம் தேதி முதல் டாக்காவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 11ம் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கலியா ஜியாவின் உடல்நிலை தொடர்ந்து … Read more

டெல்லியில் அடல் கேண்டீன்களில் அலைமோதும் கூட்டம்

புதுடெல்லி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளையொட்டி டெல்லி அரசு மலிவு விலையில் சத்தான உணவு வழங்கும் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதற்காக கடந்த பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டது. அதன்படி 101 அடல் உணவகங்களை தொடங்கி அதில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக கடந்த 25-ம் தேதி ஆர்.கே.புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ் உள்ளிட்ட 45 இடங்களில் அடல் கேண்டீன்கள் திறக்கப்பட்டது. மொத்தம் 100 இடங்களில் இதனை திறக்க திட்டமிட்டு … Read more

4வது டி20; இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோதல்

திருவனந்தபுரம், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. .இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடைபெற உள்ளது. … Read more

இலங்கை முன்னாள் மந்திரி டக்ளஸ் தேவானந்தா கைது

கொழும்பு, இலங்கை முன்னாள் மந்திரியும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடந்த 2001-ம் ஆண்டு, அதிகாரப்பூர்வமாக துப்பாக்கி வழங்கப்பட்டு இருந்தது. பிரபல தாதா ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் அந்த துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டக்ளஸ் தேவானந்தாவின் துப்பாக்கி, தாதாவிடம் எப்படி சென்றது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்துவதற்காக கோர்ட்டு உத்தரவு பெற்று, அவரை குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது … Read more

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக…கணவருக்கு மதுவை ஊற்றி கழுத்தை இறுக்கி கொன்ற ஆசிரியை

திருப்பதி நாகர்கர்னூல் மாவட்டம், அச்சம்பேட்டை, மாருதி நகரைச் சேர்ந்தவர் லட்சுமன் நாயக் (வயது 40). இவரது மனைவி பத்மா. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பத்மா அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். லட்சுமன் நாயக் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். மனைவி தனியாக வசித்து வந்ததால், தனது பணியை ராஜினாமா செய்து மனைவியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், உப்பந்தூரு அடுத்த தாடுரு அரசு … Read more

தொடர்ந்து 5 சதம்: தமிழக வீரரின் சாதனையை சமன் செய்த துருவ் ஷோரே

சென்னை, 33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘எலைட்’ பிரிவில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘பிளேட்’ பிரிவில் 6 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த ஆட்டத்தில் (பி பிரிவு) விதர்பா அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை தோற்கடித்தது. இந்த ஆட்டத்தில் சிறப்பாகவ விளையாடிய விதர்பா வீரர் துருவ் ஷோரே சதம் (109 … Read more

இங்கிலாந்து: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தான் சிறுவர்கள் – அதிர்ச்சி சம்பவம்

லண்டன், இங்கிலாந்து நாட்டின் மேற்கு மிட்லேண்ட்ஸ் மாகாணம் வார்விக்‌ஷெரி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த மே மாதம் அப்பகுதியில் உள்ள பூங்காவுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மதுபோதையில் இருந்த அந்த சிறுமியை 2 சிறுவர்கள் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஜன் ஜஹன்பெஸ் (வயது 17), நைசல் (வயது 17) ஆகிய 2 சிறுவர்களை … Read more

உன்னாவ் பாலியல் வன்கொடுமை: சுப்ரீம்கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

புதுடெல்லி, உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 17 வயது சிறுமியாக இருந்தபோது பாங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017-ம் ஆண்டில் அவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார் என உள்ளூர் போலீசில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கில், டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகளான சுப்ரமணியம் பிரசாத் மற்றும் ஹரீஷ் வைத்யநாதன் சங்கர் ஆகியோர் கொண்ட டெல்லி ஐகோர்ட்டு அமர்வு, செங்காருக்கு கடந்த 23-ம் தேதி ஜாமீன் … Read more