2 தொழிலதிபர்களுக்காக நாட்டின் கொள்கைகளை வகுக்கும் பிரதமர் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

டேராடூன்: பிரதமர் மோடியின் நண்பர்களான இரண்டு தொழிலதிபர்களுக்காகவே ஒட்டுமொத்த நாட்டின் கொள்கைகளும் வகுக்கப்படுகின்றன காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். உத்தராகண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தமுள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி கட்சியும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. முன்னணி ஊடகங்கள் நடத்திய … Read more

கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – நர்சரி மற்றும் மழலையர் பள்ளிகளைத் திறக்க அனுமதி

சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை மார்ச் 2-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, நர்சரி பள்ளிகள், மழலையர் விளையாட்டுப் பள்ளிகளைத் திறக்கவும், பொருட்காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதியளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில், கரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.53 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 28-01-2022-ன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. மத்திய … Read more

இந்து அவமதிப்புக்காக காங்கிரஸில் போட்டாபோட்டியே நடக்கிறது: யோகி ஆதித்யநாத்

உத்தர்காண்ட்: இந்து அவமதிப்பே காங்கிரஸுக்கு எப்போதும் இலக்கு. இதற்காக கட்சிக்குள் அவர்கள் போட்டிபோட்டுக் கொண்டு இவ்வேளையை செய்கின்றனர் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அங்கு இறுதிக்கட்டப் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தெஹ்ரி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “இந்து அவமதிப்பை மேற்கொள்வதில் காங்கிரஸில் கடும் போட்டி நிலவுகிறது. … Read more

வேலூரில் தென்னங்கன்றுடன் பிரச்சாரத்தில் ஈடுபடும் சுயேச்சை வேட்பாளர்

வேலூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ரோஸ்மேரி, வார்டு முழுவதும் தென்னங்கன்றுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியின் 37-வது வார்டில் அகில இந்திய துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ரோஸ்மேரி போட்டியிடுகிறார். அவருக்கு தென்னமர சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை வாக்காளர் மனதில் கொண்டு சேர்க்கும் வகையில், இருசக்கர வாகனத்தில் தென்னங்கன்றை வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். … Read more

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், அனில் அம்பானிக்கு தடை: செபி அதிரடி உத்தரவு

மும்பை: ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் மற்றும் அதன் தலைவர் அனில் அம்பானி மற்றும் 3 பேருக்கு பங்குச்சந்தை உள்ளிட்ட செக்யூரிட்டிஸ் மார்கெட்டில் பங்கேற்க தடை விதித்து செபி உத்தரவிட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருபாய் அம்பானியின் மறைவுக்கு பின், அவரது வாரிசுகளான முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சண்டையிட்டு பிரித்துக் கொண்டனர். சொத்துக்களை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு, குடும்ப சண்டை உருவாகி பின்னர் தாய் மத்தியஸ்தம் செய்து சொத்துக்கள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட்டது. இருவரும் … Read more

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும்: வேல்முருகன்

சென்னை: கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கான பணிகளை நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ள கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் என்பது தான், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் கோரிக்கை. இக்கோரிக்கையை முன் வைத்துதான், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இடிந்தகரையோடு நிற்காமால் தமிழ்நாடு தழுவியதாக மாறியது. ஆனால், அரசியல் கட்சிகளின் கோரிக்கைக்கு … Read more

உ.பி. தேர்தல்; 8000 வாகனங்களை கையகப்படுத்திய தேர்தல் ஆணையம்: பாஜக எம்எல்ஏ, அமைச்சர்களின் வாகனங்களுக்கு மட்டும் விலக்கு?

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சட்டப்பேரவை வாக்குப்பதிவுகளுக்காக மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் சுமார் 8000 வாகனங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், பாஜகவின் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு சொந்தமான வாகனங்களை எடுக்க வேண்டாம் என ரகசிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. பாஜக ஆளும் உ.பி.யில் ஏழு கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்குப்பதிவுப் பணிகளின் போக்குவத்திற்காக பல ஆயிரம் வாகனங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, தனியார்களின் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 8000 கையகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், 1000 … Read more

12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் டெல்டா பகுதிகள் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மன்னார் வளைகுடா பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 12-ம் தேதி தென்தமிழக மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் … Read more

நாட்டில் அன்றாட கரோனா பாதிப்பு 50 ஆயிரமாகக் குறைவு: சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கையும் 6 லட்சமாக சரிவு

புதுடெல்லி: இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 50,407 என்றளவில் உள்ளது. இது நேற்றைவிட 13% குறைவாகும். அன்றாட கரோனா பாசிடிவிட்டி விகிதமும் 3.48% என்றளவில் சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி இந்தியாவில் முதல் ஒமைக்ரான் தொற்றாளர் கண்டறியப்பட்டார். அதன் பின்னர் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த வகை கரோனா வைரஸ் தனது தாக்கத்தைப் படிப்படியாக அதிகரித்தது. இதனால், நாடு முழுவதும் மீண்டும் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு, பள்ளிகளில் … Read more

இரண்டே நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கும்: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன்: அடுத்த இரண்டு நாட்களில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என வெள்ளை மாளிகை கணித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எல்லையில் சுமார் 1 லட்சம் வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது. எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் இறங்கியுள்ளன. ஆனால், எந்த சமாதானத்தையும் ஏற்காத ரஷ்யா இன்னும் இரண்டே நாட்களில் உக்ரைன் மீது போர் தொடுக்கும் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கணித்துள்ளன. … Read more