குஜராத்தில் உள்ள சர்தார் படேல் சிலை முன் அக்.31-ல் பிரம்மாண்ட அணிவகுப்பு: அமித் ஷா அறிவிப்பு

பாட்னா: குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலை முன்பாக, அவரது பிறந்த நாளான நாளை (அக். 31) குடியரசு தின அணிவகுப்பைப் போன்று பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்படும் என்று அமித் ஷா அறிவித்துள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவை ஒன்றிணைப்பதில் சர்தார் வல்லபாய் படேல் பெரும் பங்கு வகித்தார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது பிறந்த நாளான அக்டோபர் 31ம் தேதி, தேசிய ஒருமைப்பாட்டு … Read more

விமானம் செங்குத்தாக புறப்பட, இறங்க உதவும் புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் சாதனை 

சென்னை: ​வி​மானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை சென்னை ஐஐடி ஆராய்ச்​சி​யாளர்​கள் கண்​டு​பிடித்து சாதனை படைத்​துள்​ளனர். பொது​வாக விமானங்​கள் ஓடு​தளத்​தில் குறிப்​பிட்ட தூரம் விரை​வாக ஓடி அதன் பின்​னரே மேலே எழும்​பும். அதே​போல, வானில் இருந்து தரை​யிறங்​கும்​போதும் ஓடு​தளத்​தில் இறங்கி சற்று தூரம் சென்ற பின்​னரே குறிப்​பிட்ட இடத்தை வந்​தடை​யும். இந்த நிலை​யில், விமானம் செங்​குத்​தாக புறப்​பட​வும், தரை​யிறங்​க​வும் உதவும் புதிய தொழில்​நுட்​பத்தை (Vertical Take-off & Landing – VTOL) சென்னை ஐஐடி … Read more

ஓபிஎஸ், செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது: இபிஎஸ் 

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரே காரில் வருவது குறித்து எனக்கு தெரியாது. வந்தால் அதுகுறித்து பதில் சொல்கிறேன் என பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி, 63-வது குருபூஜையையொட்டி தேவர் நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி. உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் … Read more

'பிஹாரிகள் மற்ற மாநிலங்களில் அவமதிக்கப்படும்போது காங்கிரஸ் கைதட்டுகிறது’ – சிராக் பாஸ்வான்

சாப்ரா: ‘மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் துன்புறுத்தப்படும்போது காங்கிரஸ் தலைவர்கள் கைதட்டுகிறார்கள்’ என்று மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-ன் தலைவருமான சிராக் பாஸ்வான் குற்றம் சாட்டியுள்ளார். பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு சாப்ராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுப் பேசிய சிராக் பாஸ்வான், “நான் அரசியலில் நுழைந்ததற்குக் காரணம், மற்ற மாநிலங்களில் பிஹாரிகள் அவமதிக்கப்படும் விதம்தான். பிஹாரி என்ற வார்த்தை கூட ஒரு அவமதிப்பாக மாற்றப்பட்டது. பஞ்சாபின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர், காந்தி குடும்பத்தைச் … Read more

70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழைநீர் வடிந்தது: 5 மணி நேரம் கண்காணித்து பணிகளை முடித்த கும்பகோணம் எம்எல்ஏ

கும்பகோணம்: கும்பகோணத்தில் 70 நாட்களுக்கு மேல் தேங்கிய மழை நீர் பல்வேறு காரணங்களால் வடியாததால் 5 மணி நேரம் பணிகள் மேற்கொள்ளும் இடத்தில் அமர்ந்து கும்பகோணம் எம்எல்ஏ மழைநீரை வடிய செய்துள்ளார். கும்பகோணத்தில் கடந்த ஆக.19-ம் தேதி பெய்த மழையின் போது சோலையப்பன் தெரு, ஆலையடி சாலை உள்ளிட்ட நகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. இதேபோல் வாழை, கரும்பு, தீவனப் புல் மற்றும் நெற்பயிர் சாகுபடி செய்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இதையடுத்து அண்மையில் பெய்த பலத்த … Read more

53-வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் நியமனம்: நவம்பர் 24 அன்று பதவியேற்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த், இந்தியாவின் 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாயின் பதவிக்காலம் நவம்பர் 23-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையொட்டி, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைக்குமாறு பி.ஆர். கவாய்க்கு மத்திய சட்ட அமைச்சகம் அண்மையில் கடிதம் எழுதியது. உச்ச நீதிமன்ற மரபுப்படி தனக்கு பிறகு மூத்த நீதிபதியாக உள்ள சூர்யா காந்தின் பெயரை 53-வது தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி பி.ஆர். … Read more

சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம்: கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் தகவல்

கோவை: சுகாதார ஆவணங்களில் நிலைப்படுத்தல் அவசியம். இது சட்டபூர்வ நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி வழக்குத் தொந்தரவுகளை குறைக்கும் என மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை இயக்குநர் சுமதி தெரிவித்துள்ளார். இந்திய தர நிர்ணய அமைவனம்(பிஐஎஸ்) கோவை கிளை அலுவலகம் சார்பில், ‘மனக் மந்தன்’ என்ற பெயரில் மருத்துவமனை விலைப்பட்டியல் நிலைப்படுத்தல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி கொடிசியா சாலையில் அமைந்துள்ள மண்டல அறிவியல் மைய வளாகத்தில் இன்று நடந்தது. மருத்துவ மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இணை … Read more

ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்க தடை குறித்து இந்தியா ஆய்வு செய்கிறது: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து இந்தியா ஆய்வு செய்து வருகிறது என வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ரந்திர் ஜெய்ஸ்வால், “ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் சமீபத்திய தடைகள் குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம். சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்பவே எங்கள் முடிவுகள் இருப்பது வழக்கம். எரிசக்தி குறித்த கேள்விக்கான எங்கள் பதில் மற்றும் நிலைப்பாடு நன்கு … Read more

என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ முடியும்: சசிகலா

மதுரை: என்னுடைய ‘மூவ்’ தனியாகத்தான் இருக்கும், ஆனால் ‘சக்சஸில்’ தான் முடியும் என அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா மதுரையில் இன்று தெரிவித்தார். மதுரையில் இன்று அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தில் 10 மாதங்களில் மாவட்டந்தோறும் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளது. பள்ளி அளவில் போதைப்பொருள் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. திமுக அரசின் கண் அசைவு இல்லாமல் போதைப்பொருள் இந்தளவுக்கு புழக்கம் வருவதற்கு வேலை இல்லை. … Read more

“இந்திரா காந்திக்கு பிரதமர் மோடியை விட தைரியம் அதிகம்” – ராகுல் காந்தி

நாளந்தா: “1971 வங்கதேச போரின் போது, ​​இந்திரா காந்தி அமெரிக்காவுக்கு அஞ்சவோ, தலைவணங்கவோ இல்லை. ஆனால், பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை எதிர்கொள்ளும் திறமை இல்லை” என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறினார். பிஹாரின் நாளந்தாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, “1971 வங்கதேசப் போராட்டத்தில், அமெரிக்கா தனது விமானங்களையும் கடற்படையையும் இந்தியாவை மிரட்டவும், அச்சுறுத்தவும் அனுப்பியது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, ‘உங்கள் கடற்படைக்கு நாங்கள் பயப்படவில்லை, … Read more