வானிலை முன்னறிவிப்பு: நவ.5 வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் நவ.5-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.31) முதல் நவ.4-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், 5-ம் தேதி ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் … Read more

மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20+ சிறுவர்கள் மீட்பு – ஒருவர் கைது

மும்பை: மும்பையில் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகளை போலீஸாரும் தீயணபை்புத் துறையினரும் பத்திரமாக மீட்டனர். மும்பையில் பொவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ.ஸ்டுடியோ என்ற ஒரு ஸ்டுடியோவில் 20-க்கும் மேற்பட்ட சிறுவர் – சிறுமிகளை ஒருவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து, வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், தான் சிலரிடம் பேச விரும்புவதாகவும் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்க விரும்புவதாகவும் தனக்கு பணம் தேவையில்லை என்றும் கூறி இருந்தார். மேலும், அது நடக்காவிட்டால் … Read more

இலங்கையில் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் உடைக்கப்படும் அவலம்!

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு நாட்டுடமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை உடைக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை கடற்படையினரால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 500 படகுகளை கைப்பற்றி 3,500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளின் முயற்சிகளினாலும் , சிறை தண்டனை மற்றும் அபராதம் கட்டியப் பிறகும் தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் படகுகள் விடுவிக்கப்படவில்லை. அந்தவகையில் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து இலங்கை நீதிமன்றங்கள் தமிழக மற்றும் புதுச்சேரி … Read more

தெலங்கானா அமைச்சராகிறார் முகமது அசாருதீன்

ஹைதராபாத்: தெலங்​கா​னா​வில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலை​மையி​லான அமைச்சரவையில் தற்​போது 15 பேர் இடம் பெற்றுள்ளனர். சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் எண்​ணிக்கை அடிப்​படை​யில் மேலும் 3 பேருக்கு அமைச்​சர​வை​யில் வாய்ப்பு வழங்கலாம். தெலங்​கா​னா​வில் முஸ்​லிம் சிறு​பான்​மை​யினருக்கு ஒவ்​வொரு முறை​யும் ஓர் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட்டு வரு​கிறது. இம்​முறை இந்த வாய்ப்பை யாருக்கு வாய்ப்பு வழங்​கலாம் என ரேவந்த் ரெட்டி அரசு ஆலோ​சித்து வந்​தது. பிறகு இது தொடர்​பாக கட்சி மேலிடமே முடிவு எடுக்​கும் என அறி​வித்​தது. இந்​நிலை​யில் இந்​திய … Read more

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றத்தை அரசியல் மேடையாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது என, மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறைச் சட்டம், இந்திய சாட்சிகள் சட்டத்துக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்‌ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்‌ஷ்ய அதினியம் என்ற பெயர்களும் புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2024 ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன. … Read more

“2 இளவரசர்கள், 2 ஊழல் குடும்பங்கள்” – ராகுல், தேஜஸ்வி குறித்து பிரதமர் மோடி காட்டம்

முசாபர்பூர் (பிஹார்): “பிஹார் தேர்தல் போரில் வெற்றி பெற இரண்டு இளவரசர்கள் பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். ஒருவர் இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். மற்றொருவர் பிஹாரின் மிகவும் ஊழல் நிறைந்த குடும்பத்தின் இளவரசர். இருவர் மீதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.” என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார். பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முசாபர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் … Read more

மதுரையில் ஓபிஎஸ்ஸுடன் செங்கோட்டையன் திடீர் ஆலோசனை: ஒரே காரில் பசும்பொன் பயணம் செய்ததால் பரபரப்பு!

மதுரை: அதிமுகவில் அதிருப்தியுடன் பயணம் செய்துவந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், மதுரையில் திடீரென்று ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தியதோடு, இருவரும் ஒரே காரில் பசும்பொன் புறப்பட்டு சென்றனர். இருவரும் அதிமுகவில் பழனிசாமிக்கு எதிரானவர்களை ஒன்றினைக்க நடக்கும் முயற்சியாக பார்க்கப்படுவதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எம்ஜிஆர் முதல் ஜெயலலிதா காலம் வரை, செல்வாக்கு மிக்க நபராக இருந்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா இவரை அவ்வப்போது ஒதுக்கி வைப்பதும், மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்புகள் கொடுத்தும் முக்கியத்துவம் … Read more

பிஹாரில் 50 அதிருப்தி வேட்பாளர் போட்டி: இரு கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு சவால்

புதுடெல்லி: பிஹார் சட்​டப்​பேரவை தேர்​தலில் இம்​முறை ஆளும் தேசிய ஜனநாயக கூட்​டணி (என்​டிஏ) மற்​றும் எதிர்க்​கட்​சிகளின் மெகா கூட்​ட​ணியை சேர்ந்த சுமார் 50 அதிருப்தி எம்​எல்​ஏக்​கள் வேட்​புமனு தாக்​கல் செய்​துள்​ளனர். அதி​கபட்​ச​மாக ராஷ்டிரிய ஜனதா தளத்தை (ஆர்​ஜேடி) சேர்ந்த 27 பேர் போட்டி வேட்​பாள​ராகி உள்​ளனர். இதையடுத்து ஐக்​கிய ஜனதா தளத்​தின் (ஜேடி​யு) 16 பேரும் பாஜக​வின் 6 பேரும் போட்டி வேட்பாளராக களம் காண்​கின்​றனர். இதனால் கட்​சியை விட்டு நீக்​கப்​பட்ட இவர்​கள் சுயேச்​சை​யாகவோ அல்​லது சிறிய … Read more

சீனா மீதான இறக்குமதி வரியை 10% குறைத்த ட்ரம்ப்: ஜி ஜின்பிங் உடனான சந்திப்புக்குப் பின் அறிவிப்பு

புசான் (தென்கொரியா): தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57%ல் இருந்து 47% ஆக அமெரிக்கா குறைத்துள்ளது. ஆசிய – பசிபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் இடையே, டொனால்டு ட்ரம்ப்பும் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் … Read more

கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு அரசு வீடு வழங்க வேண்டும்: அரசியல் கட்சிகள் கோரிக்கை

சென்னை: கபடி வீராங்​கனை கார்த்​தி​கா​வுக்கு வீடு வழங்க வேண்​டும் என தமிழக அரசுக்கு பாமக தலை​வர் அன்​புமணி, மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநிலச் செய​லாளர் பெ.சண்​முகம், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் கோரிக்கை விடுத்​துள்​ளனர். பஹ்ரைனில் நடை​பெற்ற ஆசிய இளை​யோர் போட்​டி​யில் தங்​கம் வென்ற இந்​திய மகளிர் கபடி அணி​யின் துணைத் தலை​வ​ரான சென்னை கண்​ணகி நகரைச் சேர்ந்த கார்த்​தி​காவை, அவரது இல்​லத்​தில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செயலாளர் பெ.சண்​முகம் நேற்று முன்​தினம் சந்​தித்து வாழ்த்து தெரி​வித்​தார். … Read more