ஆரம்பம் முதலே அலட்சியம்: வேளச்சேரியில் குடியிருப்புக்காக தோண்டபட்ட 60அடி பள்ளத்தில் சிக்கிய தொழிலாளர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்பு… வீடியோ

சென்னை:  வேளச்சேரி பகுதியில் குடியிருப்புக்காக தோண்டபட்ட 60அடி பள்ளத்தில் விழுந்து  இரு தொழிலாளர்கள் சிக்கிய  நிலையில்,  5 நாட்களுக்கு ஒருவரது உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு  தொழிலாளர் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் அடுக்குமாடி குடியிருப்புக்காக  தோண்டப்பட்ட பள்ளத்தில் இரண்டு தொழிலாளர்கள் சிக்கினர். புயல் வெள்ளம் காரணமாக, அந்த பள்ளத்தில் அடுத்தடுத்து மழைநீர் தேங்கியதால் … Read more

வார ராசிபலன்: 08.12.2023  முதல் 14.12.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் ஹாப்பி வாரமாக அமைந்துள்ளது. மனசுல தெளிவு பிறக்கும். இந்த வீக் வேலையில இருந்துக்கிட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். புதிய வேலை விசயமாக முயற்சி செய்யலாம். எதிர்பாலினத்தவர்களுடன் பழகும் போது எச்சரிக்கை தேவை. காதலிப்பவர்கள் பாதுகாப்பாக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும் காலமிது. பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல்கள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச் சின்ன மன சங்கடங்கள் வரலாம் வெளிப்படையாகப் பேசிப் பிரச்னையை தீர்க்க முயற்சி செய்யுங்கள். இளைய சகோதரர்களின் உதவி கெடைக்கும். நட்பு விசயத்தில் கவனம் தேவை. … Read more

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…

சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலம் தேறி வீடு திரும்பினார். இது அவரது ரசிகர்களுக்கும், தேமுதிகவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே  இருந்து சிகிச்சை பெற்று வருவதுடன் ஓய்வு எடுத்து வந்தார். அவ்வப்போது வழக்கமான பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில்,   கடந்த நவம்பர்  18ம் தேதி விஜயகாந்துக்கு  திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, … Read more

ஹர்மன்பிரீத் கவுர் பெண்கள் கிரிக்கெட்டில் படைத்த உலக சாதனை

மும்பை பெண்க்ள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் உலகச் சாதனை படைத்துள்ளார். தற்போது இங்கிலாந்து பெண்கள் அணி 3 டி20, ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் டி20 தொடரும் அடுத்து டெஸ்ட் போட்டியும் நடைபெறும். நேற்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பையில் நடந்தது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி … Read more

எல்லை மீறிய காதல் : கராச்சியில் இருந்து கொல்கத்தா வந்த பாகிஸ்தானிய பெண்… இந்திய எல்லையில் ‘தூள்’ பறந்த வரவேற்பு…

பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் ஜவேரியா கான், கொல்கத்தாவில் வசிக்கும் சமீர் கான் என்பவரை கடந்த பல ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஜெர்மனியில் படிக்கச் சென்ற சமீர் கானுக்கு ஜவேரியா கானுடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதை அடுத்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். சமீரின் பெற்றோர் இவர்களின் காதலை ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்திய விசாவுக்காக விண்ணப்பித்த நிலையில் கொரோனா காரணமாக இரண்டு முறை நிராகரிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் செவ்வாய்கிழமை அன்று வாகா … Read more

வடியாத வெள்ளம்: சென்னையில் 5வது நாளாக நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…

சென்னை:  மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் இன்னும் வெள்ளம் முழுமையாக வடியாத நிலையில்,  5வது நாளாக நாளையும்  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல் காரணமாக, பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. முக்கிய பகுதிகளில் உள்ள வெள்ள நீர் வடிந்துள்ள நிலையில், உள்பகுதிகளில்  மழைநீர் இன்னும் வடியாத நிலை உள்ளது. இதனால் பல பகுதிகளில் இன்னும் மின்சாரம் வழங்கப்படாத நிலையில், பல பகுதிகளில்  மக்கள் நிவாரண உதவிக்கேட்டு போராடி … Read more

புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேதிகள் அறிவிப்பு…

சென்னை:  மிச்சாங் புயல் மழையால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகளுக்கு புதிய தேர்வு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது. சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் தொடர்பாக புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. மிக்ஜாம் புயலால் ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் இளநிலை, முதுநிலை செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும்  எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், புதிய தேர்வு அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது . … Read more

அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

சென்னை இன்று அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் ‘மிக்ஜம்’ புயல் காரணமாக அதி கன மழை பெய்தது. இவ்வாறு 36 மணி நேரம் இடைவிடாது பெய்த கன மழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கடல்போல் காட்சி அளிக்கிறது. கன மழை ஓய்ந்த பிறகும் வெள்ளம் வடியாததால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் … Read more

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.   கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் மிக்ஜம் புயல் ஆந்திராவில் கரையை கடந்த நிலையில் தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது … Read more

இதுவரை 3 மாநிலங்களுக்கு முதல்வர் நியமனம் செய்யாத பாஜக : காங்கிரஸ் விமர்சனம்

டில்லி பாஜக இதுவரை சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களின் முதல்வர் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக அமோக வெற்றி பெற்றது.  பாஜக மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டு ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது. இவ்வாறு 3 மாநிலத்தில் பெற்ற வெற்றியால் பாஜகவுக்கு ஊக்கமாக அடுத்த ஆண்டு நடைபெற உள்ள … Read more