சென்னையில் முதல்வர் திறந்து வைத்த புதிய கால்பந்து மைதானம்

சென்னை சென்னை கொளத்தூர் பல்லவன் சாலையில் முதல்வர் மு க ஸ்டாலின் ஒரு புதிய கால்பந்து மைதானத்தை திறந்து வைத்துள்ளார். சென்னை நகரை மேம்படுத்த முதல்வர் மு க ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.  அதில் ஒரு பகுதியக இன்று சென்னை, கொளத்தூர் பல்லவன் சாலையில் செயற்கை புல் தரையுடன் கூடிய கால்பந்து விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கால்பந்து விளையாட்டு மைதானத்தைத் திறந்துவைத்தார். மேலும் சென்னை திரு.வி.க.நகரில் புதிதாக … Read more

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது 10 ஆண்டுகால காதலரை பிரிந்தார்…

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, ஜியாம்ப்ருனோ உடனான தனது 10 ஆண்டுகால உறவை முறித்துக்கொண்டார் மீடியாசெட் என்ற தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியும் ஜியாம்ப்ருனோ அதே சேனலில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில் ஆபாசமாக பேசினார். இதனைத் தொடர்ந்து, சக பெண் ஊழியர்களிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகவும் தன்னுடன் உல்லாசமாக இருக்க அவர்களை அழைத்ததாகவும் சில வீடியோ கிளிப்பிங்குகள் வெளியானது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து பிரதமர் மெலோனிக்கு பல்வேறு வகையில் அழுத்தம் தரப்பட்டது. … Read more

பாரத ராஷ்டிர சமிதியிடம் அதிரடி கேள்வி கேட்ட உச்சநீதிமன்றம்

 டில்லி தேர்தல் சின்னங்கள் குறித்து பாரத ராஷ்டிர சமிதி அளித்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தெலுங்கானா மாநிலத்தில் தற்போது பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இந்த கட்சியின் தேர்தல் சின்னம் கார் சின்னம் ஆகும்.  இம்மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாரத ராஷ்டிர சமிதி கட்சிக்கு கார் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே வேளையில் மற்ற கட்சிகளுக்கு இதைப் போலவே இருக்கக் கூடிய மற்ற சின்னங்களை ஒதுக்கியதாக புகார் எழுந்தது.   … Read more

தற்போது தலைமை செயலர் நடத்தும் வடகிழக்கு பருவமழை குறித்த ஆலோசனை

சென்னை தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவதாஸ் மீனா வடகிழக்கு பருவமழை குறித்த நடவடிக்கைகள் பற்றி தற்போது  ஆலோசனை நடத்தி வருகிறார்.  நாடு முழுவதும் தற்போது தென்மேற்கு பருவமழை முடிந்துவிட்டது என்றும், விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளது என்றும் வானிலை ஆய்வுமையம் நேற்று தெரிவித்து இருந்தது.  இதையொட்டி வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை சமாளிப்பது குறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் சென்னையில் நடைபெற்றுவரும் … Read more

ரஷ்யாவை ஹமாஸுக்கு இணையாக பேசி தமாஷாக சீண்டும் அமெரிக்க அதிபரின் பேச்சு… இஸ்ரேல் பாலஸ்தீன போர் கட்டுக்குள் வர உதவுமா ?

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து கடந்த 13 நாட்களாக காசா மீது இஸ்ரேல் போர் வெறியுடன் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு எந்தவொரு உதவிப் பொருளும் செல்ல இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. போரின் இடையே இஸ்ரேல் வந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எகிப்தில் உள்ள ராஃபா வழியாக உணவு உள்ளிட்ட உதவிப் பொருட்கள் மனிதாபிமான அடிப்படையில் அனுப்பிவைக்கப்படும் என்று உறுதியளித்தார். ஆனால் … Read more

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மீதான தடை செல்லும்! உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

டெல்லி: ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தமிழ்நாடு அரசின்  தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு, ஒரு முறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து,  தொடரப்பட்ட வழக்கு விசாரித்து வந்த உச்சநீதிமன்றம், இன்று தமிழ்நாடு அரசின்  ஒருமுறை பயன்படுத்தும் காகித கப் மற்றும் பிளாஸ்டிக் பைகள் மீதான தடை சரியே என்று … Read more

180 கி.மீ.வேகத்தில் செல்லும் ‛‛நமோ பாரத்” (ரேப்பிட்எக்ஸ்) ரயில் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

டில்லி: 180 கி.மீ.வேகத்தில் செல்லும் ‛‛நமோ பாரத்” (ரேப்பிட்எக்ஸ்) ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார் . தொடர்ந்து அந்த அந்த  ரயிலில் பயணித்ததுடன்,  ரயிலினுள்  பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். மோடி தலைமையிலான மத்தியஅரசு, ரயில் சேவைகளை மேம்படுத்தி வருகிறது. நம் நாட்டின் ரயில் சேவையை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  ஏற்கனவே பல ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதிவேக ரயில் சேவைகளையும் இயக்கி வருகிறது. ஏற்கனவே வந்தே … Read more

ஆயுதபூஜை விடுமுறை: தமிழ்நாடு முழுவதும் மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவிப்பு

சென்னை: ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ள போக்குவரத்து கழகம் நாளை முதல் மேலும்  4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி திங்கட்கிழமை சரஸ்வடிதி, 24ந்தேதி ஆயுதபூஜை கொண்டாடப்பட உள்ளது. சனி, ஞாயிறு திங்கள், செவ்வாய் என நான்கு  நாட்கள் தொடர் விடுமுறை உள்ளது. இதனால்  சென்னை உள்பட முக்கிய நகரங்களில் பணி நிமித்தமாக பணியாற்ற வருபவர்கள் தங்களது … Read more

சென்னையில் 5000 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளது! அமைச்சர் கே.என்.நேரு

சென்னை:  சென்னை சாலை பணிக்கு  இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில்  முதல்கட்டமாக 5000 சாலை பணிகள் நிறைவு பெற்றுள்ளது என அமைச்சர் கே.என்.நேரு  தெரிவித்து உள்ளார். சென்னை மாநகராட்சி வளாகத்மதில் உஎள்ள  கூட்ட அரங்கில்,  சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும திட்ட நிதியிலிருந்து மாதவரம் சரக்குந்து முனையத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.30.30 கோடி நிதி மற்றும் சென்னை மாநகராட்சியின் இயந்திர பொறியியல் துறையின் மூலம் 51 ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.12.75 கோடி … Read more

டில்லி உயர்நீதிமன்றம் 2 ஜி வழக்கில் புதிய உத்தரவு

டில்லி வரும் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு  நடந்ததாகத் தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்புக் கூறியது. சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த தீர்ப்புக்கு … Read more