விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

சென்னை: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது. ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் … Read more

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம், திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

60 வயதில் விளம்பர மாடலாக வலம்வரும் கூலித் தொழிலாளி மம்மிக்கா

கோழிக்கோட்டைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மம்மிக்கா இவருக்கு வயது 60. கேரளாவின் வீதிகளில் லுங்கி சட்டையுடன் அன்றாடம் நடந்து செல்லும் கூலித் தொழிலாளியான மம்மிக்காவைக் கண்ட ஒருவர் அவரது அனுமதியுடன் அவரை புகைப்படம் எடுத்து தனது ஸ்டூடியோ-வில் வைத்திருந்தார். ஆறு மாதம் கழித்து மேலும் சில புகைப்படங்களை அவர் எடுக்க இந்தப் புகைப்படத்தைப் பார்த்த பிரபல புகைப்படக் கலைஞரான ஷரீக் வாலயில் விளம்பர மாடலாக நடிக்க இவரை அணுகினார். விளம்பர மாடலாக நானா ? என்று ஆச்சரியத்தில் … Read more

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுவிட்டு இன்று சென்னை திரும்பும் தமிழக அரசின் குடியரசு தின அலங்கார ஊர்திகள் பிப்.20-ம் தேதி முதல் பிப்.23-ம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்காக மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் ஜெ. விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் : மதுரையில் பாஜகவினர் சிக்கினர்

மதுரை மதுரை நகரில் வாக்களித்து விட்டு வரும் மக்களுக்குப் பண டோக்கன் கொடுத்த பாஜகவினர் பறக்கும் படையிடம் சிக்கினர் நேற்று தமிழகமெங்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது..   தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.    பல இடங்களில் ரொக்கப் பணம், பரிசுப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.   நேற்று வாக்குப்பதிவு நடந்த போதிலும் இது போல நிகழ்வுகள் நடந்துள்ளன. நேற்று மதுரை மாநகராட்சி 25வது வார்டுக்கு உட்பட்ட … Read more

வெற்றி பெறப்போவது யார்? நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது…!

சென்னை:  தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்த தேர்தலில் எந்த கட்சி வெற்றிபெறப் போகிறது என்பது 22ந்தேதி வாக்கு எண்ணிக்கையின்போது தெரிய வரும். தமிழ்நாட்டில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சேர்ந்த 12,838 வார்டு களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தல் மூலம், தேர்தலில், 1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 … Read more

முதல்வர் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் மாணவர் சங்க தலைவர் கைது! இது தெலுங்கானா சம்பவம்….

ஐதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாளை கழுதையுடன் கொண்டாடிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணவர் சங்க தலைவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர்மீது கழுதையை திருடியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா முதல்- மந்திரி சந்திரசேகரராவின் பிறந்தநாள் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொண்டாடப்பட்டது. அவரை அவமானப்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் மாநில மாணவர் அமைப்பு தலைவரான நரசிங்கராவ் கழுதையின் உடலில் கேசிஆர் போஸ்டரை ஒட்டி, … Read more

வாக்குச்சாவடிக்கு 5 மணிக்கு மேல் வந்து தகராறு: திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் அதிகாரிகள், போலீசாருடன் கட்சியினர் வாக்குவாதம்

சென்னை: வாக்குச்சாவடிக்கு 5மணிக்குள் வருபவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதி வழங்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித் திருந்த நிலையில், 5 மணிக்கு மேல் வந்து, தங்களை வாக்களிக்க அனுமதிக்குமாறு ஆளும்கட்சியினர் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம்  திருவொற்றியூர் உள்பட பல பகுதிகளில் நடந்தேறி உள்ளது. மேலும் கோவையிலும் அரங்கேறி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை … Read more

இந்தியாவின் ஐஐடி கல்வி நிலையத்தின் முதல் வெளிநாட்டு வளாகம் ஐக்கிய அரபு நாடுகளில் துவங்கப்படுகிறது

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் இடையே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு 7.5 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் தொடர்பான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அபுதாபி இளவரசர் ஷேக் மொஹம்மத் பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையே காணொளி காட்சி மூலம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. பொருளாதாரம், பருவநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே கூட்டு … Read more

19/02/2022: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு கொரோனா பாதிப்பு, 3,561 பேர் டிஸ்சார்ஜ்…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 1,051 பேருக்கு  கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில்  3,561 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தளவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று சற்று குறைந்தே காணப்படுகிறது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளது. தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 8மணி அளவில் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் … Read more