தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழக பகுதியின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 7-ந் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகிறது. இதனால் 5,6-ந் தேதிகளில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் கனமழை … Read more

எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? – ப.சிதம்பரம்

சென்னை: எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது? என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு சராசரி குடும்பம் இவ்வளவு பெரிய தொகையை எரிபொருள் வரியாக செலுத்தியதற்கு ஈடாக என்ன கிடைத்தது என்றும் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், எரிபொருள் வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என்றும் எட்டு ஆண்டுகளில் மோடி அரசு எரிபொருள் வரியாக இருபத்தி ஆறு … Read more

ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

சென்னை: வரும் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் பதினெட்டாம் தேதி தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்நிலையில், வரும் … Read more

தமிழகத்தில் அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

சென்னை: தமிழகத்தில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக திருமணம், இறப்பு உள்ளிட்ட சுப, துக்க நிகழ்வுகள் உட்பட பல்வேறு செயல்பாடுகளுக்கு தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருந்தது. இந்த கட்டுப்பாடுகள் மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் மாநிலத்தில் உள்ள 92% … Read more

மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல – இலங்கை பிரதமர் அலுவலகம்

கொழும்பு: இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல என்று இலங்கை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. … Read more

தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு…

தமிழகத்தில் இன்று புதிதாக 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்தது, இன்று 9 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 32 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பி இருக்கிறார்கள். 275 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர். 27 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு ஏதும் இல்லை, செங்கல்பட்டு கன்னியாகுமரி, திருவாரூர், தூத்தூக்குடி ஆகிய நான்கு மாவட்டங்களில் தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர், … Read more

இடியட் : சினிமா விமர்சனம்

‘தில்லுக்கு துட்டு’ முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இயக்கிய ராம்பாலாவின் மூன்றாம் படம் இது. மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, ரவி மரியா, ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநரின் முதல் இரண்டு படங்களைப்போலவே தான் இதுவும் இருக்கிறது. தில்லுக்கு துட்டு 3 என வைத்திருக்கலாம். முந்தைய இரண்டிலும் சந்தானம் நாயகன். இதில் மிர்ச்சி சிவா நாயகன் என்பதால் தலைப்பை மாற்றி விட்டார்கள் போலிருக்கிறது. … Read more

தமிழகத்தின் உரிமையை காக்கவே டெல்லிக்கு சென்றேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் உரிமையை காக்கவே நான் டெல்லிக்கு சென்றேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், முதல் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தால், கண்டிப்பாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நிச்சயமாக உறுதியாக கலைஞர் சாதித்த வழியில் நானும் சாதிப்பேன் என்பதை நம்பிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. தமிழ்நாட்டு … Read more

‘காரி’: சசிகுமாரின் அதிரடி கிராமிய படம்!

உலகம் நவீனமயமாகி விட்டது என சொல்லிக்கொண்டாலும், கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மண்மணம் மாறாமல் சுமந்து வரும் படங்களுக்கு மக்களிடம் வரவேற்பு குறைவதே கிடையாது. அந்த வகையில், ஈரமும், வீரமும் மாறாத கிராமத்து மனிதர்களை ரத்தமும், சதையுமாக திரையில் பிரதிபலிப்பவர் சசிகுமார். அந்தவிதமாக மீண்டும் கிராம பின்னணியில் பிரம்மாண்டமான, ஆக்ஷன் மற்றும் ஜனரஞ்சக படமாக உருவாகிறது ‘காரி’ என்கிற புதிய படம். கதை நாயகன் சசிகுமாருக்கு இணையாக – கதாநாயகியாக தோன்றுபவர் பார்வதி அருண். இவர் மலையாளத்தில், ‘செம்பருத்திப்பூ’, … Read more

ஜீ 5 தயாரிப்பில் பிரகாஷ்ராஜின் ‘அனந்தம்’ டீசர்: யுவன் வெளியிட்டார்!

‘அனந்தம்’ இணைய தொடர், 2022 ஏப்ரல் 22 ஜீ5 தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது ! மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பிரியா வி, இயக்கத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பில், எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடர். ‘அனந்தம்’. 1964 – 2015 வரை ஒரு வீட்டில் வாழ்ந்த நபர்களின் வாழ்வில் நடந்த, ஆச்சரியம், துரோகம், வெற்றி, காதல், சிரிப்பு, என உணர்ச்சிகரமான தருணங்களை, பொழுதுபோக்குடன் தரும் ஒரு அழகான இணைய தொடர். குடும்பத்தில் இருந்து பிரிந்த மகன், மீண்டும் தன் … Read more