வருமானத்தை மீறிய சொத்து: திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவு ரத்து…

சென்னை: வருமானத்தை மீறி சொத்து  குவித்த வழக்கில் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை விடுவித்த கீழமை நீதிமன்ற உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒவ்வொரு முறை ஆட்சி மாற்றம் ஏற்படும்போதும், ஆட்சியாளர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்படுகிறது. இதனால், அவர்கள் வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்டு வந்தார்கள். அதன்படி, தற்போதைய திமுக அமைச்சர்கள் பலர் வழக்கில் இருந்து விடுதலை பெற்றிருந்தனர். இதை கண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், … Read more

விசிக எம்எல்ஏ நிலத்தின் மின்வேலியில் சிக்கி இளைஞர் பலி! செங்கல்பட்டு அருகே பரபரப்பு…

சென்னை: செங்கல்பட்டு அருகே  வசித்துவரும் விசிக எம்எல்ஏவான,  செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபாவுக்குச் சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வசுவசமுத்திரத்தை சேர்ந்த குணசேகரன் என்பவர், உறவினரின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியை மிதித்ததில் குணசேகரன் பரிதாபமாக உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதியின் விசிக எம்எல்ஏ பனையூர் மு.பாபு. இவர் மீது கண்ணெல்லாம் புண்ணாகும் அளவுக்கு … Read more

பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயக்கம் காட்டக் கூடாது! திருமா கூற்றுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி பதிலடி….

சென்னை: பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தயக்கம் காட்டக் கூடாது என்றும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதிகளை மீட்பதன் மூலம் மட்டுமே இந்திய மக்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பு கிடைக்கும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறி உள்ளார். பாகிஸ்தான்மீது தாக்குதல் நடத்தக்கூடாது என விசிக தலைவர் திருமா கூறி வரும் நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சில கேள்விகளை … Read more

ஆட்​சேபனையற்ற நிலத்​தில் வசிக்கும் 86,071 பேருக்கு மனைப்​பட்டா! தமிழ்நாடு அரசு அரசாணை வெளி​யீடு

சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகளும் திருத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து வருவாய்த்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில்,  குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது … Read more

போருக்கு ஆயத்தம் : அரபிக் கடலில் இந்திய ஏவுகணை சோதனை

டெல்லி பாகிஸ்தானுடன் போர் புரிய ஆயத்தமாக அரபிக்கடலில் இந்திய போர் கப்பல்களில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது/ காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு குற்றம்சாட்டி பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் உடனான சிந்துநதி நீர் ஒப்பந்தம் ரத்து, நாட்டில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவு, அட்டாரி-வாகா எல்லை மூடல் உள்ளிட்ட … Read more

கோ டையை முன்னிட்டு மதுரை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்

மதுரை கோடை கால கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை – பெங்களூரு இடையே சிற[[இ ரயில்  இயக்க;ப்படுகிறது/ தென் மேற்கு ரயில்வே, ”கோடை காலத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, மதுரை – பெங்களூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் பெங்களூரு – மதுரை செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண்: 06521) வருகிற ஏப்ரல் 30 தேதி இயக்கப்படும். இந்த ரயில் பெங்களூரில் இருந்து (புதன்கிழமை) இரவு 7 மணியில் புறப்படும். மறுமார்க்கத்தில் மதுரை – … Read more

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி… அமைச்சரவை இலாகா மாற்றம்…

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. மின்சாரத்துறை சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது, மதுவிலக்கு துறையை அமைச்சர் முத்துசாமி கூடுதலாக கவனிப்பார் என அறிவிப்பு. மனோ தங்கராஜ் மீண்டும் புதிய அமைச்சரவையில் இடம்பெறுகிறார் பால்வளத் துறை ஒதுக்கீடு.

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா…

தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் … Read more

விசா காலம் முடிந்தும் 46 ஆயிரம் வெளிநாட்டினர் உள்ளனர்… பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவு…

விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். காஷ்மீரிலுள்ள பஹல்காமில் இம்மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் … Read more