தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… அமைச்சர்கள் பொன்முடி, செந்தில்பாலாஜி ராஜினாமா…

தமிழக அமைச்சரவையிலிருந்து அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செந்தில்பாலாஜி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டார். அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக ஒதுக்கீடு வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஏமன் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்… 2 பேர் பலி பலர் காயம்…

ஏமனில் இன்று அதிகாலை அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 10 பேர் படுகாயமடைந்தனர். இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர். ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் … Read more

விசா காலம் முடிந்தும் 46 ஆயிரம் வெளிநாட்டினர் உள்ளனர்… பாகிஸ்தானியர்களுக்கு விதிக்கப்பட்ட கெடு இன்றுடன் முடிவு…

விசாகாலம் முடிந்த பின்னரும் பாகிஸ்தானியர்கள், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் ஆப்பிரிக்கர்கள் என 46 ஆயிரம் வெளி நாட்டினர் உள்ளனர் என்றும் அதில் பலர் தமிழ்நாட்டில் தங்கியுள்ளனர் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். தண்டபாணி கூறியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாக கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். காஷ்மீரிலுள்ள பஹல்காமில் இம்மாதம் 22-ஆம் தேதி பிற்பகல் எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள் … Read more

மீண்டும் அமைச்சராகிறார் மனோ தங்கராஜ்….

சென்னை:  முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. நாளை மாலை மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார். பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு மக்களிடையே கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில்,   அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு உள்ளது. அதுபோல,  சட்டவிரோத பணி மாற்ற வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமின் காரணமாக மீண்டும் அமைச்சராக செந்தில் பாலாஜி,  தனது அமைச்சர் பதவியை ரத்து செய்ய வேண்டும்  இல்லையேல் ஜாமின் ரத்து செய்யப்படும் என … Read more

முதல்வரின் தாயார் தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை:  மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் மனைவியும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயாா் தயாளு அம்மாள் (வயது 92) உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  இது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது. 92வயதாகும் தயாளு அம்மள் வயது முதிர்வு காரணமாக வீட்டில் ஓய்வுபெற்று வந்த நிலையில்,  கோபாலபுரம் இல்லத்தில் இன்று  அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு  ஏற்பட்டது. இதன் காரணமாக,  சென்னையில் உள்ள தனியார் ம ருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.  அங்கு அவருக்கு மருத்துவக் குழுவினர் தொடா் … Read more

இனி பாகிஸ்தானுக்கு ஒரு நுலி நீர் கூட செல்லாது : மத்திய அமைச்சர்

டெல்லி இனி பாகிஸ்தானுக்கு ஒரு துஇ நீர் கூட செல்லாது என மத்திய அமைச்சர் சி ஆர் பாட்டில் தெரிவித்துள்ளார்/ சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் கட்டப்பட்ட அணைகளின் நீர் இருப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா-பாகிஸ்தான் இடையே சிந்து நதிப் படுகையில் உள்ள 6 நதிகளின் நீர் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.ய நேற்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இந்திய … Read more

நாளை முதல் ;புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை  விடுமுறை

புதுச்சேரி நாளை முதல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. புதுச்சேரி மாநில அமைச்ச்சர் நமச்சிவாயம், ”அதிகரித்து வரும் கடும் கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் நாளை (28.04.2025) முதல் வரும் ஜூன் மாதம் (01.06.2025) ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது. மீண்டும் பள்ளிகள் ஜூன் மாதம் (02.6.2025) தேதி முதல் வழக்கம் போல் … Read more

காஷ்மீர் பயங்கரவாத தாகுதல் குறித்து என் ஐ ஏ விசாரணை தொடக்கம்

டெல்லி காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து என் ஐ ஏ தனது விசாரணையை தொடங்கி உள்ளது. கடந்த 22 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் … Read more

மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க  அனுமதி

சென்னை மத்திய அரசு தமிழக ஆழ்கடல் பகுதிகளில் எண்ண்ய் மற்றும் எரிவாயு எடுக்க  அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு தமிழகத்தின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு சு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தி 4 வட்டாரங்கள் உட்பட இந்தியாவில் 28 வட்டாரங்களில் எண்ணெய் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கன்னியாகுமரிக்கு அருகே ஆழ்கடலில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே 1 இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெள்ள அபாய எச்சரிக்கை… சிந்து நதியின் மதகுகளை இந்தியா திடீரென திறந்துவிட்டதாக பாக். குற்றச்சாட்டு…

சிந்து நதியில் ஒரு துளி தண்ணீர் கூட பாயாது என்று இரண்டு நாட்களுக்கு முன் இந்தியா கூறிய நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்தியா திடீரென ஜீலம் நதி நீரை விடுவித்ததே இதற்கு காரணம் என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. சனிக்கிழமை இந்தியா எந்த முன் தகவலும் இல்லாமல் திடீரென ஜீலம் நதியில் தண்ணீரை திறந்துவிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது, இதனால் … Read more