இலங்கையர்களை இலக்கு வைத்து மோசடி! – நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவிப்பு

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா மற்றும் வேலை வாய்ப்பு மோசடிகள் தொடர்பான அறிவிப்பை நியூசிலாந்து வெளியிட்டுள்ளது. இலங்கையில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையர்களை குறிவைத்து நியூசிலாந்திற்கு மோசடியான விசா மற்றும் வேலை வாய்ப்புகள் குறித்து பல அறிக்கைகள் கிடைத்துள்ளதாக நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மோசடிகள் குறித்து சந்தேகிக்கும் இலங்கையர்கள் நியூசிலாந்தில் உள்ள நிறுவனத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ளுமாறு உயர்ஸ்தானிகராலயம் மேலும் அறிவுறுத்தியுள்ளது. சுதந்திரமான சட்ட ஆலோசனையைப் பெறவும் அல்லது … Read more

ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்!

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக பெண்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையிலான சமகி வனிதா பலவேகயவினால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்ததன் பின்னர் குறித்த குழுவினர் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். நாட்டு மக்கள் படும் இன்னல்களை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.   This is outside the residence of … Read more

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதியின் முக்கிய உத்தரவு

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளார். அதன்படி நெல் கையிருப்பை பிணையாக வைத்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – 2, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை நேற்றைய தினம் பார்வையிட்ட போதே அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், போட்டித் தன்மையுடன் … Read more

தேநீர் குடிக்க நான் வரவில்லை; எனது நியமனத்திற்கு இதுவே காரணம் – அங்கஜனுக்கு கீதநாத் பதிலடி

யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்தவே யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் பிரதமரின் நேரடிப் பணிப்பின் பேரில் நான் நியமிக்கப்பட்டிருக்கின்றேனே தவிர தேநீரும், வடையும் சாப்பிட்டுச் செல்வதற்கல்ல என யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் பிரதமரின் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காசிலிங்கம் கீதநாத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “எனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார வரம் என்பது பிரதமரூடாக … Read more

கடும் கலக்கத்தில் இலங்கை ஆட்சியாளர்கள்! அம்பலமாகவுள்ள பல ரகசியங்கள்

சமகால அரசாங்கத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ள பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சூளுரைத்துள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் பாரிய ஊழல்கள் அனைத்தையும் அடுத்த வாரத்தில் இருந்து அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் அம்பலப்படுத்த தீர்மானித்துள்ளனர். தற்போது நாடு நெருக்கடியான கட்டத்தில் உள்ளது. இது எவ்வாறு ஏற்பட்டது. தங்களை பதவி விலக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பது தொடர்பான தகவல்களை மக்களுக்கு தெளிவுபடுத்தவும் முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் நாடு முழுவதும் பாரிய பேரணிகள் … Read more

அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்

பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்ளதாகவும், அங்கு தான் அவரின் சொத்துக்கள் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன், அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பணச் சலவை குற்றச்சாட்டில் பசிலை கைது செய்ய முடியும். அது நடக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிற்காக அவர் பணியாற்ற வேண்டும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, அமைச்சரவையில் நடந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை எதிர்காலத்தில் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். … Read more

நாளை மறுதினம் பாடசாலை ஆரம்பம்! வெளியானது புதிய அறிவிப்பு

நாளை மறுதினம் (07) முதல் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், மீண்டும் மாணவர்களை குழுக்களாக பாடசாலைக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.  அதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட வேண்டும் என்றும், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகளை 3 சம பிரிவுகளாக பிரித்து … Read more

இலங்கையில் ஒரு டொலருக்கு 240 ரூபா! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் ஒரு அமெரிக்க டொலருக்கு குறைந்தது 240 ரூபாவை செலுத்துவதற்கான யோசனையொன்று அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.  இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் வெளிநாட்டில் உள்ளவர்கள் இலங்கையில் உள்ள தங்களது குடும்பங்களுக்கு அதிக பணம் அனுப்புவது வழக்கம். எவ்வாறாயினும், இலங்கையில் நிலவும் தற்போதைய சூழலில் பல வெளிநாட்டு பணியாளர்கள் தமது பணத்தை … Read more

தாமதமாக வந்த மாப்பிள்ளை! தாறுமாறாக பாடம் கற்பித்த மணப்பெண்

பொதுவாக திருமணங்களில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. அதேபோன்று, தற்போது மணமக்கள் கோபப்பட்டு அடிதடியில் முடியும் காட்சி அதிகமாக வலம் வருகின்றது. தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் ஒரு வீடியோவிலும் இதே போன்ற ஒரு சண்டையைக் காண முடிகின்றது. ஆசையாக மணமகள் காத்திருக்க மணமகன் திருமண மண்டபத்துக்கு மிகவும் தாமதமாக வருகிறார். இதனால் கடுப்பான மணமகள் திருமணத்திற்கு வந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் முன்பு அவர் மீது கோபப்படுகிறார். மணமகளின் கோவத்தால் ஆத்திரமடையும் மணமகனும் மணமகள் மீது கோபம் கொள்கிறார். … Read more

இலங்கையை விட்டு வெளியேறும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்

பல்வேறு காரணங்களுக்காக அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இலங்கை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில காரணங்களால் சிலர் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க மூன்று மாதங்களுக்கு ஜப்பானுக்கு சென்றுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சாவும் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். ரொஷான் ரணசிங்கவிற்கு மூன்று மாத விடுமுறையில் செல்ல நாடாளுமன்றம் அண்மையில் அனுமதி வழங்கியது. அமைச்சின் செயற்பாடுகளால் விரக்தியடைந்துள்ள நிமல் லன்சா, சில … Read more