இலங்கை: அதிபரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லாத் தீர்மானம்… எதிர்க்கட்சிகள் கையெழுத்து!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். விலைவாசி அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அதிபரை எதிர்த்து இலங்கை மக்கள் விடிய விடிய கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. WITHOUT CHANGE, WE WILL NOT STOP. @sjbsrilanka … Read more

சிறுநீர்க்குழாயில் கேன்சர்; அதிநவீன ரோபாட்டிக் சர்ஜரி; அரசு மருத்துவமனை சாதனை!

கொரோனா பரவ ஆரம்பித்த காலத்திலிருந்து அரசு மருத்துவமனைகளின் மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ‘கவர்ன்மென்ட் ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா காசும் பிடுங்க மாட்டாங்க; உயிரையும் காப்பாத்திக் கொடுத்திடுவாங்க’ என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டிருக்கிறது. தவிர, அரசு மருத்துவமனைகளில் செய்யப்படுகிற நவீன சிகிச்சைகள்பற்றி அவ்வப்போது வெளிவருகிற செய்திகள் மக்களின் நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்திக்கொண்டிருக்கின்றன. அப்படியான செய்திகளில் ஒன்றுதான், சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் செய்யப்பட்டிருக்கும் சாதனை. திருப்பத்தூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு அங்கு ‘அதிநவீன இயந்திர மனிதவியல் … Read more

இரட்டை இலை வழக்கு: யார் இந்த சுகேஷ்?… தினகரனிடம் கேட்கப்பட்டக் கேள்விகள் என்ன?!

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது, சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகிறது அமலாக்கத்துறை. பல மாதங்கங்களுக்குப் பிறகு இந்த வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கிருக்கிறது. இந்த நிலையில், இடைத்தரகர் சுகேஷ் யார்? தினகரன் சிக்கினாரா இல்லை… சிக்கவைக்கப்பட்டாரா? போன்ற கேள்விகளை அ.ம.மு.க மூத்த நிர்வாகியும், வழக்கறிஞருமான ஒருவரிடம் கேட்டோம். பெயர் வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசத்தொடங்கினார். “வழக்குக் குறித்து அறிந்துகொள்ள சற்று பின்னோக்கிச் செல்ல வேண்டும். … Read more

ஏக்கருக்கு ரூ.1 லட்சம் பட்டு வளர்ப்பில் விருதுகளைக் குவிக்கும் தேனி விவசாயி; எப்படி தெரியுமா?

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டியுள்ள தேனி மாவட்டத்தில் நிலவும் சீரான சீதோஷ்ண நிலை பட்டு விவசாயத்துக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. தேனி, போடி, சின்னமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ,000 ஏக்கர் பரப்பில் மல்பெரி சாகுபடி நடைபெற்று வருகிறது. இதன்காரணமாக, பட்டு உற்பத்தியில் தேனி மாவட்டம் மாநில அளவில் 2 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் பட்டு வளர்ப்பில் மாநில அளவில் தேனி மாவட்டம் போடி அருகே கூழையனூரைச் சேர்ந்த சின்னன் முன்னோடி விவசாயியாகத் திகழ்ந்து … Read more

உலகம் போற்றும் தெய்வமரம் – மருத்துவ குணமுடைய உத்தால மரத்தில் மலர்ந்திருக்கும் பூக்கள்!

குத்தாலம்  ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய உத்தால மலர் பூத்துக் குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசித்து வருகின்றனர். உத்தால மரத்தில் பூக்கள் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இத்தலத்தில் சிவபெருமான், பார்வதி தேவியைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதிகம். இத்தலத்தில் சுவாமி, அம்பாளை வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கித் திருமணம் கைகூடும் என்பது … Read more

“பாஜக உறுப்பினர் தற்கொலை வழக்கு; அமைச்சர் மீது வழக்கு பதிவு!" – முதல்வர் பசவராஜ் பொம்மை தகவல்

கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய சந்தோஷ் பட்டீல் என்பவர் உயிரிழந்த விவகாரத்தில், ஈஸ்வரப்பா அவர் உதவியாளர்கள் 2 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பா.ஜ.க உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான சந்தோஷ் பட்டீல் என்பவர், பெலகாவியின் ஹிகால்டோ கிராமத்தில் சாலை அமைப்பதற்கு ரூ.4 கோடி கமிஷன் கேட்டதாகக் கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு கூறியிருந்தார். சந்தோஷ் பட்டீல் அதனைத்தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை முதல் … Read more

23YearsOfPadaiyappa:` நான் வந்துட்டேன் கண்ணா'னு ரஜினி சார் சொன்னார்- படப்பிடிப்பு பற்றி ரமேஷ்கண்ணா

ரஜினி, ரம்யாகிருஷ்ணன், கே.எஸ்.ரவிகுமார் என பலருக்கும் ‘படையப்பா’ ரொம்பவே ஸ்பெஷல் படம்தான். ‘என் வழி… தனி வழி…’, ‘ஆண்டவனே நம்ம பக்கம்தான் இருக்கான்’ போன்ற எவர்க்ரீன் வசனங்கள் கொண்ட ‘படையப்பா’ படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆகிறது. அதில் படையப்பாவாக ரஜினி கம்பீரமென்றால்.. நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் மிரட்டலாக நடித்திருந்தார். ரஜினியிடம் அவர் சொல்லும் ‘எல்லாருக்கும் உன்ன ஏன் பிடிச்சிருக்கு தெரியுமா.. வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் உன்னை விட்டு போகல’ டயலாக், இப்போதும் சமூக … Read more

"என்னுடைய தரப்புக்கு வாய்ப்பு கிடைக்கும்" – வில் ஸ்மித் விவகாரம் குறித்து கிறிஸ் ராக்!

கிறிஸ் ராக் ஆஸ்கர் சம்பவத்துக்குப் பிறகு அதனைப் பற்றி விரிவாக எங்கும் பேசவில்லை. இத்தனைக்கும் `Ego Death World Tour’ என்கிற பெயரில் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிகளைப் பல நகரங்களில் நடத்திவருகிறார். வில் ஸ்மித் கிறிஸைத் தாக்கிய சம்பவம் நடந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நடுவில் ஒரு முறை மட்டுமே அதனைப் பற்றி காமெடி நிகழ்ச்சிக்கு நடுவில் பேசினார் கிறிஸ் ராக். தற்போது கலிபோர்னியாவில் நடந்த காமெடி நிகழ்ச்சியில் தான் ஏன் அதைப் பற்றிப் பேசுவதில்லை … Read more

Beast : "நாம என்ன எடுத்திருக்கோம் என்பது நமக்குத்தெரியும்" – படம் குறித்து நெல்சன் நேர்காணல்

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன். இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள பீஸ்ட் படம் உருவான விதம் குறித்து அவர் அளித்துள்ள நேர்காணல் இதோ… “விஜய் ரசிகர் டு விஜய் பட இயக்குநர். இந்தப் பயணம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?” இயக்குநர் நெல்சன் “நான் முதன்முதலில் தியேட்டரில் சென்று பார்த்த விஜய் படம் துள்ளாத மனமும் துள்ளும். அதன்பின் நீண்ட நாள் கழித்து வசீகரா பார்த்தேன். வசீகராவிலிருந்து தொடர்ந்து அவர் … Read more

`நாகாலாந்துல நாய்க்கறி சாப்பிடுவாங்களாம், பார்த்துக்கப்பா!' – வழியனுப்பிய குரல்கள் – Back பேக் – 2

இரண்டு மணிநேரத் தூக்கத்துக்குப் பிறகு 12.30 மணிவாக்கில் எழுந்தேன். அந்த குட்டித்தூக்கம் ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்திருந்தது. எல்லாமே புதிதாகத் தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் நண்பன் மனோஜிடமிருந்து அழைப்பு வந்தது. நாகாலாந்து செல்கிறேன் என முகநூலில் பதிவிட்டிருந்ததைப் பார்த்த பிறகுதான் கூப்பிடுகிறான் என்பது புரிந்தது. பயணத்தைப் பற்றிய விசாரிப்புகள் மற்றும் தனிப்பட்ட கதைகளையெல்லாம் பேசி முடித்த பின்பு “பார்த்து ஜி… நாகாலாந்துல நாய்க்கறியை மிக்ஸ் பண்றாங்களாம்… அதனால வெஜிடேரியன் ஹோட்டல்லயே சாப்பிடுங்க” என்றான். “இது என்னடா புதுப்புரளியா இருக்கு” … Read more