வெள்ளைநிற மான்,வங்கப்புலி ரூ.235 கோடி மதிப்புடைய பதப்படுத்திய விலங்குகள்; ஸ்பெயினை அதிரவைத்த மனிதன்
ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் பல்வேறு பதப்படுத்தப்பட்ட விலங்குகளைத் தனக்குச் சொந்தமான இடத்தில் சேகரித்து வைத்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிழக்கு வெலன்சியா (Valencia) பகுதியைச் சேர்ந்த ஒருவர் 1000 -க்கும் மேற்பட்ட பதப்படுத்தப்பட்ட விலங்குகளைச் சேகரித்து வைத்துள்ளார். இதில் 400 பாதுகாக்கப்பட்ட உயிரினங்களும்,ஒரு அழிந்த உயிரினமும்(Extinct organism) அடங்கும். பெடரா (Betera) என்ற இடத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் இந்த விலங்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 50,000 ச.மீ பரப்பளவு கொண்ட இந்த … Read more