10 மாவட்டங்களில் மழை… சூறைக்காற்று – வானிலை ஆய்வு மையத்தின் புதிய அலெர்ட்

இதுகுறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த மூன்று தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதன் காரணமாக, இன்றும் நாளையும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20.12.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21.12.2022: … Read more

காதலியுடன் ஜாலியாக வாழ… மனைவிக்கு HIV ரத்தத்தை ஊசி போட்ட கணவர்

ஆந்திரா மாநிலம் விஜயவாடா மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரண் (40). இவர் மீது அவரின் மனைவி நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.  தான் ஹெச்ஐவி வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளது, மருத்துவப் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டதாக அந்த பெண் புகாரில் தெரிவித்துள்ளார். தனக்கு ஹெச்ஐவி வைரஸ் நோய் ஏற்பட்டதிற்கு கணவரின் சதிச்செயல்தான் காரணம் எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.  ஒருமுறை உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ளவதற்கு எனக்கூறி, ஊசி ஒன்றை கணவர் தனக்கு … Read more

நாய் மீது தேசிய கொடி போர்த்தி அவமரியாதை… தேனியில் ஷாக்!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதில் உள்ள காயிதே மில்லத் நகர்  பகுதியில் தெருவில் சுற்றித் திரிந்த நாயின் உடம்பில் தேசியக் கொடியை  அடையாளம் தெரியாத நபர்கள் கட்டி விட்டுதால் பெரியகுளம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும்  தேசியக்கொடி புனிதமாக கருந்தும் மக்களின் எண்ணங்களை இழிவுபடுத்தும் வகையில் அடையாளம் தெரியாத நபர் இவ்வாறான செயலில் ஈடுபட்டு இருப்பது பெரியகுளம் பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே மன வருத்தத்தை வேதனையையும்  ஏற்படுத்தியுள்ளது. மேலும், நகராட்சி … Read more

ராகுல் காந்தியுடன் கை கோர்க்கிறார் கமல் ஹாசன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கல் கூட்டம் இன்று சென்னை அண்ணா நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூட்டமானது இன்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் வரும் 24ஆம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ … Read more

பீகார் பாலம் விபத்து அம்பலம்! 5 ஆண்டுகளாக யாருக்காக காத்துக் கொண்டிருந்தது பாலம்?

பெகுசராய்: 14 கோடி செலவில் கண்டக் பகுதியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது. கந்தக்கில் பகுதியில் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை (டிசம்பர் 18, ஞாயிற்றுக்கிழமை) பாலம் இடிந்து விழுந்தது குறித்த தகவல் கிடைத்ததும் பல்லியா எஸ்டிஓ ரோஹித் குமார், எஸ்டிபிஓ குமார் வீர் திரேந்திரா, சிஓ சதீஷ்குமார் சிங், சிஐ அகிலேஷ் ராம் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ … Read more

சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?… அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தான் கையில் கட்டியிருக்கும் வாட்ச், ரபேல் விமானங்களை இந்தியா ஆர்டர் செய்தபோது, அந்த விமானத்தின் பாகங்களை வைத்து செய்யப்பட்டது. 500 வாட்ச்களில் 149ஆவது வாட்ச் தன்னுடையது என்று கூறியிருந்தார். அண்ணாமலையின் பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது. மேலும் தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் … Read more

Avatar : The way of Water – 2 நாள்களில் இமயம் தொட்ட அவதார் 2 ; வசூலில் பெரும் சாதனை!

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் கடந்த டிச. 16ஆம் தேதி வெளியானது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது.  உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம்இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் … Read more

Maha Shivarathri 2023: ஈஷா யோக மையத்தின் சிவராத்திரி! ஓசூரில் ஆதியோகி சிவன் ரதம்

ஓசூர்: ஓசூரில் ஆதியோகி சிவன் ரதம். சிவபெருமானே மகா சிவராத்திரிக்கு அழைப்பு விடுத்து செல்லும் ரத ஊர்வலம் துவங்கியது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி அன்று கோயமுத்தூர் வெள்ளியங்கிரி மலையில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிவபெருமான் முன்பு மகாசிவராத்திரி பெருவிழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது.  இதற்காக இறை அன்பர்களை அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி ஆன சிவபெருமானே ஒவ்வொருவரையும் அழைப்பு விடுக்கும் விதமாக ஆதியோகி சிவன் … Read more

Money in the bank and Bank is the boss…'காசேதான் கடவுளடா' – வெளியானது துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. முதல் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக கலவையான கமெண்ட்ஸ்களையே பெற்றன. இதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. எனவே ஏகே ரசிகர்கள் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வினோத்தின் சமீபத்திய பேட்டிகளும் எதிர்பார்ப்பை … Read more

தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் ஜாக்கிரதை – அமைச்சரை எச்சரித்த முதலமைச்சர்

பால்வளத்துறை அமைச்சர் நாசரின் மகன் திருமணம் திருவேற்காடு அருகே நடந்தது. இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். மேலும் திருமாவளவன், முத்தரசன் உள்ளிட்டோரும் திருமணத்தில் பங்கேற்றனர். திருமணத்திற்கு முதலமைச்சர் தலைமை தாங்கினார். அமைச்சர் நாசரும், அவரது மனைவியும் முதலமைச்சருக்கும், துர்கா ஸ்டாலினுக்கு மரியாதை செய்தனர். இதனையடுத்து விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகன் திருமணத்தை பிரம்மாண்டமாக நடத்த வேண்டாம். அவ்வாறு நடத்தினால் சிலர் விமர்சிப்பார்கள். நாம் தும்மினால் கூட … Read more