கட்சியிலிருந்து என்னை துரத்துவதே லட்சியமா? தமிழக பாஜகவினரை திட்டும் காயத்ரி ரகுராம்

சென்னை: ”பாஜகவில் இருந்து என்னை துரத்துவதுதான் உங்கள் லட்சியமா? தொடர்ச்சியான தாக்குதல். பிறகு நான் எப்படி ஒரு தலைவரைப் பின்பற்றுவது? இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்கும் போது.. எப்படி? இந்த உத்திகளை நான் 8 ஆண்டுகளாக எதிர்கொண்ட நிற்கிறேன். நான் இன்னும் வலுவான பாஜக காரியகர்த்தா மட்டுமே” என்று காயத்ரி ரகுராம் போட்ட டிவிட்டர் பதிவு வைரலாகிறது. என்மீது சுமத்தப்படும் எல்லாப் பழிகளையும் நான் அறிவேன். பலர் முன்னாள் உளவுத்துறை அதிகாரிகளாக இருப்பதால், அனைத்து திணிக்கப்பட்ட IB அறிக்கைகளும் … Read more

NO PEN PLEASE: சட்டசபை வளாகத்திற்கு பேனா கொண்டு வர தடை விதித்த மாநிலம்!

நியூடெல்லி: மகாராஷ்டிரா அமைச்சர் மீது மை தாக்குதல் நடத்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மாநில சட்டப்பேரவை கூடுதல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதன்படி, மாநில சட்டசபை வளாகத்திற்குள் மை பேனா கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டசபைக்குள் நுழைவதற்கு முன் பேனா சரிபார்க்கப்படும் மகாராஷ்டிர மாநில குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளான நேற்று (2022 டிசம்பர் 19), சட்டசபைக்குள் நுழையும் அனைத்து நபர்களின் பேனாக்களும் சோதனை செய்யப்பட்டன. குளிர்கால கூட்டத்தொடருக்காக சட்டசபைக்குள் நுழையும் எம்எல்ஏக்கள் மற்றும் … Read more

நயன்தாராவின் கனெக்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது முந்தைய படங்களில் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், அந்த வகையில் அவர் நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இடைவெளி இல்லாமல் 99 நிமிடம் படம் என்ற ஒரு புதிய முயற்சியில் பட குழு இறங்கி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பாக இடைவெளி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் படக்குழு இடைவேளை … Read more

700 ரூபாய்க்காக நடந்த கொடூர கொலை! வெளிவந்த அதிர்ச்சி சம்பவம்!

சேலையூர் அருகே மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட கிறிஸ்தவ பெண் போதகரை 700 ரூபாய் பணம், சாதா செல்போனுக்காக கொலை செய்தது போலீஸ்சாரின் பல்வேறு கட்ட  விசாரனையில் தெரிய வந்து கொலையாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  சேலையூர் அடுத்த அகரம் தென் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பெண் போதகர் எஸ்தர்(51), ஜீன் மாதம் மதுரபாக்கம் வனப்பகுதியில் எலும்புகூடாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் மர்ம மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.  அவரில் செல்போன் காணமல் போன … Read more

அஜித் உங்களுக்கு வீடுகட்டி தரப்போறாரு! – துணிவாக மோசடி செய்த நபர் ; ஏமாந்த ரசிகர்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐயப்பன் – ராஜேஸ்வரி தம்பதியினர். ஐயப்பன் தீவிரமான அஜித் ரசிகர் என்று கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்டு திருநெல்வேலி மாவட்டம் தாளையத்து பகுதியைச் சேர்ந்த சிவா என்பவர், தான் அஜித் ரசிகர் மன்ற தலைவரின் மேலாளர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி நம்ப வைத்துள்ளார்.  மேலும், நடிகர் அஜித் அவர்கள் கஷ்டப்படும் ரசிகர்களுக்கு மாவட்டம் வாரியாக கணக்கெடுத்து 15 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டி தருவதாக ஆசை … Read more

ட்விட்டர் வாக்கெடுப்பில் எலான் மஸ்க் தோல்வி – சம்மதிப்பாரா… சமாளிப்பாரா?

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை, 44 கோடி அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க், கடந்த மாதம் அதன் தலைமை பொறுப்பை ஏற்றார். அவர் ட்விட்டரின் நிறுவனத்தின் அந்த உச்ச பொறுப்பை ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்களையும், செயல்பாட்டையும் மேற்கொண்டார்.  ஆட்குறைப்பு, ப்ளூ டிக் வெரிபிகேஷனுக்கு கட்டணம் உள்ளிட்டவை பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. எலான் மஸ்கின் இதுபோன்ற செயல்பாடுகளை நெட்டிசன்கள் பெரிதாக ரசிக்கவில்லை என்றே கூறப்பட்டது. அவரை பகடி செய்து நாள்தோறும் பல்வேறு மீம்கள் … Read more

மலிவான கட்டணத்தில் விமான டிக்கெட்டுகள் வாங்க ஜோதிராதித்ய சிந்தியா வழங்கிய டிப்ஸ்!

விமான போக்குவரத்து என்பது தற்போது நடுத்தர மக்களும் அதிக  பயன்படுத்தும் போக்குவரத்தாக மாறி விட்டது. இந்நிலையில், மலிவான விமான டிக்கெட்டுகளை வாங்குவதற்கான வழியை சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தெரிவித்தார். ராஜ்யசபாவில் ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், சீசனை பொறுத்து விமான டிக்கெட் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்றும்,  பயணிகள் திட்டமிட்டு, அதிக விலையில் இருக்கும் சீசன் காலத்தை கணக்கிட்டு முன்பதிவு செய்து குறைந்த விலையில் டிக்கெட் வாங்கலாம் என்றார். மாநிலங்கள் அவையில் … Read more

அஜித்தை பின்பற்றும் விஜய்…? வருகிறது வாரிசு படத்தின் 3ஆவது பாடல்!

பீஸ்ட் படத்தின் தோல்விக்கு பிறகு வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் வாரிசு. பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே ஏகப்பட்ட பிரச்னைகளை சந்தித்துவருகிறது.  இருப்பினும், படம் குறித்த எதிர்பார்ப்பு ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்றுதான் கூற வேண்டும். வரும் டிச. 23ஆம் தேதி வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், வழக்கமாக இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயின் பேச்சுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவும் … Read more

கடலில் மிதக்கும் நகரம்; ராட்சஸ கடல்மீன் வடிவில் 7000 பேர் வசிக்க கூடிய அதிசய நகரம்!

மிதக்கும் நகரம்: உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டியுள்ளது. நிலத்தில் வாழக்கூடிய இடம் குறைந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், எதிர்கால ஆப்ஷன்கள் குறித்த ஆராய்ச்சிகளும் விவாதங்களும் தொடங்கியுள்ளது. மனிதன் இப்போது மிதக்கும் நகரங்களில் வாழத் தயாராகிறான். இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வாழலாம். இந்த மிகப்பெரிய நகரம் ராட்சஸ  கடல் மீன் அளவில் இருக்கும். ஒரு கற்பனைப் படத்தின் நகரம் போல்  தோற்றமளிக்கும் இந்த நகரத்தில் 7000 பேர் வசிக்கலாம். கடல் அலைகளில் இது நகரும் என்பதால், … Read more

என்ஐஏ அதிகாரியாக நடித்த சென்னை பாஜக நிர்வாகி… ரெய்டு என்ற பெயரில் ரூ. 20 லட்சம் கொள்ளை!

சென்னை முத்தியால்பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால். இவர் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில்  செல்போன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த டிச. 13ஆம் தேதி ஜமால் வீட்டிற்கு ஒரு கும்பல் ஒன்று வந்துள்ளது.  அந்த கும்பல் தங்களை என்ஐஏ அதிகாரிகள் என கூறிக்கொண்டு, கோவை கார் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்ததாக தெரிவித்துள்ளது. அவர்களின் செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு வீடு முழுவதும் சோதனை செய்துள்ளது. பின்னர் பர்மா பஜாரில் … Read more