ஆறாயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் கறுவாப்பட்டை

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.  இந்த நிலையில், கறுவா, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றின் விலைகளும் வெகுவாக அதிகரித்துள்ளன. கடுமையாக உயர்ந்துள்ள விலைகள்  இதன்படி,  ஒரு கிலோ கிராம் கறுவாப்பட்டை 3,900 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் விசேட வகை கறுவா 5,000 முதல் 6,000 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் செய்கையாளர்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படுகின்றது. ஒரு கிலோ கிராம் மிளகு … Read more

மாத்தறை பிரதேச செயலாளருக்கு நிகழ்ந்த செயல் குறித்து விசாரணை

மாத்தறை பிரதேச செயலாளர் சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு சென்ற போது, ​​ சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லை என தெரிவித்து, சித்திரவதை செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதாகக்கூறப்படும் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜூன் மாதம் 25 ஆம் திகதி மாத்தறை பிரதேச செயலாளர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். மேலும் அவர் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக பல அரசாங்க … Read more

கந்தக்காட்டில் இருந்து தப்பி ஓடிய 653 பேர் கைது…

பொலன்னறுவை கந்தக்காடு பகுதியில் உள்ள சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் உயிரிழந்த  கைதியின் பெற்றோரும் சகோதரரும் தொமோதராவில் இருந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர். உயிரிழந்தது அவரது குடும்பஸ்தர் இல்லை என இவர்கள் தெரிவித்துள்ளனர். கந்தக்காடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தினால் வழங்கிய தகவல்களுக்கு அமைய, உயிரிழந்தவர் தெமோதர பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ராஜபக்ச எனவும், அவர் புனர்வாழ்வு பெற்று வருவதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பொலன்னறுவைக்கு வரவழைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைக்கு முன்னர் சடலத்தை … Read more

இலங்கை இருளில் மூழ்குவதன் பின்னணியில் நடக்கும் சதி அம்பலம்

 ஊழல் நிறைந்த சமகால அரச துறைக்குள் பல்வேறு மாபியாக்கள் செயற்பட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளன. இலங்கையில் அமுலாகும் மின்சார துண்டிப்பின் பின்னணியில் இவ்வாறான குழுக்கள் செயற்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீர்த்தேக்கங்களின் நீர் வெளியேற்றம் அண்மையில் ரந்தெனிகல, ரந்தம்பே நீர்த்தேக்கங்களின் நீரை மின் உற்பத்திக்காக பயன்படுத்தாது அதனை சட்டவிரோதமான முறையில் வெளியேற்றியதன் பின்னணியில் மாபியா குழுக்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள், நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான இரண்டு நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளார்கள். கடந்த … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு அதன் வழக்கமான சேவைகளை மீண்டும் தொடங்குகின்றது

கொன்சியூலர் சேவைகளுக்கான அதிகமான தேவையை கருத்தில் கொண்டு, இது தொடர்பான பொதுத் தேவைகளை வழங்குவதற்காக, கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு 2022 ஜூலை 04ஆந் திகதி தொடங்கி திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வார நாட்களிலும் பொதுமக்களுக்காக திறந்திருக்கும். யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களில் உள்ள பிராந்திய கொன்சியூலர் அலுவலகங்களும் இதே வேலை ஏற்பாடுகளைப் பின்பற்றும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,கொழும்பு 012022 ஜூலை 01

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லா ஏ. ஓர்கோபி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

சவுதி அரேபியத் தூதரகத்தின் பொறுப்பாளர் அப்துல்லாஹ் ஏ.ஏ. ஓர்கோபி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் (பேராசிரியர்) ஜி.எல். பீரிஸை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். இச்சந்திப்பில், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கையின் அனைத்து துறைகளிலும் அதன் பாதகமான பாதிப்புக்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் விளக்கமளித்தார். சவூதி அரேபிய இராச்சியத்துடனான எரிசக்தி ஒத்துழைப்பை மிகவும் அவசரமான விடயமாகக் கருதி, 2022 ஜூலை 02 – 05 வரை அதிமேதகு … Read more

அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் (Photos)

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மக்கள் நாடளாவிய ரீதியில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றர். மன்னார் மன்னார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து இன்று காலை 9 மணி முதல் 11.30 மணி வரை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாட்டில் உள்ள சுகாதார சேவையாளர்களுக்கான பிரத்தியேக எரிபொருள் விநியோகம் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்படுகின்ற போதும் மன்னார் மாவட்டத்தில் உள்ள சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய முறையில் … Read more

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 100,000 மெட்ரிக் டொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

நிதி அமைச்சின் கீழ் உள்ள லிட்ரோ எரிவாயு நிறுவனம், 100,000 மெட்ரிக் டொன் LP எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் நேற்று (30) கைச்சாத்திட்டுள்ளது. இவற்றிற்கான மொத்த விலை 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள். உலக வங்கி 70 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளதுடன், மீதி 20 மில்லியன் டொலர்களையும் லிட்ரோ நிறுவனம் வழங்கியுள்ளது. இவ்வாறு கொள்வளவு செய்கின்ற இந்த எரிவாயு சிலிண்டர்கள் நான்கு மாதங்களுக்கு நாட்டில் விநியோகிக்க போதுமானதாக இருக்கும். இவற்றில் 70% எரிவாயு வீட்டுப் பாவனையாளர்களுக்கு … Read more

சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடும் வகையில்

ஜூன் 30, 2022 அன்று, தேசிய திட்டங்கள் மற்றும் உத்திகள் மற்றும் தேசிய மற்றும் உலகளாவிய மட்டங்களில் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் பாராளுமன்றத்தின் பங்கை அங்கீகரிக்கும் சர்வதேச பாராளுமன்றவாத தினத்தைக் கொண்டாடுகின்றோம். இந்த நாள் முதன்முதலில் ஐ.நா பொதுச் சபையால் 2018 இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் மூலம் நிறுவப்பட்டது, இது தேசிய பாராளுமன்றங்களின் உலகளாவிய அமைப்பின் (I.P.U) 129 வது ஆண்டு நிறைவைக் குறிக்கின்றது. 1889 ஆம் ஆண்டில் இதே தினத்தில் முதன்முதலில் … Read more

உணவகங்களுக்கு செல்லும் இலங்கையர்களின் தற்போதைய நடவடிக்கை

சாப்பாடு வாங்க உணவகங்களுக்கு வருபவர்கள் அதன் விலையை கேட்டுவிட்டு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரை மட்டுமே குடித்து விட்டுச் செல்கின்றனர் என அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.   உணவுக்காக உணவகங்களை நாடிச் செல்பவர்களின் எண்ணிக்கை பாரியளவில் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  எரிபொருள் நெருக்கடி எரிபொருள் மற்றும் எரிவாயு பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் 80 வீதமான  உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன. மேலும், எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடி … Read more