வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸூடன் ரஷ்யத் தூதுவர் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்யக் கூட்டமைப்பின் தூதுவர் யூரி மெட்டரி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 ஜூன் 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். 2022ஆம் ஆண்டில் 65வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகின்ற பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல விடயங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் மெட்டரி ஆகியோர் கலந்துரையாடினர். இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் குறித்து தூதுவர் … Read more

அடுத்த வார அமர்வு: 4,5 மற்றும் 06ம் திகதிகளில் 

பாராளுமன்றம் அடுத்த வாரம் 4,5 மற்றும் 06ம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (30) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.   • நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சி கொண்டுவரும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் 6ஆம் திகதி  பல்வேறு காரணங்களுக்காக பாராளுமன்றத்தில் கேட்கப்படாத 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக எதிர்வரும் … Read more

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் துவிசக்கர வண்டிகள்

இலங்கையில் தற்போது சாதாரண துவிசக்கர வண்டி ஒன்று ஐம்பதாயிரம் ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.   அத்துடன்,  புதிய வடிவிலான துவிசக்கர வண்டிகள் ஒரு இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.   எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு  கடும் சிக்கலில் மக்கள்  நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக முழு இலங்கையிலும் உள்ள மக்கள் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.  குறிப்பாக போக்குவரத்து சார் பிரச்சினைகள் தலைவிரித்து ஆடுகின்றன. இவ்வாறான … Read more

யாழ் – கொழும்புக்கிடையில் ,அத்தியாவசிய பொருள் விநியோகத்துக்காக புகையிரத சேவையை பயன்படுத்த திரு அங்கஜன் இராமநாதன் கோரிக்கை

யாழ் – கொழும்புக்கிடையிலான அத்தியாவசிய உணவு, மருந்துபொருள் விநியோகத்துக்காக தற்போதைய நிலையில் மாற்று வழிகளை ஏற்பாடு செய்து தருமாறு யாழ் வணிகர் கழக பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதற்கிணங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களிடம் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளார். அமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்,யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தகர்கள் இதுவரைகாலமும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை … Read more

32 இலட்சம் குடும்பங்களுக்கு இன்று முதல் 7,500 ரூபா, நெருக்கடியால் பாதிக்கப்பட்வர்களுக்கும் விரைவில் நிவாரணம்

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ,பாதிக்கப்பட்டுள்ள  32 லட்சம் குடும்பங்களுக்கு இன்று  முதல் 7,500 ரூபாவை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் மேம்பாட்டுக்காக பங்களிப்பை வழங்கிவரும் 15 இலட்ச அரசாங்க ஊழியர்கள் மற்றும் 6 இலட்சமான  ஓய்வூதியம் பெறுவோருக்கும் ,கைத்தொழில் துறையைச்சார்ந்த மற்றும் ஏனைய தொழில் துறையைச் சார்ந்தவர்களுக்கும் ,எதிர்வரும் காலங்களில் நிவாரணம் தற்போது முன்னெடுக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் பிரதி பலனாக கிடைக்கக்கூடியதாக … Read more

கோவிட் தடுப்பூசி குறித்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

கோவிட் தடுப்பூசி தொடர்பில் பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விசேட அறிவுறுத்தல் விடுத்துள்ளது. ஒமிக்ரோன் திரிபின் உப திரிபுகள் சில உருவாகியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் நான்காவது கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டுமென சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் கோரியுள்ளார். இரண்டாவது பூஸ்டர் தடுப்பூசிக்கு தயாராகுங்கள் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய கோவிட் திரிபுகள் இதுவரையில் இலங்கையில் கண்டறியப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த … Read more

உண்மையான தகவல்களை மக்கள்மயப்படுத்துவது பாராளுமன்ற ஊடகவியலாளர்களின் பொறுப்பு

பாராளுமன்ற நடவடிக்கைகளை அறிக்கையிடும் ஊடகவியலாளர்களுக்குப் பாராளுமன்ற முறைமை தொடர்பில் விசேட ஒரு நாள் செயலமர்வு (28) நடைபெற்றது. பாராளுமன்றம், வெகுசன ஊடகம் மற்றும் பொதுமக்களுக்கிடையில் வலுவான உறவை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில், பாராளுமன்ற அறிக்கையிடலில் ஈடுபட்டுள்ள அனைத்து ஊடக நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் மு.ப. 8.30க்கு செயலமர்வு ஆரம்பமாகியது. இங்கு ஊடகவியாளர்கள் மத்தியில் உரையாற்றிய சபாநாயகர், சட்டமியற்றும் உயர்ந்த நிறுவனமான பாராளுமன்றம் தொடர்பான அறிக்கையிடலில் … Read more

எரிபொருள் விநியோகம் தொடர்பில் லங்கா ஐஓசியின் புதிய அறிவிப்பு

லங்கா ஐஓசி நிறுவனம்  எரிபொருள் பெற்றுக் கொள்ளக்கூடிய எரிபொருள்  நிரப்பு நிலையங்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இது குறித்து அந்த நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளது.  எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்களின் பட்டியல் வெளியீடு லங்கா ஐஓசி நிறுவனம் நேற்றையதினம் (ஜூன் 30)  திருகோணமலை முனையத்தில் இருந்து எரிபொருளை விடுவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.  அந்த எரிபொருள் இருப்புகளைப் பெறும் நிரப்பு நிலையங்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.   #LankaIOC Below orders are dispatched from Lanka IOC Trincomalee Terminal (30/06/2022). … Read more

திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதற்கான தீர்மானம் இடைநிறுத்தம்

திக்கம் வடிசாலையை தனியார் முதலீட்டாளர்களுக்கு கையளிப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையீடு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திக்கம் வடிசாலை நிர்வாகத்தினர் (30.06.2022) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துஇ திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும்இ குறித்த முயற்சிகளை நிறுத்துமாறும் வலியுறுத்தினர். இதனையடுத்து துறைசார் அமைச்சருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். தனியார் முதலீட்டாளர்களும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினரும் இணைந்த பொறிமுறை ஒன்றின் ஊடாக திக்கம் வடிசாலை அபிவிருத்தி … Read more