வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருப்பவர்களுக்காக….  

தனது சொந்த நிதியில் இருந்து, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு 9,00 000 ரூபா செலவில், வாடகை அடிப்படையில் புகைப்பட தரவுத்தளத்தை வழங்க நடவடிக்கை எடுதாதுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டுக்கான அங்கீகரிக்கப்பட்ட புகைப்படக் காட்சியகங்களில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் திணைக்களத்தின் தரவுத்தளத்திற்குப் உட்படுத்துவதில் உள்ள பிரச்சினைக்கு நீண்டகாலத் தீர்வு காணப்படும் வரை இந்தத் தரவுத்தள வசதியை முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதற்கு தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்துள்ள … Read more

கோட்டாபயவுக்கு செக் வைத்த கட்டார் தலைவர் – முக்கிய நிபந்தனை முன்வைப்பு

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருந்து கோட்டபாய ராஜபக்ஷ வெளியேறிய பின்னரே எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்குவதற்கான அடிப்படையை அமைக்கலாம் கட்டார் அரச தலைவர் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. எரிபொருளைத் தேடிச் சென்ற இலங்கைக் குழுவிடம், கட்டார் அரச தலைவர் சூசகமாக இதனைத் தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கமைய, கொரோனா நோயால் உயிரிழந்த இஸ்லாமிய மக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உலகின் 57 இஸ்லாமிய நாடுகளின் பங்களிப்புடன் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு … Read more

நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி புதிய அணியொன்றுக்கு நாட்டை மீட்டெடுக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு முதல் தமது பிரிவினர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடமும் பல சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகப்படியான பணம் அச்சடிக்கப்பட்டதன் விளைவுகள் மற்றும் ஏற்கனவே உள்ள கடனை … Read more

இலங்கையின் பணவீக்கம் சடுதியாக உயர்வு

2022 ஜூன் மாதத்தில் இலங்கையின் பணவீக்கம் 54.6 வீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் விலைக் குறியீடு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உணவுப் பணவீக்கம் 57.4 சதவீதத்தில் இருந்து 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. எவ்வாறாயினும், போக்குவரத்து பணவீக்கம் 128 வீதமாக உயர்ந்துள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   Source link

மட்டக்களப்பில் சிறுபோக வேளாண்மை அறுவடை விழா

மட்டக்களப்பு வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறுபோக வேளாண்மை அறுவடை விழா இன்று (30) காலை 10 மணிக்கு கிரான் தவணை கண்டத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது. வாகனேரி திட்ட முகாமைத்துவக்குழுவின் தலைவர் சி.புஸ்பாகரன் தலைமையில் நடைபெற்ற விழா நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கலந்துகொண்டார். மட்டக்களப்பு நீர்ப்பாசனப் பணிப்பாளர் எந்திரி.ந.நாகரெத்தினம், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கலந்துகொண்னர். ஆலய … Read more

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமனம்

கலாநிதி நந்தலால் வீரசிங்க மேலும் 6 வருடங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனக்கடிதத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ விடமிருந்து ஆளுநர் நந்தலால் வீரசிங்க இன்று (30) பெற்றுக்கொண் டார். ஆளுநரின் பதவிக்காலம் இன்று முடிவிற்கு வரவிருந்த நிலையில், ஜனாதிபதியினால் கலாநிதி நந்தலால் வீரசிங்க 6 வருடங்களுக்கு மீண்டும் இலங்கை மத்திய வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை மக்களின் திகிலூட்டும் பயணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக பொதுமக்கள் கடும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.   எரிபொருள் தட்டுப்பாட்டால் பலரின் தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாழ்வாதாரத்தை இழக்கும் இக்கட்டான நிலையையும் சந்தித்துள்ளனர்.  இலங்கையர்களின் திகிலூட்டும் பயணம்  தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள்  கடுமையான போக்குவரத்து நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் முழுமையாகச் செயற்படாததால், குறைவான பேருந்துகளே இயக்கப்படுகின்றன. அதிகமான பயணிகள் அவற்றில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் இரத்தினபுரி அயகம பிரதேசத்தில் பேருந்து ஒன்றின் கூரையில் பயணிகள்  … Read more

அமைச்சர் தம்மிக்க பெரேராவின் புதிய அறிவிப்பு! நாளை முதல் நடைமுறை

இலங்கை முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து வருட வேலை விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தம்மிக்க பெரேரா இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.   நாளை முதல் நடைமுறை குறித்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள், பணிப்பாளர்கள் மற்றும் உயர் முகாமையாளர்களுக்கு விசா வழங்கப்படும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். Source link

இந்தியாவில் இருந்து கிடைக்கும்  யூரியா உரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல் 

இந்திய அரசாங்கத்தினால்  கிடைக்கும் யூரியா உரத்தை நெல் பயிரிடும் அனைத்து விவசாயிகளுக்கும் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு  இன்று பணிப்புரை விடுத்துள்ளார். அனைத்து நெற்செய்கையாளர்களுக்கும் நெற்செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சு பணிப்புரை விடுத்திருந்தது.  இதன் காரணமாக அந்த விவசாயிகளுக்கு உதவிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இவை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கிடைத்ததன் பின்னர் விநியோகிக்கப்படும் முறை தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சில் இடம் பெற்றது. இந்த கலந்துரையாடலில் … Read more