முல்லைத்தீவு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு மாந்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாலி நகர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் ஒரே வாரத்தில் இரண்டாவது சடலம் மீட்கப்பட்டுள்ளாக அவர் குறிப்பிட்டார். Source link

நாளை முதல் உக்கிரமடையும் நெருக்கடி – வரிசைகள் அதிகரிக்கும் ஆபத்து

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நாளை முதல் உக்கிரமடையும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் புள்ளிவிபரங்களின்படி இன்னும் நான்கு நாட்களுக்கு மட்டுமே நாட்டில் டீசல் கிடைக்கும் என அதன் அழைப்பாளர் ஆனந்த குறிப்பிட்டுள்ளார். காத்திருக்கும் கப்பல்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்தப்படவில்லை. கப்பல்கள் நிறைய உள்ளன எனினும் பணம் செலுத்தப்படவில்லை. இதனால் நாளை முதல் மக்கள் வரிசையில் நிற்க வேண்டும். வரிசையில் நின்றாலும் எரிபொருள் பெற முடியாது. … Read more

நான் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன் – மோடியை பற்றி பொய் கூறியதாக இ.மி.ச தலைவர் அறிக்கை

இந்தியாவின் அதானி குழுமம் சம்பந்தப்பட்ட மன்னார் காற்று மற்றும் சூரிய சக்தி திட்டம் தொடர்பாக வெள்ளிக்கிழமை (10) கோப் குழு விசாரணையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ மன்னிப்பு கோரியுள்ளார். கோப் விசாரணையில், இத்திட்டத்தை இந்திய நிறுவனத்திற்கு வழங்குமாறு இந்தியப் பிரதமர் தமக்கு அழுத்தம் கொடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் அறிவித்ததாக இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி பெர்டினாண்டோ தெரிவித்திருந்தார். எதிர்பாராத அழுத்தம் மற்றும் உணர்ச்சிகளின் காரணமாக, இந்திய … Read more

ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரினார் தம்மிக்க பெரேரா

 பிரபல வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவிடம் மன்னிப்பு கோரியுள்ளார். சனத் ஜயசூரிய தனது டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தம்மிக்க பெரேரா சனத் ஜயசூரியவின் பெயரை தவறாக உச்சரித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனத் ஜயசூர்ய தான் சனத் ஜயசூர்ய என்று குறிப்பிட்டு காணொளி ஒன்றை இணையத்தில் பதிவிட்டிருந்தார்.இந்நிலையிலேயே, தம்மிக்க பெரேரா இலங்கை கிரிக்கெட் அணியின் … Read more

தம்மிக்க பெரேராவிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி – வழக்கு தாக்கல் செய்ய தயாராகும் முக்கியஸ்தர்கள்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமாவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு இலங்கையின் பிரபல வர்த்தகரான தம்மிக்க பெரேரா நியமிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் சிவில் செயற்பாட்டாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ஆகியோர் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளனர். இணைய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தம்மிக்க பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமை மக்களின் இறைமைக்கு பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த … Read more

இலங்கைக்கான பயண ஆலோசனையை தளர்த்தியது பிரித்தானியா

இலங்கைக்கு வரும் தனது குடிமக்களுக்கு வழங்கப்பட்ட பயண ஆலோசனையை பிரித்தானியா தளர்த்தியுள்ளது. அந்நாட்டின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அந்நிய செலாவணி நெருடிக்கடி காரணமாக, மருந்துகள், சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் இலங்கையின் பொருளாதார நிலைமை சவாலாக உள்ளது” என்று பிரித்தானிய அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தைப் பெறுவதில் சிரமங்கள் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள், … Read more

தேவையற்றவகையில் அரிசியை கொள்வனவு செய்ய வேண்டாம் – வர்த்தக அமைச்சர்

சில வகை அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலைகள் நிர்ணயிக்கப்பட்டுளள்தால், நெல் ஆலை உரிமையாளர்கள் உரிய அரிசி வகைகளை சந்தைக்கு விநியோகிப்பதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அரசாங்கம் அரிசி வகைகளுக்கு நிர்ணய விலைகளை விதிக்கும் போது அரிசி ஆலை உரிமையாளர்கள் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடுகளை உருவாக்கி நுகர்வோருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்துவதாக அமைச்சர் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார். வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,இவ்வாறான சூழ்நிலையில் … Read more

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி இலங்கை படை முகாமுக்கு விஜயம்

மாலியில் ஐ.நா அமைதிகாக்கும் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கொர்னெலிஸ் ஜோஹன்னஸ் மத்திஜ்சன் மாலியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இலங்கை அமைதிகாக்கும் படை முகாமுக்கு அண்மையில் விஜயம் செய்தார். இலங்கை அமைதிகாக்கும் படை யின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் தினேஷ் புலத்சிங்கள வருகை தந்த ஐ.நா அமைதிகாக்கும் படை உயரதிகாரியை வரவேற்றதுடன், இலங்கை படையணியின் பணிகள் குறித்தும் அவருக்கு விளக்கமளித்தார் என இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இவ்விஜயத்தின் போது லெப்டினன்ட் ஜெனரல் மத்திஜ்சன் இலங்கை படையினருடன் உரையாடியதுடன் அவர்களின் … Read more