இந்தியா வழங்கும் உரம் இன்னும் சில நாட்களில் இலங்கையை வந்தடையும்

இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உரம் இன்னும் சில நாட்களில் இலங்கையை வந்தடையும் என்று இந்திய உயர்ஸ்தானிகர் உறுதியளித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் கமத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் வெளியிட்டுள்ள விடயம்  இந்தியா தனது உரத் தேவையை ஓமான் நாட்டிலிருந்தே பெற்றுக் கொள்வதாகவும், அந்த வகையில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த உரம் ஓமான் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்டு கப்பல் மூலம் … Read more

உலக சுற்றாடல் தினம் இன்று

.உலக சுற்றாடல் தினம் இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு தேசிய சுற்றாடல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது. கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான சுற்றாடல் வாரத்தின் இறுதி நாள் இன்றாகும். இலங்கையில் சுற்றாடல் தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு சுற்றாடல் அமைச்சில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் மரக்கன்று நடுகை உட்பட இன்னும் பல நிகழ்வுகளும் இடம்பெற்றன. 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, மானிட சுற்றாடல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மாநாடு அந்த வருடம் ஜுன் மாதம் ஐந்தாம் … Read more

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிக்கை

தற்போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் ஏரோஃப்ளோட் பயணிகள் விமானம் SU-289 பற்றிய குறிப்புடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பின்வருவனவற்றைக் குறிப்பிட விரும்புகின்றது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதைத் தடுக்கும் வகையில் ஏரோஃப்ளோட் விமானத்திற்கு மேல் மாகாண வர்த்தக உயர் நீதிமன்றம் 2022 ஜூன் 02ஆந் திகதி தடை உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு ஐரிஷ் நிறுவனமான செலஸ்டியல் ஏவியேஷன் டிரேடிங் 10 லிமிடெட் வாதியால் முதல் பிரதிவாதியான பொதுக் கூட்டுப் பங்கு … Read more

சுவசெரிய மன்றத்திற்கு மருந்துப்பொருட்கள் கையளிப்பு

1990 சுவசெரிய அம்புலன்ஸ் சேவைக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 3.3 தொன்கள் நிறையுடைய அத்தியாவசிய மருத்துவப் பொருள் தொகுதியானது, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி.ஹர்ஷ டி சில்வா மற்றும் சுவசெரிய மன்றத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சொஹான் டீ சில்வா ஆகியோரின் பிரசன்னத்துக்கு மத்தியில் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்களால் சுவசெரிய மன்றத் தலைவர் திரு துமிந்த ரத்நாயக்க அவர்களிடம் 2022 ஜூன் 03ஆம் திகதி கொழும்பில் கையளிக்கப்பட்டது. 2.         2022 மார்ச் மாதம் வெளியுறவுத்துறை … Read more

பணவீக்கம் 2022 மேயில் மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013=100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2022 ஏப்பிறலின் 29.8 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 39.1 சதவீதத்திற்கு அதிகரித்தது. ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையிலான பணவீக்கத்தின் இவ்வதிகரிப்பானது உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் மாதாந்த அதிகரிப்புக்களினால் தூண்டப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2022 ஏப்பிறலின் 46.6 சதவீதத்திலிருந்து 2022 மேயில் 57.4 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2022 ஏப்பிறலின் … Read more

ரஸ்யா – இலங்கை இடையே இராஜதந்திர உறவில் விரிசல் (Video)

ரஸ்யாவின் ஏரோபுளோட் விமானம் இலங்கையில் இருந்து வெளியேற தடை விதித்து கொழும்பு வணிக மேல் நீதிமன்ம் உத்தரவிட்டுள்ள நிலையில் அதனை மையப்படுத்தி ரஸ்யா இலங்கை உறவில் விரிசல் ஏற்படும் அபாயம்தோன்றியுள்ளது. தனது விமானம் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு ரஸ்யா அதிருப்தி வெளியிட்டுள்ள நிலையில் ரஸ்யாவுக்கான இலங்கை தூதுவர் ஜனிதா லியனகே  ரஸ்ய வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டு நேரில் அவரிடம் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.  இது குறித்து ரஸ்ய வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.  இது தொடர்பான மேலதிக விபரங்களுடனும் … Read more

கடந்த 5 மாதங்களில் நாட்டில் 13 எச்ஐவி தொற்றாளர்கள்

இந்த (2022) வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அனுராதபுரம் மாவட்டத்தில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பாலின சுகாதார சேவைகள் நிலையத்தின் வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் தெரிவித்துள்ளார் பாதுகாப்பற்ற உடலுறவு முறையே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் கூறினார். கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம, ஹொரவபத்தான, மத்திய நுவரகம் மற்றும் மெதவச்சி ஆகிய பிரதேசங்களிலிருந்து  தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.  கடந்த ஆண்டுகளில், மாவட்டத்தில் பதிவாகியுள்ள எச்.ஐ.வி. தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2022 இன் முதல் … Read more

ஒரு வலுவான பாதுகாப்பு கொள்கை அத்தியாவசியம் பாதுகாப்பு செயலாளர்

தேசிய பாதுகாப்பை நோக்கிய தனது இலக்குகளை அடைவதை வரையறுப்பதற்கு, நாட்டின் பாதுகாப்பு எந்திரங்களை ஏற்றுக்கொள்ளவும், அதன் மக்கள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கும் செயல்திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய வலுவான பாதுகாப்புக் கொள்கை அவசியம் என்று பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஜூன்(2) தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு சூழலானது பாதிக்கப்படக்கூடிய, நிச்சயமற்ற, சிக்கலான மற்றும் தெளிவற்ற தன்மை கொண்டது என்பதால், புவிசார் அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு சூழலை வகைப்படுத்தும் முக்கிய காரணிகளின் நிலையான … Read more

உக்ரைன் இராணுவ விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்ய படைகள்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் கருங்கடல் துறைமுக நகரமான ஒடெசா அருகே உக்ரைன் இராணுவ விமானம் ஒன்றை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. இந்த விமானத்தை ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களுடன் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, சுமி பிராந்தியத்தில் பீரங்கி பயிற்சி மையத்தை ஏவுகணை தாக்குதல் நடத்தி ரஷிய படைகள் அழித்துள்ளன.  Source link

வாக்காளர் இடாப்பு தயாரிக்கும் பணி ஆரம்பம்

2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பைத் தயாரிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் இடாப்பில் பெயர் இடம்பெறாவிடத்து தாங்கள் வசிக்கும் பிரதேச கிராம உத்தியோகத்தரைச் சந்தித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆணைக்குழு வாக்காளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை,அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பு தயாரிப்புப் … Read more