கொழும்பில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
கொழும்பு – கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல வீதிகளுக்கு நாளைய தினம் (04) ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆர்ப்பாட்டக்காரர்கள் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற தடை உத்தரவில் உள்ளடங்கியுள்ள விடயம் மேலும், கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link