பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 27.05.2022
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 27.05.2022
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு 27.05.2022
தேசிய மின்கட்டமைப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களுக்கு கணிசமான பங்களிப்பை வழங்குவதற்கு உதவுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள், மின்துறை நிபுணர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். மொத்த மின் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் இருந்து உற்பத்தி செய்வது அரசாங்கத்தின் இலக்கு ஆகும். இதுவரை சூரிய சக்தியில் இருந்து கிட்டத்தட்ட 700 மெகாவொட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் உள்ளது. ஆனால், இலங்கை மின்சார சபை பொறியாளர்களின் எதிர்ப்பினால் அது சாத்தியமாகவில்லை என்பது பொதுமக்களின் கருத்து ஆகும். அதனை சரிசெய்து … Read more
முன்னாள் நிதியமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஸ்தாபகருமான பசில் ராஜபக்ச 21வது திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கும் முயற்சிகளுக்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21வது திருத்தத்தை எதிர்ப்பதற்கு ராஜபக்ச ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலரின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த வரைவு முன்மொழிவு வாக்கெடுப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் போது, அதற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன … Read more
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தி இந்தியாவும் இலங்கையும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இந்தியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் புதிய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ராவை புது தில்லியில் உள்ள வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். முன்னதாக ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவுக்குப் பிறகு உயர் பதவிக்கு சமீபத்தில் நியமிக்கப்பட்ட வெளியுறவு செயலாளர் குவாத்ராவுக்கு இலங்கையின் உயர் ஸ்தானிகர் மொரகொட வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, உயர்ஸ்தானிகரும் … Read more
அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருளை இறக்குமதி செய்வது ஆகிய உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தில் உள்ள எமது நண்பர்களின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று நடைபெற்ற ஆசியாவின் எதிர்காலம் 27வது சர்வதேச மாநாட்டில் காணொலி தொழிநுட்பம் மூலம் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபயவின் முழு உரை ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடு இலங்கை. நமது தற்போதைய தேசிய … Read more
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பதவி விலகியதன் பின்னர் மிகக் குறைந்த நாட்களே பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இராணுவ மரபுப்படி, அவர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மரியாதை நிமித்தமாக, பாதுகாப்புப் படைகளின் தலைமை அதிகாரி பதவி குறிப்பிட்ட சில நாட்களுக்கு நீடிக்கும். அதன் பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் சமீபகாலமாக நடந்த மோதல்களில் மக்களுக்காக குரல் கொடுத்ததாக அரசியல்வாதிகளால் சவேந்திர சில்வா மீது மீண்டும் … Read more
இராணுவ தளபதியின் கடமைகளிலிருந்து மே 31 ஆம் திகதி விடுகை பெற்றுக்கொள்ளவிருக்கும் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், 2022 ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார். பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் புதிய நியமனத்துக்கான அலுவலக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார். அதேநேரம் இராணுவ பதவி நிலை பிரதானி நியமனத்திலிருந்து விடுகை பெறவிருக்கும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஜூன் முதலாம் திகதி … Read more
அடுத்த ஒரு மாத காலத்தில் தமது வர்த்தகங்கள் அனைத்தும் வீழ்ச்சியடையும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்ந்தும் நீடித்தால், இலங்கையில் இந்திய ரூபாவை பயன்படுத்தும் நிலைமை உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்தும் தமது வர்த்தகத்தை கொண்டு நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய தேசிய வர்த்தகர்கள் ஒன்றியம் கூறியுள்ளது. சேமித்து வைத்திருந்த பணத்திலேயே இதுவரை வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன எனவும் தொடர்ந்தும் அப்படி செய்ய … Read more
இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். ஜப்பானின் டோக்கியோவில் இன்று (26) நடைபெற்ற, ஆசியாவின் எதிர்காலம் (Nikkei) தொடர்பான 27ஆவது சர்வதேச மாநாட்டில் காணொளித் தொழில்நுட்பத்தின் ஊடாக ஜனாதிபதி அவர்கள் உரையாற்றும்போதே இதனைத் தெரிவித்தார். நாடு எதிர்கொள்ளும் நெருக்கடிக்கான தீர்வுகள் ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட வேண்டும்… கடினமான காலங்களில் நட்பு நாடுகளின் … Read more
எதிர்வரும் ஜூன் மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை, பிரதமர் ரணில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதப் நடுப்பகுதியில் நடைமுறையாகும் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இலங்கை பாரிய பொருளாதார நெருக்கடியைச் … Read more