நோயுற்ற மீனவரை கரைக்கு அழைத்துவர கடற்படை உதவி

கடலில் வைத்து சுகவீனமடைந்த மீனவர் ஒருவர், மே 15 மாலை இலங்கை கடற்படையினரால் சிகிச்சைக்காக கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடகங்களின்படி, உள்ளூர் பலநாள் மீன்பிடி இழுவை படகு ‘சிந்தூர் 04’ ல் இருந்த மீனவர் ஒருவர் கிழக்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்டுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தினால் இதுகுறித்து அறிவிக்கப்பட்டதற்கு அமைய, நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்குக் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படை அதன் கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்திலிருந்து ‘ரனரிசி’ … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டார்

ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக திறந்து வைக்கப்பட்ட இரங்கல் புத்தகத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கொழும்பில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவரின் இல்லத்தில் வைத்து கையொப்பமிட்டார். மாண்புமிகு ஷேக் கலீபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக, இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஆழ்ந்த அனுதாபங்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். வெளிநாட்டு அலுவல்கள் … Read more

இன்று பல முக்கிய தகவல்களை வெளியிடவுள்ள பிரதமர் (Video)

வங்கிகளில் டொலர் பற்றாக்குறை நிலவுவதால் அடுத்து வரும் வாரங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை நாட்டின் பொருளாதார நிலவரம் தொடர்பான தமது ஆய்வுகள் முடிவடைந்துள்ளதாகவும், இதன்படி இன்றைய தினத்தில் அது தொடர்பான தகவல்களை வெளியிடவுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். நேற்று ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டே பிரதமர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் தொகுப்பு, Source link

இன்று இரவு 8.00 மணி முதல் நாளை காலை 5.00 மணிவரை ஊரடங்கு

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆவது பிரிவின் விதிகளுக்கு அமைவாக இன்று (16) இரவு 8.00 மணி முதல் நாளை (17) அதிகாலை 5.00 வரையில் நாடுமுழுவதும் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,இதற்கமைவாக , அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின் அதிகாரத்தின் கீழ் தவிர, அந்த பகுதிகளில் உள்ள பொதுச்சாலை, புகையிரதப் பாதை, பொதுப் பூங்கா, பொது … Read more

இன்று இரவு ரயில் சேவைகள் இடம் பெறமாட்டா

ஊரடங்குச் சட்டம் இன்று இரவு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (16) இரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படும் என பிரதிப் பொது முகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதினால் ரயில்களை இயக்க முடியாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக திரு.செனவிரத்ன தெரிவித்தார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்க தயாராகும் பிரதமர் ரணில்

இலங்கையின் பொருளாதாரத்தை விரைவில் பழைய நிலைக்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றனர். அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள பல வெளிநாடுகளின் உதவிகளை கோரியுள்ள நிலையில், அதற்க சாதகமான பதில்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில் விரைவில் இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார். அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் ஸ்திரமான அரசாங்கத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயதீனமாக செயற்படும் பத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களை இன்று காலை சந்தித்த பிரதமர் … Read more

பிரதமர் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி பூரண ஆதரவுவழங்கியுள்ளதாக செயலாளர் நாயகமும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்;. முன்பதாக பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். … Read more

ஜனாதிபதியாகலாம் ரணில்! ராஜபக்ச குடும்பத்தில் முறுகல் (VIDEO)

ராஜபக்சக்களின் குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக எதிர்வரும் காலங்களில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகி தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகலாம் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரை ஜனாதிபதி காப்பாற்றாத காரணத்தினால் குடும்பத்திற்குள் கடும் அரசியல் மோதல் ஏற்பட்டுள்ளதுடன்,ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், Source … Read more

காங்கேசந்துறையிலிருந்து – பொத்துவில் கடற்பரப்புகளில் காற்றின் வேகம்– 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்

காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 – 70 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்த கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2-5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.