மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரிக்கு புதிய மாணவர்கள் அனுமதி

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் 2024 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை அனுமதித்து, வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் எம். சோமசூரியம் தலைமையில் கல்லூரி மண்டபத்தில் (17) இடம் பெற்றது. இந் நிகழ்வில் ஆன்மிக அதிதிகளாக இராமகிருஸ்ண மிஷன் உதவிப்பொது முகாமையாளர் சுவாமி சுரார்ச்சிதானந்தா ஜீ மஹராஜ், அருட்தந்தை விரைனர், மௌலவி எம்.பி.எம். பிரிதொஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன்போது 2024 ஆம் ஆண்டிற்க்கான புதிய கற்கை நெறிகளுக்கான மாணவர்கள் உள்வாங்கப்பட்டதுடன் அத்தொழிற் கற்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது. 1983 … Read more

பொருளாதாரத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு சரியான புள்ளிவிவரங்கள் தேவை… – பிரதமர் தினேஷ் குணவர்தன

அஸ்வெசும நன்மைகள் குறைந்த வருமானம் பெறும் மக்களின் நலனுக்கானதாகும்… பொருளாதாரத்தை பலப்படுத்தும் தீர்மானங்களை எடுக்கும்போது, குறைந்த வருமானம் பெறும் மக்களை அரசாங்கம் புறக்கணிக்காது… முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது துரதிர்ஷ்டமானது… வளம் நிறைந்த நிலம் எம்மிடம் உள்ளது… மாத்தளை மாவட்ட செயலகத்தில் 2024.01.17 அன்று நடைபெற்ற முட்டை அடைகாக்கும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துதல் மற்றும் சிறு கோழிப்பண்ணை உரிமையாளர்களை வலுவூட்டுதல் ஆகிய … Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயதொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்..

கிளிநொச்சி மாவட்டத்தில் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்தும் நோக்கில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.முயற்சியாளர்களை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை நடாத்தினார். கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் ஏற்பாட்டில் கடற்றொழில் அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுயதொழில் முயற்சிகளை விருத்தி செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்திகளை மேம்படுத்தி சுயதொழில் முயற்சியாளர்களின் சுயபொருளாதாரத்தினை … Read more

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மில்லியன் செலவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு மில்லியன் செலவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவந்த அடை மழை காரணமாக கிழக்கு மாகாணம் உட்பட பல்வேறு மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் விசேடமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியிருந்தது, இதனால் அதிகளவிலான மக்கள் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவ்வாறு வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நாசீவந்தீவு கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் 475 … Read more

இரு சர்வதேச மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி உகண்டா பயணம்

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென் மாநாடு என்பவற்றில் (3rd South Summit of the Group of 77 & China) பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உகண்டாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். உகண்டா குடியரசு ஜனாதிபதி யொவேரி முசேவெனியின் (Yoweri Museveni) அழைப்பின் பேரிலேயே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது … Read more

வைத்தியசாலைகளில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தரைப்படையினர் பணியில்…

வைத்தியசாலைகளில் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தரைப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தரைப்படை அறிவித்துள்ளது. நாடு பூராகவும் அரசாங்க வைத்திய சாலைகளில் சிற்றூழியர்களின் தொழிற்சங்கத்தினால் சில கோரிக்கைகளை முன்வைத்து (16) முதல் ஈடுபடும் வேலை நிறுத்தத்தினால் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வைத்தியசாலை செயற்பாடுகளை இடையூறின்றி மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சின் தரைப்படியினரை வைத்தியசாலைகளில் ஈடுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் அரசாங்க அதிபரிடம் மகஜர் சமர்ப்பித்தனர்.

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரையில் அத்துமீறிய விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே முரளிதரனிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். பண்ணையாளர்களின் கால்நடைகளை சுதந்திரமாக மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி இன்றைய பட்டிப் பொங்கல் தினத்தினை கறுப்புப் பொங்கல் தினமாக அனுஷ்டித்து ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் முன்னெடுக்கப்பட்டது. மயிலத்தமடு பெரிய மாதவணை கால்நடை கமநல அமைப்பின் தலைவர் நிமலன் தலைமையில் இடம்பெற்ற … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், பருத்தித்துறைக்கு அப்பால் வடக்கடலில் 2024 ஜனவரி 14 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களுடன் இந்திய மீன்பிடிப் படகொன்று (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

உயர் தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞான வினாப்பத்திரம் மீண்டும் நடாத்தப்படவுள்ள தினம் அறிவிப்பு – பரீட்சைகள் திணைக்களம்

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானம் பகுதி I மற்றும் II வினாப்பத்திரங்களை மீண்டும் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளது. விவசாய விஞ்ஞானமானது வெளியாகும் போது ஏற்பட்ட அறிக்கையிடலுடன் பரீட்சைகள் திணைக்களம் இரண்டாம் பகுதியை இரத்துச் செய்தது. கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற இவ்வினாப்பத்திரத்தின் பகுதி I இரத்துச் செய்யப்பட்டதுடன் அதற்கிணங்க அவ்வினாப்பத்திரத்தின் பகுதி 1 மற்றும் II மீண்டும் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கிணங்க உயர்தரப் … Read more

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் மாலைதீவு சபாநாயகர் கௌரவ மொஹமட் அஸ்லம் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவின் அழைப்பில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள மாலைதீவு சபாநாயகர் கௌரவ மொஹமட் அஸ்லம் தலைமையிலான தூதுக்குழுவினருக்கும் சபாநாயகருக்குமிடையில் சந்திப்பொன்று நேற்று (16) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்தத் தூதுக்குழுவில் மாலைதீவு பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அலி ஆஸிம், கௌரவ அலி நியாஸ், கௌரவ ஹுசைன் ஹஷீம், மாலைதீவு பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாத்திமா நியூஷா உள்ளிட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதுடன், இந்த சந்திப்பில் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த … Read more