அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் பெப்ரவாரி 16 உடன் நிறைவு

2023 (2024) க.பெ.த உயர்தரப் பரீட்சை 2024.02.01 ஆம் திகதி வரையில் நடைபெறும் என்பதால், 2024.02.01 ஆம் திகதி ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த 2023 பாடசாலை வருடத்தின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகள்) மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.02.05 ஆம் திகதி (திங்கட்கிழமை) ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதேபோன்று சகல பாடசாலைகளதும் 2023 பாடசாலை வருடத்தின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.02.16 … Read more

உற்பத்திப் பொருளாதாரமொன்றை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

உற்பத்திப் பொருளாதாரமொன்றை ஒரே நாளில் கட்டியெழுப்ப முடியாது என்றும் அதற்காக முழு நாடும் அர்ப்பணிப்புச் செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். கல்வி அமைச்சின் கீழ் வரும் கல்விக் கல்லூரிகள் 19 யிலும் காணப்படும் இடவசதிற்கேற்ப அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பயிர்களை உற்பத்தி செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். அதிக குளிர் காலநிலை காணப்படும் நாடுகளில் பனி பொழியாத ஆறு மாத காலங்களில் தொடர்மாடி வீட்டுத் தொகுதிகளின் … Read more

கந்தகாடு முகாம் கைதிகள் தப்பியோடியமை தொடர்பாக ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய சபை நியமனம்

கந்தகாடு புனரமைப்பு முகாமில் தங்கியிருந்த கைதிகள் சிலர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பாக நீதிமன்ற, சிறைச்சாலைகள், மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய பேராசிரியர் விஜேதாச ராஜபக்ஷ் வினால் ஐந்து நபர்களை உள்ளடக்கியதாக விசாரணைச் சபை நியமிக்கப்பட்டுள்ளது. அச்சபையின் தலைவராக உயர் நீதிமன்ற நீதவான் ஹெக்டர் யாப்பா நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதனுடன் தொடர்புடைய விசாரணை மற்றும் சிபாரிசுகளை உள்ளடக்கிய அறிக்கை மூன்று வாரங்களுக்குள் தனக்கு சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட விசாரணைச் சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நீதி அமைச்சரினால் … Read more

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் (2023/2024) தோற்றும் மாணவர்களுக்கான தகவல்.

கல்வி அமைச்சின், திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கப் பிரிவின் ஏற்பாட்டில், இவ்வருடம் உயர்தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் வரை சுமார் மூன்று மாதகாலம் கல்விச் சூழலில் வைத்திருப்பதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க பரீட்சை முடிந்த கையோடு ஆங்கிலம் கற்க அங்கும் இங்கும் ஆங்கிலப் பயிற்சி வகுப்புகளுக்காக தேடி அலையாது, ஆங்கிலம், கணணி கற்கைநெறி மற்றும் தொழில் வழிகாட்டல் ஆலோசனையுடன் கூடிய கற்றல் செயற்பாடுகளை முற்றிலும் இலவசமாக வழங்கப்படவுள்ளன. இதற்காக … Read more

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைது

மன்னாருக்கு அப்பால் கடலில் 2024 ஜனவரி 16 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்களுடன் இரண்டு (02) இந்திய மீன்பிடிப் படகுகள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணிகளை அதிகரித்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு … Read more

தோட்ட மக்களின் காணி உரிமைக்காக 14பில்லியன் ரூபா ஒதுக்கீடு

மலையகத்தில் காணி உரித்துக்குத் தகுதியான மக்களின் காணி உரிமைக்காக 14 பில்லியனுக்கும் அதிகமான தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க தோட்ட மக்களுக்காக காணித் துண்டுகள் மற்றும் வீடுகளை வழங்குவதற்காக நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் காணி உரிமைகளுக்காக 04 பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 89 பிரதேச செயலகங்களுக்காக 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், அதன் கீழ் பத்தாயிரம் … Read more

தேசிய சமுத்திர விவகாரங்கள் குறித்த குழுவின் செயலகத்துக்கான நடவடிக்கைகள் பற்றி சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் அவதானம்

வெளிவிவகார அமைச்சுடன் இணைந்த நிறுவனமான தேசிய சமுத்திர விவகாரங்கள் குறித்த குழுவுக்கான செயலகத்தின் நடவடிக்கைகள் பற்றி 2024.01.09ஆம் திகதி கூடிய சர்வதேச தொடர்புகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாமல் ராஜபக்ஷ தலைமைவகிக்கும் குறித்த குழு அன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அகில எல்லாவல தலைமையில் கூடியது. இக்கூட்டத்தில் தேசிய சமுத்திர விவகாரங்கள் குறித்த செயலகத்தின் செயற்பாடுகள், முகங்கொடுத்துள்ள சவால்கள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இங்கு கருத்து வெளியிட்ட … Read more

இன்றைய வானிலை முன்னறிவிப்பு..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 16ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 16ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை … Read more

பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம்..

பிரதமர் முன்னறிவித்தலின்றி மந்தாரம் நுவர விஜயம் – கலாசாரத்தை பாதுகாத்து சுற்றுலா துறையை மேம்படுத்துமாறு மக்கள் கோரிக்கை பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (2024.01.15) முன்னறிவித்தல் எதுவுமின்றி மந்தாரம் நுவர மக்களை சந்தித்தார். பிரதேசத்துடன் தொடர்புடைய விடயங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாவை பாதிக்கும் விடயங்கள் குறித்து அவர்கள் பிரதமருடன் பல கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். காய்கறிகள் உள்ளிட்ட விளைபொருட்களை காலாவதியாகாமல் பிரதான சந்தைக்கு கொண்டு செல்ல பொருளாதார மையமொன்றின் தேவையை அவர்கள் பெரிதும் வலியுறுத்தினர். சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட … Read more

கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜனவரி 15ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜனவரி 15ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யுக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்.