வனிந்துவின் அபார பந்துவீச்சால் இலங்கை அணிக்கு வெற்றி

சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் நேற்று (11) கொழும்பு ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. எனினும், மழை காரணமாக, பல சந்தர்ப்பங்களில் போட்டியை தற்காலிகமாக நிறுத்த வேண்டியிருந்தது. அதன்படி, மழை காரணமாக போட்டி 27 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 22 ஓவர்கள் 5 பந்துகள் முடிவில் சிம்பாப்வே அணியால் … Read more

அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு – மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

நாட்டிலுள்ள அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வேலைத்திட்டம் இவ்வருடத்திலிருந்து ஆரம்பிக்கப்படுமென மகளிர், சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா தெரிவித்தார். ஆண், பெண் சமத்துவத்தை (Gender Equality Bill) ஆண், பெண் சமத்துவ சட்டமூலத்தின் வாயிலாக உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் 120,000 பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் காலை … Read more

“நான் ஒஸ்டின்” புத்தகம் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி செயலாளரான ஒஸ்டின் பெர்னாண்டோவினால் எழுதப்பட்ட “நான் ஒஸ்டின்” என்ற புத்தகம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (09) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்த சுயசரிதை புத்தகத்தில் அரச சேவை மற்றும் அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் தீர்க்கமாக விவரிக்க்பட்டுள்ளது. சமகால இலங்கை வரலாற்றில் சிக்கலான காலப்பகுதியில் பணியாற்றிய ஒஸ்டின் பெர்னாண்டோ, போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த 2001-2003 காலப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவும் 2017-2018 களில் ஜனாதிபதியின் செயலாளராகவும் பதவி வகித்தார். அரச சேவையில் … Read more

நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

நாடு கண்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், இதற்கான திட்டங்களை ஜனாதிபதி வகுத்துள்ளதாகவும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார். தற்போது நாட்டை மீட்டெடுக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள இந்த வேலைத் திட்டங்களுக்கு ஆளும், எதிர்கட்சி என்ற பாகுபாடு இன்றி, அனைவரும் கரம்கோர்த்து செயற்படவேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். பிரச்சினைகளை வைத்து, அரசியல் செய்வதென்பது இலகுவான விடயம் என்றும் அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதே கடினமான விடயம் என்றும் பிரச்சினைகளுக்கு … Read more

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி பி.இராஜதுரை..

பெருந்தோட்ட பிராந்தியத்திற்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி பி.இராஜதுரை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனம் நேற்று (10.01.2024) வழங்கப்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தவிசாளரான பி.இராஜதுரை இதற்கு முன்னர் முன்னாள் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பில் வெள்ள பாதிப்பை நேரில் சென்று பார்வையிட்ட அரசாங்க அதிபர்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே முரளிதரன் நேற்று (10) திகதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மீராகேனி பிரதேசத்திற்கு சென்று வெள்ளி நீரினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதுடன் தேங்கியுள்ள வெள்ள நீரினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன் போது மீராக் கேணியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவுகளை அரசாங்க அதிபர் வழங்கி வைத்துள்ளார். மீராக்கேனி பாலம் … Read more

தபால் திணைக்களத்தின் COD புதிய அலுவலகங்கள் இரண்டு திறப்பு

தபால் திணைக்களத்தின் COD புதிய அலுவலகங்கள் இரண்டு பதுளை மற்றும் பண்டாரவளை நகரங்களில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தபால் திணைக்களத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும், தபாலில் பொருட்களை அனுப்பும் சேவையை (COD (cash on delivery)) மிகவும் இலகுவாகவும் வினைத்திறனாகவும் மக்களுக்கு வழங்கும் நோக்கில் இப்புதிய அலுவலகங்கள் இரண்டும் அமைக்கப்பட்டு, திறந்து வைக்கும் நிகழ்வு தபால் மா அதிபர் ருவான் சத்குமார தலைமையில் (08) இடம்பெற்றது. இந்த COD சேவை தற்போது நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் இதன் ஊடக மிகவும் … Read more

2023-2025 தேசிய செயல் திட்டம் பெப்ரவரியில் அமைச்சரவை அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

இலங்கையின் மூன்றாவது (2023-2025) தேசிய செயல் திட்டத்தை உருவாக்கும் பணிகளுக்காக திறந்த அரசக் கூட்டமைப்பின் சிவில் அமைப்பு பங்குதாரர்களின் செயலமர்வு கொழும்பு ரோணுகா ஹோட்டலில் நேற்று (10) நடைபெற்றது. அரசியல் சவால்கள், கொவிட் – பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 2019 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்ட செயற்பாடுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகம், டிரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் மற்றும் சர்வோதய அமைப்பு ஆகியன இணைந்து ஆரம்பித்துள்ளன. “திறந்த அரசக் கூட்டமைப்பு” என்பது அரச மற்றும் சிவில் … Read more

பிரித்தானிய இளவரசி ஆன், ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் பிரித்தானிய ஆன் இளவரசி (Her Royal Highness Princess Anne, the Princess Royal) மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் (Vice Admiral Sir Timothy Laurence) ஆகியோர் நேற்று (10) கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர். கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆன் உள்ளிட்ட பிரித்தானிய தூதுக்குழுவுக்கு வெளிநாட்டு … Read more

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி மறு அறிவித்தல் வரை மூடப்படும்!!

பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதி வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பொலன்னறுவை – மட்டக்களப்பு வீதியின் குறுக்கே கல்லெல்ல பாலத்திற்கு அருகில் சுமார் ஒரு அடி நீர்மட்டம் காணப்படுவதாகவும், அதனை கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை கல்லெல்ல பகுதியிலிருந்து வீதி மூடப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் அறிவித்துள்ளது. தொடர் மழை காரணமாக மகாவலி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மாணிக்க கங்கை … Read more