இலங்கையின் வானிலையில் ஏற்படும் மாற்றம்

இலங்கையின் பல பகுதிகளில் நாளை (26.01.2023) மற்றும் நாளை மறு தினம் பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டல திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும், வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதேவேளை 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மழை குறைவடைவதுடன், ஜனவரி 30 மற்றும் 31ஆம் திகளில் மழை காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.  பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம் : சிறுபோகம் தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான (2023) விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம் இன்று (25) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இறுதியாக இடம்பெற்ற பெரும்போகத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டதுடன் 2023ஆம் ஆண்டுக்கான எதிர்வரும் சிறுபோக விவசாயத்தை ஆரம்பிப்பதற்கான கலந்தாலோசனை வழங்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டம் விவசாயத்தை பெரும்பான்மைத் தொழிலாகக் கொண்ட மாவட்டமாகும். விவசாயத்தில் சேதன பசளை பயன்படுத்தப்பட்டதனால் பாதிப்புக்களை அனுபவித்து, அசேதனப் பசளை அறிமுகப்படுத்தப்பட்டதனால் தற்போது ஓரளவு முன்னேற்றமடைந்து வரும் நிலையில், … Read more

மனித கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார … Read more

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும், இந்த சர்வகட்சிக் கூட்டத்தில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் உட்பட பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி … Read more

கொழும்பு ஹாபர் வியூ ரெசிடன்சீஸ் வீடமைப்புத் திட்ட வீடுகளும் டொலர் வீட்டுத் திட்டத்திற்கு ஒதுக்கப்படும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கான நடுத்தர வர்க்க வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்திட்டத்தின் ஊக்குவிப்பு சர்வதேச மட்டத்தில் .ஆரம்பமானது. . இலங்கையர்கள் அதிகம் வாழும் நாடுகளில் நடைபெறும் சுதந்திர விழாக்கள் மற்றும் மாநாடுகளுக்கு இந்த ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு. பிரசன்ன ரணதுங்க கூறினார். முதற்கட்டமாக, சுதந்திர தினத்துடன் இணைந்து டுபாயில் நடைபெறும் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்த … Read more

கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு – வேலைக்காக ஒன்றுகூடியவர்களால் பதற்ற நிலை

துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம் அளித்துள்ளனர். எனினும் அவ்வாறு எந்தவொரு வேலைக்காகவும் யாரையும் அழைக்கப்படவில்லை என தெரிய வந்த நிலையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள ஜே.ஆர்.ஜெயவர்தன மையத்தில் வேலை தேடுபவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து வன்முறையாக மாறிய நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் அழைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் … Read more

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான 33 நிலக்கரி கப்பல்களில் 10 கப்பல்கள் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவிக்கப்பட்டுள்ளது.  ஜனவரி மாதத்திற்கு திட்டமிடப்பட்ட 7 நிலக்கரி கப்பல்களில் 5 இதுவரை கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திற்கு தேவையான நிலக்கரி, அதனை கொள்வனவு செய்ய தேவையான பணம் மற்றும் மின்வெட்டு இன்றி மின்சாரம் வழங்குவது தொடர்பான கொள்கை மீளாய்வு நேற்று (24.01.2023) இடம்பெற்றிருந்தது.  இதன்போதே மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு இந்த … Read more

இந்திய அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

இந்திய – நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் போட்டியில் 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (24) நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 385 ஓட்டங்கள் பெற்றது. அணித் தலைவர் ரோகித் சர்மா 101 ஓட்டங்களையும் இ ஷுப்மன் கில் 112 ஓட்டங்களையும் பெற்றனர். இதையடுத்து … Read more

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2022 திசெம்பர்

2022 திசெம்பரில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள் பணிகள் நடவடிக்கைகளில் விரிவடைதலையும் தயாரித்தல் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினையும் எடுத்துக்காட்டின. தயாரிப்பு கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், திசெம்பரில் 44.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து தயாரிப்பு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பின்னடைவினை எடுத்துக்காட்டியது. நிரம்பலர் விநியோக நேரம் தவிர, அனைத்து துணைச் சுட்டெண்களிலும் அவதானிக்கப்பட்ட குறைவடைந்த செயலாற்றத்தினால் இப்பின்னடைவு தூண்டப்பட்டிருந்தது. பணிகள் கொ.மு.சுட்டெண்ணானது தொடர்ச்சியாக இரண்டு மாதங்களாக வீழ்ச்சியடைந்ததன் பின்னர் 2022 திசெம்பரில் 51.6 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து வளர்ச்சி எல்லைக்குத் திரும்பியது. … Read more

குவைத்தில் துன்புறுத்தல்களிற்குள்ளான 47 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!

குவைத்தில் வீட்டுப் பணிப் பெண்களாக பணிபுரிந்தபோது பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கியதாகக் கூறப்படும் 47 இலங்கைப் பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.  இன்று (25) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர்கள் வந்தடைந்தனர்.  1,300 இலங்கை பெண்களின் நிலை குறித்த 47 இலங்கை பணிப்பெண்களும் குவைத்தில் பணிபுரியும்போது தமது எஜமானர்களால் பல்வேறு இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகி, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதேவேளை, சுமார் 1,300 இலங்கை பெண்கள் இலங்கைக்கு வரமுடியாமல் குவைத்தில் தங்கியிருப்பதாக அந்நாட்டு இலங்கை … Read more