வவுனியாவில் எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் வர்த்தக சந்தை

சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நேக்கில், வர்த்தக சந்தை , எதிர்வரும் 26, 27 ஆம் திகதிகளில் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 7.30 மணி வரை வவுனியா நகரசபை மைதானத்தில் நடைப்பெறவுள்ளதாக வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமாகாண தொழிற்துறைத் திணைக்களம் ILO LEED+ செயற்றிட்டத்தின் நிதி அனுசரணையில் நடத்தப்படும் இந்த வர்த்தகச் சந்தையில் நெசவு உற்பத்திகள், கைப்பணி , உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள் போன்ற 50 இற்கும் மேற்பட்ட விற்பனைக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. … Read more

வன்னிக் காட்டில் விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்திக்கவிருந்த மகிந்த! வெளியாகியுள்ள தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய மகிந்த ராஜபக்ச நினைக்கவில்லை, சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார் என புதிய ஹெல உறுமயவியன் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மகிந்த விடுதலைப் புலிகளுடன் போர் செய்ய நினைக்கவில்லை. சமாதானப் பேச்சு நடத்தவே இருந்தார். “நான் வன்னிக் காட்டுக்குச் சென்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவருடன் நேருக்கு நேர் பேச்சு நடத்துவேன்” என … Read more

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 ஜனவரி25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தென்கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என … Read more

அடுத்த மாதம் முதல் திருத்தப்படவுள்ள கட்டணங்கள்:வெளியான அறிவிப்பு

கொழும்பு விமானத் தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்படும் விமானப் போக்குவரத்துக் கட்டணத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  இது தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார். கட்டணங்கள் திருத்தப்படவில்லை கொழும்பு விமான தகவல் வலயத்தின் ஊடாகப் பறக்கும் சர்வதேச விமானங்கள் தொடர்பான விமானப் போக்குவரத்துக் கட்டணம், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தினால் அறவிடப்படும்.  குறித்த கட்டணங்கள் 1985 ஆம் ஆண்டு முதல் திருத்தப்படவில்லை என தெரிவித்துள்ளார். … Read more

12 மணிநேர மின்வெட்டு! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பணம் கிடைக்காவிட்டால் மீண்டும் பத்து அல்லது 12 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டால் மக்கள் நிர்க்கதிக்கு ஆளாக நேரிடும் என்றும், மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார். மின் கட்டணம் உயரும் ஜனவரி மாதத்தில் மின்சார உற்பத்திக்காக 38 பில்லியன் … Read more

ரதல்ல வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

நுவரெலியா ரதல்ல என்ற இடத்தில் சமீபத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆகக்கூடிய இழப்பீட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம் பெறாத வகையில் ஏற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி … Read more

அச்சுறுத்தல் இன்றி சகல பிரஜைகளுக்கும் தாம் விரும்பும் இடங்களில் வாழுவதற்கான உரிமை உண்டு

இனம் மதம் பேதம் மற்றும் ஆண், பெண் வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் அச்சுறுத்தல் பீதியின்றி தமது விருப்பத்திற்கு அமைவான இடத்தில் வாழ்வதற்கும் ,வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொள்வதற்கும் சகல பிரஜைகளுக்கு உரிமை இருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் இசந்திப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் திரு மொஹான் சமரநாயக்க மீது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை … Read more

யாழ். மாநகர புதிய மேயராக பதவியேற்ற ஆர்னோல்டிற்கு புதிய சிக்கல்

யாழ் மாநகர புதிய மேயர் ஆர்னோல்டின் நியமனத்திற்கு எதிராக முன்னாள் யாழ் மாநகர மேயர் மணிவண்ணன் தரப்பினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இன்று பிற்கல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆர்னோல்டிற்கு புதிய சிக்கல் உள்ளூராட்சி மன்றங்களுக்கான சுற்றறிக்கையில், இருதடவைகள் வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வெல்ல முடியாமல் பதவியிழந்தவர் மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட முடியாது என மேற்கோள்காட்டி  இவ்வாறு வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.  யாழ். மாநகர சபையின் மேயராக மீண்டும் ஆர்னோல்ட் பதவியேற்றிருக்கும் இந்த சமயத்தில், … Read more

தேர்தல் நடந்தால் பொருட்களின் விலை இரு மடங்கு உயருமாம்! – பயமுறுத்துகின்றது அரசு

உள்ளூராட்சி சபைத் தேர்தல் செலவுக்காகப் புதிதாக பணம் அச்சடிக்க வேண்டி வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அவ்வாறு பணம் அச்சடித்தால் பொருள்களின் விலைகள் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்றும், பணவீக்கம் மேலும் உயரும் என்றும் நிதி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. பணம் இல்லை தேர்தல் செலவுக்காக ஆயிரம் கோடி ரூபாவைத் தேர்தல்கள் ஆணைக்குழு கோருகின்றது. இதற்கும் பணமில்லை என்று அரசு கூறி வருகின்றது. ஆனாலும், 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் இதற்கான … Read more

பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து, சாத்தியமான தீர்வுகளைப் பரிந்துரை செய்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார். பிரோட்லண்ட் நீர்மின் திட்டத்தினால் கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று (23) பிற்பகல் … Read more