75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளைஞர்களின் பங்கேற்புடன் தூய்மையான பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்

பசுமையான இலங்கையை உருவாக்கும் பொறுப்பை இளைஞர்களிடம் கையளிப்பதன் மூலம் 75வது சுதந்திர தினத்துக்கு இணைவாக தூய்மையான பசுமை நகரங்களைக் கட்டியெழுப்பும் வேலைதிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் அபிவிருத்திக்கு இளைஞர்களின் பங்களிப்பை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் எண்ணக் கருவின்படி முன்னெடுக்கப்படும் ‘ தேசிய இளைஞர் தளம்’ வேலைத்திட்டத்தின் கீழ் ,இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் மற்றும் இளைஞர் பாராளுமன்றம் என்பன ஒன்றிணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை … Read more

ஐ.சி.சி T20 அணிக்காக இலங்கையில் இருந்து இருவர்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் 2022 ஆம் ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கான வருடத்தின் ரி20 ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்தின் ரி20 ஆண்கள் அணியில் இலங்கை அணி வீரர் வனிந்து ஹசரங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று மகளிர் ரி20 அணிக்கு இலங்கை வீராங்கனை இனோக்க ரணவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். வருடத்தின் ரி20 ஆண்கள் அணியின் தலைவராக இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய வீரர்கள் மூவரும் இந்த அணிக்காக பெயரிடப்பட்டுள்ளனர். … Read more

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்க்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் 3ஆவது போட்டி

நியூசிலாந்து – இந்திய அணிக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரின் 3ஆவது மற்றும் இறுதி போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையேயான 3 ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2 ஆவது  போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி … Read more

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து)வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று (24) தொடக்கம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரையில் வாகன போக்குவரத்தை ஒரு நிரலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் … Read more

  கோழி,முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது

கோழி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரும் கூட்டு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.  கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்,நேற்று (23) முற்பகல் உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொடவின் தலைமையில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது.இதன் போது இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. இக்கலந்துரையாடலில் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்திக் கைத்தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் … Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாய் அன்பளிப்பு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , திறைசேரிக்கு 03 பில்லியன் ரூபா பெறுமதியான காசோலையை அன்பளிப்புச்செய்துள்ளது. இதற்கான காசோலையை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் நேற்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, மருந்து கொள்வனவு, அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல், நெல் கொள்வனவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் கடந்த வருடம் … Read more

யாழ்ப்பாணத்தில் விவசாயத்துறை அசத்தும் வெளிநாட்டு பெண்

யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech நேற்று விஜயம் மேற்கொண்டார். ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை, நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவரினால் நடாத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பண்ணைக்கு விஜயம் மேற்கொண்ட நெதர்லாந்து தூதுவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தென்னை மற்றும் ஏனைய பயிர்செய்கை செயற்பாடுகள் குறித்து பெருமைப்படுவதாகவும் கூறினார். யுத்தத்தின் பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்களுடைய இன்றைய நிலை குறித்து … Read more

தென்னிலங்கையை பரபரப்பாக்கிய இளம் காதலர்களின் மரணம் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

தங்காலையில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் வரவேற்பு அறைக்கு அருகில் நேற்று முன்தினம் இளம் ஜோடி தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளனர். இந்த இருவரின் சடலங்களையும் நேற்று காலை ஹோட்டல் ஊழியர்கள் அவதானித்துள்ளனர். குறித்த சந்தர்ப்பத்தில் ஹோட்டலில் பல வெளிநாட்டவர்களும் தங்கியிருந்ததாக தங்கல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவயதில் இருந்து இந்த ஹோட்டலில் வளர்ந்த 22 வயது இளைஞனும், அவனது காதலி என்று கூறப்படும் 17 வயது யுவதியமே தூக்கிட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஹோட்டல் ஊழியர் நேற்று முன்தினம் … Read more

கொலன்னாவையில் விசேட அதிரடிப்படை முற்றுகை – போதைப்பொருளுடன் ஒருவர் கைது

துபாயில் தலைமறைவாகி போதைப்பொருள் வலைப்பின்னலை முன்னெடுக்கும் கொலன்னாவையை சேர்ந்த தனுஷ்க என்பவரின் இந்நாட்டின் போதை பொருள் வலையமைப்பை செயல்படுத்தும் தெசான் தரேந்தர அல்லது யக்கட தரிந்து என்பவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படை ,கொத்தட்டுவ  பிரதேசத்தில் நேற்று முன்தினம் (22) மேற்கொண்டு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது இவரிடமிருந்து 11 கிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்ட 5 இலட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரூபாவும் … Read more