வேலன் சுவாமிகள் கைது பொலிஸாரின் வன்மம் நிறைந்த நடவடிக்கை! அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கண்டனம் (Video)
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமியை யாழ். பொலிஸாரின் கைதுக்கு அருட்பணி கந்தையா ஜெகதாஸ் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். இது இலங்கை அரசாங்கத்தின் எதேச்சதிகார நகர்வு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொலிஸாரின் இந்நடவடிக்கை வன்மம் நிறைந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக கூறிக்கொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க உடனடியாக அதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். Source link