நலிவுற்ற குடும்பங்களுக்கான அரசாங்கத்தின் நிவாரணம்

சமுர்த்தி பயனாளிகள் உள்ளிட்ட சமூகத்தில் நலிவுற்ற குடும்பங்களுக்காக அரசாங்கத்தினால் இந்தவருடம் ஜனவரி முதல் வழங்கப்படவுள்ள நிவாரண கொடுப்பனவை மேலும் 5 மாங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ,அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ,இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:இதற்கமைவாக இந்த நிவாரண கொடுப்பனவு மே மாதம் முதல் செப்டம்பர் … Read more

மூடப்படும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் – அமைச்சு அதிரடி நடவடிக்கை

இலங்கையில் QR கோட்டா முறையை புறக்கணித்து எரிபொருள் விநியோகம் செய்த பெட்ரோல் நிலையங்களின் உரிமம் உடனடியாக இரத்து செய்யப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் விநியோகம் செய்யும் போது தேசிய எரிபொருள் அனுமதி QR முறையை பின்பற்றுவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றின் அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்றகூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. QR விநியோக … Read more

நாணயத்தாள்களை அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக  அமைச்சரவை பேச்சாளர் தெரிவிப்பு

சமகால அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைவாக  நாணயத்தாள்களை அச்சிடுவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக  வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் ,அமைச்சரவை  பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (17) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: இந்த சந்தர்ப்பத்தில் எம்மால் கடனை பெற்றுக்கொள்ள முடியாது. வெளிநாடுகளில் பெற்றுக்கொண்ட கடனை திருப்பி செலுத்துவது தொடர்பில் கடன் மறுசீரமைப்புக்கான நடவவடிக்கையை மேற்கொள்ளுமாறு இந்த நாடுகளிடம் நாம் கேட்டுக்கொண்டுள்ளோம். இதனால் மேலும் … Read more

அரச ஊழியர்களின் சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்களுக்கு மாதாந்த சம்பளக் கொடுப்பனவை குறித்த தினத்திலேயே செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பதவிநிலை உத்தியோகத்தர்களின் சம்பளத்தை குறித்த சில தினங்களுக்குப் பின் செலுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை கூட்டத்தில் நேற்று இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். அரச செலவு முகாமைத்துவம் ஜனவரி மாதம் தொடக்கம் எதிர்வரும் ஒரு சில மாதங்கள் அரச செலவுகளை முகாமைத்துவப்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி … Read more

இன்றும் சில இடங்களில் 75 மி.மீ மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது.  2023 ஜனவரி17ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஜனவரி17ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான … Read more

சமுர்த்திப் பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி வீதம் 02 மாதங்களுக்கு வழங்க ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம்

சமுர்த்தி பயனாளர்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் 02 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசியை 02 மாத காலத்திற்கு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, இதற்காக 40,000 மெ.டொ அரிசி தேவைப்பதோடு, அதற்கு அரசாங்கம் 61,600 மெ. தொ. நெல்லைக் கொள்வனவு செய்ய வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களின் ஆதரவுடன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக இந்த … Read more

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆயிரம் ரூபா நாணயங்கள்

இவ்வருடம், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை மத்திய வங்கியினால் ஆயிரம் ரூபா பெறுமதி யான  75 நாணயங்கள் மற்றும் தபால் திணைக்களத்தினால், இரண்டு முத்திரைகள் என்பன வெளியிடப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாக கொழும்பில் குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் தெரிவு செய்யப்பட்ட முப்படை வீரர்களுக்கும், கொழும்பு பிரதேசத்தை மையமாகக் கொண்டு 1996 வீடுகள் நிர்மாணிக்கப்பட உள்ளன என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.    

அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் சம்பளம்! சேவைகள் தொடர்பில் அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாததற்காக பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேச செயலகத்தில் (15) நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அரசு அதிகாரிகள் இழைக்கும் தவறு அமைச்சர் மேலும் கூறியதாவது: பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும். நான் எல்லாவற்றிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறேன். … Read more

சீனாவின் டீசல்:கிளிநொச்சியில் முதற்கட்டமாக விநியோகம்

சீன அரசாங்கம் இலங்கையின் விவசாயத்துறைக்காக வழங்கிய டீசலை விநியோகிக்கும் நடவடிக்கை கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பமாகியுள்ளது. சீன அரசாங்கம் நாட்டின் விவசாயத்துறைக்காக  68 இலட்சம் லீற்றர் டீசலை வழங்கியுள்ளது இதனை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக அறுவடை ஆரம்பமாகி உள்ள கிளிநொச்சி மாவட்டத்திற்கு முதலில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்த எரிபொருளை வழங்குகிறது.. கமநல அபிவிருத்தித் திணைக்களம் விவசாயிகளுக்கு வழங்கியுள்ள வவுச்சர் மூலம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசலை பெற்றுக்கொள்ள … Read more